சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஏடாகூடம் | தாறுமாறு , ஒழுங்கின்மை ; ஏற்றத்தாழ்ச்சியான நடை . |
ஏடாகோடம் | தாறுமாறு , ஒழுங்கின்மை ; ஏற்றத்தாழ்ச்சியான நடை . |
ஏகாயம் | ஏகாசம் , உத்தரியம் , மேலாடை ; மேற்போர்வை . |
ஏகாயனர் | முத்தியின்பொருட்டுத் திருமாலை மட்டுமே வணங்குபவர் , மாத்துவர் . |
ஏகார்க்களம் | ஏர் பூட்ட நாள் பார்க்கை ; தீய நாள் அறிவதற்குறிய சக்கரம் . |
ஏகார்ணவம் | ஊழிப் பெருவெள்ளம் . |
ஏகாரவல்லி | பலா ; பாகல் ; பழுபாகல் . |
ஏகாலத்தி | வழிபாட்டில் இறைவனுக்கு முன் சுற்றும் ஒற்றைச் சுடர் ; விளக்கு . |
ஏகாலத்தியம் | வழிபாட்டில் இறைவனுக்கு முன் சுற்றும் ஒற்றைச் சுடர் ; விளக்கு . |
ஏகாலி | வண்ணான் ; சவர்க்காரம் . |
ஏகாவல்லி | காண்க : ஏகவல்லி . |
ஏகாவலி | காண்க : ஏகவல்லி . |
ஏகான்மவாதம் | பிரமம் ஒன்றைத் தவிர வேறொன்றும் இல்லையென்னும் மதம் . |
ஏகி | கணவனை இழந்து தனித்திருப்பவள் , கைம்பெண் . |
ஏகீபவித்தல் | ஒன்றித்தல் , ஒன்றாகப் பொருந்துதல் சேருதல் ; ஒரே தன்மையாதல் . |
ஏகீபாவம் | ஒருதன்மை ; ஒருமைப் பாவனை ; ஒன்றுபடுகை கூடியிருத்தல் . |
ஏகீயன் | ஒருவன் ; தோழன் . |
ஏகுதல் | செல்லுதல் ; போகுதல் ; நடத்தல் ; கழலுதல் . |
ஏகை | உமை ; வயிரக்குற்றங்களுள் ஒன்று . |
ஏகோதிட்டம் | இறத்தவர்க்குப் பதினோராம் நாளில் செய்யும் சிராத்தச் சடங்கு . |
ஏகோபித்தல் | ஒன்றுபடுதல் , ஒன்றாதல் , ஒருமனப்படுதல் ; சேர்தல் . |
ஏங்கல் | அழுதல் ; மயிற்குரல் ; யாழ்நரம்பின் ஓசை ; ஆரவாரிக்கை ; குழந்தைகளுக்கு வரும் காசநோய் . |
ஏங்கிப்போதல் | ஏக்கம் பிடித்தல் . |
ஏங்குதல் | ஒலித்தல் ; அழுதல் ; இரங்குதல் ; திகைத்தல் ; மனம் வாடுதல் ; அஞ்சுதல் ; கவலைப்படுதல் : இளைத்தல் . |
ஏச்சு | வைவு ; இகழ்ச்சி , பழிப்பு . |
ஏச்சுரை | பழிப்புரை . |
ஏச்சோறு | தண்டச்சோறு . |
ஏசம் | வெண்கலம் |
ஏசல் | இகழ்தல் ; வைதல் ; பழிமொழி ; பழிச்சொல் ; ஒருவரையொருவர் பரிகாசம் செய்து கொள்ளும் பாட்டுவகை . |
ஏசறவு | விருப்பம் ; அன்பு ; புகழ்மொழி . |
ஏசறுதல் | வருந்துதல் ; ஆசைகொள்ளுதல் ; பழித்தல் . |
ஏசாதவர் | இகழ்ச்சி செய்யாதவர் ; குற்றம் இல்லாதவர் ; தேவர் . |
ஏசிடாவம் | அதிமதுரம் . |
ஏசு | இகழ்ச்சி ; குற்றம் ; இயேசு . |
ஏசுதல் | இகழ்தல் , வைதல் , செலுத்துதல் . |
ஏட்சி | உதயம் ; திடம் . |
ஏட்டிக்குப்போட்டி | எதிருக்கெதிர் ; ஆமென்பதற்கு அன்றெனல் ; விதண்டாவாதம் . |
ஏட்டுச்சுரைக்காய் | உலகவனுபவம் அற்ற கல்வி அறிவு ; வெறும் நூலறிவு மட்டும் உள்ளவர் . |
ஏட்டுப்படிப்பு | உலகவனுபவம் இல்லாத கல்வி . |
ஏட்டுப்பொறி | ஓலைப் பத்திரத்தில் பதித்த முத்திரை . |
ஏட்டை | ஆசை , விருப்பம் ; வறுமை ; இளைப்பு , தளர்வு ; ஒருசார் விலங்கேற்றின் பெயர் . |
ஏடகணி | ஓலையீர்க்கு . |
ஏடகம் | பூவிதழ் ; பூ ; தென்னைமரம் ; பனைமரம் ; பலகை ; ஆட்டுக்கடா ; ஒருவகைத் துகில் ; வையையாற்றில் ஏடு கரையேறிய ஒரு சிவத்தலம் ; திருவேடகம் . |
ஏடணாத்திரயம் | மூவகையான விருப்பம் ; உலகம் , பொன் , புதல்வன் என்னும் மூன்றன் மேல் கொள்ளும் பற்று . |
ஏடணை | ஆசை , விருப்பம் ; பற்று . |
ஏடமூகன் | ஆற்றலற்றவன் , கோழை . |
ஏடல் | கருத்து , எண்ணம் ; மனம் ; விருப்பம் . |
ஏடலகம் | அதிமதுரம் ; குன்றி . |
ஏடன் | தோழன் ; தொழும்பன் ; செவிடன் . |
ஏடா | தோழன் முன்னிலை ; தாழ்ந்தவரை விளிக்கும் சொல் . |
ஏடாகுடம் | தாறுமாறு , ஒழுங்கின்மை ; ஏற்றத்தாழ்ச்சியான நடை . |
ஏகாகம் | இறந்தவர்பொருட்டுப் பதினோராம் நாளில் செய்யும் சடங்கு . |
ஏகாகாரம் | மாறாத உருவம் ; ஒருபடி ; பொன் . |
ஏகாகி | தனியாயிருப்போன் . |
ஏகாங்கம் | ஒரே உறுப்பு ; தனிமை ; சந்தனம் . |
ஏகாங்கி | தனிமையாயிருப்பவன் ; குடும்பமில்லாதவன் ; பிரமசாரி ; திருமால் அடியாருள் ஒரு வகையார் ; சன்னியாசி . |
ஏகாசம் | மேலாடை ; போர்வை . |
ஏகாட்சரி | பிரணவம் ; சத்தி ; ஒருவகைச்செய்யுள் ; ஓரெழுத்தாலாய மந்திரம் . |
ஏகாட்சி | ஒற்றைக் கண்ணன் ; ஒற்றைக் கண்ணி ; காகம் ; சுக்கிரன் . |
ஏகாடம் | ஏளனம் , பரிகாசம் . |
ஏகாண்டம் | வானம் ; முழுக் கூறு . |
ஏகாதசம் | பதினொன்று ; ஒருவர் பிறந்த இலக்கினத்திற்குப் பதினோராம் இடம் . |
ஏகாதசர் | பதினோர் உருத்திரர் ; பதினோராம் இடத்தில் உள்ள கோள் . |
ஏகாதசருத்திரர் | உருத்திரர் பதினொருவர் : மாதேவன் , சிவன் , உருத்திரன் , சங்கரன் , நீலலோகிதன் , ஈசானன் , விசயன் , வீமதேவன் , பவோற்பவன் , கபாலி , சௌமியன் . |
ஏகாதசி | உவாநாளுக்குப்பின் பதினோராம் நாள் . |
ஏகாதசிவிரதம் | வைணவ சமய நோன்புகளுள் ஒன்று ; ஏகாதசி நாளில் இருக்கும் பட்டினி நோன்பு . |
ஏகாதிபத்தியம் | தனியரசாட்சி . |
ஏகாதிபதி | தனியாட்சி புரிவோன் , பேரரசன் . |
ஏகாந்தசேவை | தனிச் சேவை ; சில திருவிழாக்களிலே இரவில் தனியாக நிகழும் கடவுள் வழிபாடு . |
ஏகாந்தநித்திரை | இரவில் கவலையில்லாத தூக்கம் , அமைதியான உறக்கம் . |
ஏகாந்தம் | தனிமை ; தனியிடம் ; ஒருவரும் இல்லாத இடம் ; கமுக்கம் , இரகசியம் ; உறுதி ; நாடிய ஒரே பொருள் . |
ஏகாந்தவாதி | ஆருகதரல்லாத சமயி . |
ஏகாந்தவாழ்வு | தனி வாழ்க்கை ; துறவியின் வாழ்க்கை . |
ஏகாந்தன் | அந்தரங்க பக்தன் ; அணுக்கத்தொண்டன் . |
ஏகாம்பரன் | ஏகம்பன் , சிவன் ; காஞ்சிபுரத்தில் திருக்கோயில் கொண்டுள்ள சிவபெருமான் . |
![]() |
![]() |
![]() |