சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஓதம் | ஈரம் ; வெள்ளம் ; நீர்ப்பெருக்கு ; கடல் அலை ; ஒலி ; பெருமை ; அண்டவாதநோய் ; சோறு . |
ஓதல் | ஓதுதல் ; படித்தல் ; சொல்லல் ; கல்வி பயிலுதல் ; போதித்தல் ; மந்திரஞ் செபித்தல் ; ஒழிதல் . |
ஓதவனம் | கடல் . |
ஓதளை | காசுக்கட்டி , காவிக்கட்டி . |
ஓதன்மை | ஓதல் தன்மை ; பாடல் . |
ஓதனம் | உண்டி ; சோறு ; பெருமை ; போர் . |
ஓதா | வேள்வி செய்யும் ஆசிரியருள் ஒருவன் . |
ஓதி | அறிவு ; கல்வி ; ஓதுபவன் ; ஓந்தி ; செறிவு ; பெண்மயிர் ; நெருங்கித் தாக்குகை ; அன்னம் ; |
ஓதிஞானம் | அவதி ஞானம் ; மெய்யறிவு . |
ஓதிமம் | அன்னம் ; கவரிமான் ; மலை ; புளியமரம் . |
ஓதிமமுயர்த்தோன் | அன்னக்கொடியுடைய பிரமன் . |
ஓதிமவாகனன் | அன்னத்தை ஊர்தியாகவுடைய பிரமன் . |
ஓதிமவிளக்கு | அன்னப் பறவை வடிவாகச் செய்யப்பட்ட விளக்கு . |
ஓதிமன் | காண்க : ஓதிமவாகனன் . |
ஓதியிடுதல் | திருமணம் முதலியவற்றில் மொய்யிடுதல் , திருமணம் முதலியவற்றில் தரும் அன்பளிப்பு . |
ஓட்டையுடைசல் | சிதைந்த பண்டங்கள் . |
ஓட்டைவாயன் | உளறுவாயன் ; மறையினை வெளியிடுபவன் . |
ஓட | உவமவுருபு . |
ஓடக்காரன் | ஓடமோட்டி ; பாய்பின்னும் இனத்தான் . |
ஓடக்கோல் | படகுதள்ளுங் கழி . |
ஓடதி | மருந்து மூலிகை ; மருந்துச் செடி ; ஆண்டில் ஒருமுறை காய்த்து அழியும் செடி . |
ஓடதிநாதன் | சந்திரன் . |
ஓடம் | தெப்பம் ; படகு ; மிதவை ; நெசவுநாடா ; ஓடப்பாட்டு ; செங்கருங்காலி ; மகநாள் . |
ஓடல் | ஓடுதல் ; குலைதல் ; கெடுதல் ; ஒரு மரம் ; ஆமெனல் . |
ஓடவிடுதல் | புடமிடுதல் . |
ஓடவைத்தல் | புடமிடுதல் ; உறுதிப்படுத்தல் . |
ஓடன் | ஆமை . |
ஓடாணி | அணிகலக் கடைபூட்டாணி . |
ஓடாவி | மரக்கலம் செய்வோன் ; தச்சன் ; ஓவியன் . |
ஓடி | ஒருவகை நிலம் ; வனநெல் . |
ஓடிகை | வனநெல் , காட்டில் விளையும் ஒருவகை நெல் . |
ஓடித்திரிதல் | அலைதல் ; பெருமுயற்சி செய்தல் . |
ஓடிப்போதல் | விட்டு நீங்குதல் ; ஓட்டமெடுத்தல் . |
ஓடியம் | பரிகாசம் ; சபைக்குத் தகாத பேச்சு . |
ஓடியவோடம் | கிளிஞ்சல் . |
ஓடியாடிப்பார்த்தல் | பெருமுயற்சி செய்தல் . |
ஓடியாடுதல் | ஓட்டமும் ஆட்டமுமாயிருத்தல் . |
ஓடியுறைதல் | படிப்படியாய் இறுகுதல் . |
ஓடிவிறைத்தல் | உடல் முழுவதும் விறைத்தல் . |
ஓடிவெளித்தல் | வெளிவாங்குதல் ; நன்கு வெளிப்படுதல் . |
ஓடு | ஆமை முதலியவற்றின் ஓடு ; சிப்பி ; தட்டோடு வேயும் ஓடு ; செங்கல் ; உடைந்த பானையோடு ; மண்டையோடு ; இரப்போர் கலம் ; மூன்றனுருபு . |
ஓடுகரப்பான் | கரப்பான்வகை . |
ஓடுகால் | நீரோடுங் கால்வாய் . |
ஓடுகாலி | வீட்டில் தங்காத பெண் . |
ஓடுதல் | ஓட்டமாய்ச் செல்லுதல் ; செல்லுதல் ; நீர் முதலியன ஓடுதல் ; மிகுதியாதல் ; மனம்பற்றுதல் ; நீளுதல் ; வருந்துதல் ; நேரிடுதல் ; பிறக்கிடுதல் ; கழலுதல் ; பொருந்துதல் ; எண்ணஞ்செல்லுதல் ; பரத்தல் ; மதிப்பிற்குரியதாதல் ; தீர்மானிக்கப்படுதல் . |
ஓடுதாவடி | அவசரங்களில் நேரும் குழப்பம் . |
ஓடுதிருப்புதல் | ஓடுமாற்றிப் புதுப்பித்தல் . |
ஓடுபடம் | இடுதிரை . |
ஓடுபந்தல் | நடைப்பந்தல் . |
ஓடும் | ஓர் அசைச்சொல் . |
ஓடுவாயு | வாதநோய்வகை . |
ஓடுவிப்புருதிக்கட்டி | புரையோடும் புண்வகை அரித்தரித்துச் செல்லும் புண் . |
ஓடை | நீரோடை ; குளம் ; அகழி ; மலைவழி ; நெற்றிப்பட்டம் ; யானையின் நெற்றிப் பட்டம் ; சந்தனம் வைக்கும் மடல் ; ஒருவகைப் படர்க்கொடி ; கிலுகிலுப்பைச் செடி ; உலவை மரம் ; குடைவேலமரம் . |
ஓணப்பிரான் | ஓணநாளுக்குரிய திருமால் . |
ஓணம் | ஆறு ; இருபத்திரண்டாம் நட்சத்திரமான திருவோண நாள் ; ஒரு விழா . |
ஓணான் | ஓர் ஊரும் உயிரி ; ஓந்தி . |
ஓணான்குத்தி | ஒருவகை இராசாளி . |
ஓத்தி | காண்க : ஓந்தி . |
ஓட்டைமனம் | ஒன்றும் தாங்காத மனம் ; இள நெஞ்சு . |
ஓத்திரம் | ஓமத்திற்குரிய பொருள் . |
ஓத்திரி | வேள்விசெய்வோன் . |
ஓத்தின்சாலை | வேதம் கற்பிக்கும் இடம் . |
ஓத்து | ஓதுகை , ஓதப்படுவது ; வேதம் ; ஓரினப் பொருளை ஒருவழி வைத்திருக்கும் இயல் , நூற்பிரிவு ; விதி . |
ஓத்துமுறை வைப்பு | இயல் முதலியவற்றை முறைப்படி அமைத்தலாகிய உத்திவகை . |
ஓத்துரைப்போன் | வேதமோதுவோன் ; உபாத்தியாயன் . |
ஓதக்கால் | பெருங்கால் , ஆனைக்கால் . |
ஓதப்புரோதம் | நெசவின் நெட்டிழை , குறுக்கிழைகள் . |
ஓட்டுமுத்து | சிப்பியில் ஒட்டிய முத்து . |
ஓட்டெடுத்தல் | விரைந்தோடுதல் . |
ஓட்டெழுத்து | தலையெழுத்து . |
ஓட்டை | சில்லி ; சிதைவு ; துளை ; ஓடுப்பொருளை உணர்த்தவரும் மூன்றாம் வேற்றுமையுருபு ; உடனொத்த . |
ஓட்டைக்கை | பொருள் தங்காத கை . |
ஓட்டைச்செவி | கேள்வி பற்றாத செவி . |
ஓட்டைநெஞ்சு | அறைபோன மனம் , வெறுமை மனம் . |
ஓட்டைப்பல் | சிதைவுற்ற பல் , மூளிப் பல் . |
![]() |
![]() |
![]() |