ஏற்றமரம் முதல் - ஏறுழவன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஏறுகோட்பறை முல்லைநிலப் பறை , முல்லைநில மக்கள் ஏறுதழுவும் பொருட்டு அடிக்கும் ஒரு வகைப் பறை .
ஏறுகோள் ஒரு பெண்ணை மணஞ்செய்தற் பொருட்டு ஏறுதழுவுதல் ; காண்க : ஏறுகோட்பறை .
ஏறுசலாகை கைம்மரங் கோக்குஞ் சட்டம் .
ஏறுசெடி அடர்ந்த செடி .
ஏறுசேவகன் உயர்ந்த வீரன் .
ஏறுண்ணுதல் அறுக்கப்படுதல் ; அம்பு தைக்கப்படுதல் ; தள்ளப்படுதல் .
ஏறுதல் உயர்தல் , மேலே செல்லுதல் ; உட்செல்லுதல் ; முற்றுப்பெறுதல் ; வளர்தல் ; மிகுதல் ; பரவுதல் ; ஆவேசித்தல் ; குடியேறுதல் ; ஏற்றிவைக்கப்படுதல் ; கடத்தல் .
ஏறுதழுவுதல் ஏறு தழுவுதல் ; ஆயர்குலக் காளையர் மணமுடிக்கும் பொருட்டு எருதைத் தழுவிப் பிடித்தல் .
ஏறுதுறை காண்க : ஏற்றுதுறை .
ஏறுநெற்றி அகன்ற நெற்றி .
ஏறுபடி அதிகப்படி ; தாழ்வாரம் .
ஏறுபெட்டி மரமேறிகள் அரையிற் கட்டிக் கொள்ளும் கருவிப்பெட்டி .
ஏறுபொழுது முற்பகல் , காலைநேரம் .
ஏறுமாறு தாறுமாறு , குழப்பம் .
ஏறுமிராசி சூரியன் உத்தராயணத்தில் சஞ்சரிப்பதற்கு இடமாய் மகரமுதல் மிதுனம் வரையுமுள்ள ஆறு இராசிகள் .
ஏறுமுகஉருத்திராட்சகம் உருத்திராட்ச மணிகளின் முகங்கள் அதிகம் பெறுமாறு கோக்கப்படும் மாலை .
ஏறுமுகக்கண்டிகை உருத்திராட்ச மணிகளின் முகங்கள் அதிகம் பெறுமாறு கோக்கப்படும் மாலை .
ஏறுமுகம் வளரும் நிலை .
ஏறுவட்டம் நட்சத்திரம் முதலியன நாழிகை ஏறும் முறை ; பங்கின் அளவுக்கு அதிகமான நிலம் முதலியவை .
ஏறுவாசி ஏற்றம் , உயர்ந்துசெல் நிலை ; உத்தரம் முதலியன சுவரின் உட்செல்வதற்கான அளவு .
ஏறுவால் நீண்ட வால் .
ஏறுவிடுதல் ஆயர் தம் மகளை மணம் புரியத்தக்கோர் தழுவிப் பிடிக்கும் பொருட்டு எருதுகளை ஓடவிடுதல் .
ஏறுவெயில் காலை வெயில் , முற்பகல் வெயில் .
ஏறுழவன் படைவீரன் .
ஏற்றுத்தொழில் யானை முதலியவற்றை நடத்துந்தொழில் .
ஏற்றுதல் தூக்குதல் ; மிகுதிப்படுத்துதல் ; சுமத்துதல் ; ஏறச்செய்தல் ; அடுக்குதல் ; மேம்படுத்துதல் ; குடியேற்றுதல் ; ஏற்படுத்துதல் ; உட்செலுத்துதல் ; உயர்த்துதல் ; ஏற்றுமதி செய்தல் ; நினைத்தல் ; ஒருங்குமுடித்தல் ; சுடர் கொளுத்துதல் .
ஏற்றுதுறை துறைமுகம் , கப்பலில் சரக்கு ஏற்றும் துறை .
ஏற்றுப்பனை காண்க : ஏற்றைப்பனை .
ஏற்றுமதி கப்பலிற் பண்டமேற்றுகை ; வெளிநாட்டுக்குச் சரக்கை அனுப்புதல் ; வெளிநாட்டுக்கு அனுப்பும் சரக்கு .
ஏற்றுமுதல் தோணி முதலியவற்றில் ஏற்றப்படும் சரக்கு .
ஏற்றுவாகனன் காளையை ஊர்தியாகவுடைய சிவன் .
ஏற்றூண் இரந்துண்ணுமுணவு , பிச்சையுணவு .
ஏற்றெழுதல் மயக்கம் தீர்தல் ; துயிலினின்றெழுதல் ; சோம்பல்விட்டெழுதல் ; ஓங்கி எழும்புதல் ; மேற்செல்லுதல் .
ஏற்றை விலங்கின் ஆண் , ஆற்றலோடு கூடிய ஆண்பால் விலங்கு ; அரியேறு ; ஆண் கரடி .
ஏற்றைப்பனை ஆண்பனை .
ஏற அதிகமாக , மிகுதியாக ; உயர ; முழுவதும் ; முற்பட .
ஏறக்கட்டுதல் உயரக்கட்டுதல் ; பலப்படுத்துதல் ; விலையேறுவதற்காகச் சரக்கை விற்காமல் வைத்தல் ; மழை முதலியன பெய்யாதிருத்தல் ; இறைந்த தவசம் முதலியவற்றைக் கூட்டிச் சேர்த்தல் ; அடியோடு நிறுத்துதல் .
ஏறக்குறைய ஏறத்தாழ , முன்பின்னாக , சுமார் , முன்பின் .
ஏறங்கோட்பறை காணக ; ஏறுகோட்பறை .
ஏறங்கோள் காண்க : ஏறுகோட்பறை .
ஏறடுதல் மேல்வைத்தல் ; மேற்கொள்ளுதல் ; ஏற்றுக்கொள்ளுதல் .
ஏறத்தாழ காணக ; ஏறக்குறைய .
ஏறப்பறத்தல் உயரப் பறத்தல் ; ஏலாதவற்றைச் செய்ய முயலுதல் .
ஏறப்போதல் குறித்துச் செல்லுதல் , குறித்துப் போதல் .
ஏறவாங்குதல் முழுவது விலைக்குப் பெறுதல் ; விலகியிருத்தல் ; நயமாக வாங்குதல் ; சுளுக்குதல் .
ஏறவிடுதல் மேலே ஏறும்படி விடுதல் ; மரக்கலத்தைக் கரைக்குத் தொலைவாக விடுதல் ; மேற்போகவிடுதல் .
ஏறவிறங்கப் பார்த்தல் தலைமுதல் கால்வரை பார்த்தல் , மேலும் கீழும் பார்த்தல் .
ஏறன் சிவன் .
ஏறாங்கடை ஒவ்வாச் செயல் .
ஏறாங்கடைசி அறமுடிவு .
ஏறாண்முல்லை ஆண்மை மிகுந்த வீரக்குடியின் ஒழுக்கத்தைப் புகழும் புறத்துறை .
ஏறாந்தலை ஏரியில் நீர்ப்பிடி இறுதி .
ஏறாவழக்கு அறாவழக்கு , அடா வழக்கு .
ஏறாவேணி கோக்காலி , ஒருவகைப் பரண் .
ஏறாளர் படைவீரர் .
ஏறான் பள்ளிக்கூடத்துக்கு முதன்முதல் வருபவன் .
ஏறிட்டுப்பார்த்தல் நிமிரிந்து பார்த்தல் ; உற்று நோக்கல் , கவனித்தல் .
ஏறிடுதல் ஏற்றுதல் ; நாணேற்றுதல் ; உயர்த்துதல் ; தூக்குதல் ; புகப்பண்ணுதல் .
ஏறியவீரி சவ்வீர பாடாணம் .
ஏறு எருது ; இடபராசி ; எருமைக்கடா ; சங்கு ; அசுவினி நட்சத்திரம் ; விலங்கின் ஆண் ; உயர்ச்சி ; ஆண் சுறா ; ஆண்சங்கு ; பனை முதலிய மரத்தின் ஆண் ; கவரி ; பன்றி , மான் இவற்றின் ஆண் ; விலங்கேற்றின் பொது ; நந்திதேவர் ; தழும்பு .
ஏறு (வி) இவர் ; எறி ; அடி ; அழி ; வாகனமேறு ; கப்பலேறு ; நஞ்சேறு ; உயர் ; தொகை முதலியன அதிகரி .
ஏறுக்குமாறு ஏட்டிக்குப்போட்டி , தாறுமாறு .
ஏறுகடை கடைசி முடிவு .
ஏறுகுதிரை ஏறுங்குதிரை , சவாரிக்குதிரை .
ஏற்றமரம் துலா மரம் .
ஏற்றரவு மிகக் கிட்டின காலம் ; முதல் .
ஏற்றல் இசைவாதல் ; இணங்கல் ; ஏற்றுதல் ; இரத்தல் ; எதிர்த்தல் ; எதிர்த்துப் போர் செய்தல் ; அடுக்கல் ; வாங்குதல் ; ஏந்தல் ; நடத்தல் ; பெருந்தச்செய்தல் .
ஏற்றவாறு காண்க : ஏற்றபடி .
ஏற்றார் பகைவர் .
ஏற்றியல் ஏறுதலின் இயல்பு ; இடபராசி .
ஏற்றியிறக்குதல் கண்ணூறு கழிக்கும் சடங்கு நிகழ்த்துகை .
எற்றிழிவு உயர்வுதாழ்வு ; பெருமை சிறுமை ; மேடுபள்ளம் .
ஏற்று மரத்தினாற் செய்த மேடை .
ஏற்று (வி) எழும்பு ; உணர்த்து ; பாரமேற்று ; உள்ளேற்று ; கற்பி ; புகழ் .
ஏற்றுக்கொள்ளுதல் ஒப்புக்கொள்ளுதல் ; உடன்படுதல் , அங்கீகரித்தல் ; மேற்கொள்ளுதல் .