ஓதியிறைத்தல் முதல் - ஓரகத்தன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஓமம்வளர்த்தல் வேள்வி செய்வதற்காகத் தீ வளர்த்தல் ; வேள்வி செய்தல் .
ஓமமண்டபம் வேள்விச்சாலை .
ஓமல் ஊர்ப்பேச்சு ; வசைப்பேச்சு ; அலர் எங்கும் பரவுகை .
ஓமலிப்பு ஊர்ப்பேச்சு ; வசைப்பேச்சு ; அலர் எங்கும் பரவுகை .
ஓமவல்லி கருப்பூரவல்லிப் பூண்டு .
ஓமவள்ளி கருப்பூரவல்லிப் பூண்டு .
ஓமறத்தல் ஒழிவறுதல் .
ஓமாக்கினி வேள்வித் தீ .
ஓமாலிகை நறும்புனலில் இடும் மணப்பொருள்கள் ; இலவங்கம் , பச்சிலை , கச்சோலம் , ஏலம் , நாகணம் , கோட்டம் , நாகம் , மதாவரிசி , தக்கோலம் , நன்னாரி , வெண்கோட்டம் , கத்தூரி , வேரி , இலாமிச்சை , கண்டில் , வெண்ணெய் , கடு , நெல்லி , தான்றி , துத்தம் , வண்ணக் கச்சோலம் , அரேணுகம் , மாஞ்சி , சயிலேகம் , புழுகு , புன்னை , நறுந்தாது , புலியுகிர் , சரளம் , தமாலம் , வகுளம் , பதுமுகம் , கொடிவேலி , நுண்ணேலம் .
ஓமான் காண்க : ஓந்தி
ஓமி வேள்வி செய்கிறவன் ; தீ ; நீர் ; நெய் ;
ஓமிடி கேடு , அழிவு , துன்பம் .
ஓமிடிதல் கேடுறுதல் , அழிதல் .
ஓமித்தல் ஓமஞ்செய்தல் ; வேள்வி செய்தல் .
ஓமியம் ஓமம் , வேள்வி .
ஓமுடிதல் காண்க : ஓமிடிதல் .
ஓமை ஒரு பாலைநிலத்து மரம் ; உகாமரம் ; மாமரம் .
ஓய் ஒரு விளியிடைச்சொல் ; ஒருமையிலே வரும் ஒரு விளியுருபு ; ஒரு விளிக்குறிப்பு .
ஓய்ச்சல் ஓய்வு ; தளர்ச்சி .
ஓய்ச்சலொழிவில்லாமை சிறிதும் ஓய்வில்லாமை .
ஓய்தல் தளர்தல் ; முடிதல் ; முற்றுந் தேய்தல் ; முன்னிலை சுருங்கல் ; உள்ளதன் நுணுக்கம் ; மாறுதல் ; இளைப்பாறுதல் ; அழிதல் .
ஓய்ந்திருத்தல் ஆறியிருத்தல் ; வேலையொழிந்திருத்தல் ; சோம்பியிருத்தல் .
ஓய்வு ஒழிவு ; தளர்வு ; முடிவு ; சாதல் .
ஓய்வுகரை அளவு முடிவு ; ஓய்வு எல்லை .
ஓர் ஒன்று ; ஓர் அசைச்சொல் .
ஓர் (வி) ஆராய் ; தெளி .
ஓர்க்கோலை அம்பர் , ஒரு மணப்பண்டம் .
ஓர்கட்புள் ஒருகண் பார்வையுடைய காகம் .
ஓர்குடி மணாளன் ஓர்குடியிற் பெண் கொண்டோன் , ஓரகத்தன் , சகலன் .
ஓர்குடியிற்கொண்டோன் ஓர்குடியிற் பெண் கொண்டோன் , ஓரகத்தன் , சகலன் .
ஓர்குண்டலன் ஒரு காதில் குண்டலமணிந்த பலராமன் .
ஓர்ச்சி ஆராய்ச்சி ; உணர்ச்சி ; அறிவு .
ஓர்சல் ஓரிசு ; தீர்மானம் ; சமாதானம் .
ஓர்த்தல் ஆராய்தல் ; தெரிந்தெடுத்தல் ; நினைத்தல் ; கூர்ந்து கேட்டல் .
ஓர்தல் ஆராய்தல் ; எண்ணுதல் ; உணர்தல் ; அறிதல் ; தெளிதல் .
ஓர்ப்படி கணவனுடன் பிறந்தானின் மனைவி .
ஓர்ப்படியாள் கணவனுடன் பிறந்தானின் மனைவி .
ஓர்ப்பு கருமமுடிக்குந் துணிவு ; பொறுமை ; ஆடுஉக் குணம் நான்கனுள் ஒன்று ; துணிவு ; நினைவு ; தெளிவு .
ஓர்பு ஆராய்கை ; எண்ணுகை , சிந்திக்கை .
ஓர்மம் மனத்திட்பம் .
ஓர்மித்தல் மனந்திடப்படுதல் .
ஓர்மை ஒருமை ; ஒற்றுமை ; துணிவு ; நினைவு ; ஆடம்பரம் .
ஓர்வம் ஒருபாற் சார்கை .
ஓர்வு காண்க : ஓர்பு .
ஓரக்கண்ணன் சாய்ந்த பார்வையுடையவன் ; ஒருதலைப் பட்சமாய் நடப்பவன் .
ஓரக்காரன் சாய்ந்த பார்வையுடையவன் ; ஒருதலைப் பட்சமாய் நடப்பவன் .
ஓரகத்தன் மனைவியுடன் பிறந்தாள் கணவன் , சகலன் .
ஓதியிறைத்தல் மந்திரநீர் தெளித்தல் .
ஓதியுடைத்தல் மந்திரித்துத் தேங்காய் உடைத்தல் .
ஓதுதல் படித்தல் ; சொல்லுதல் ; கற்பித்தல் ; இரகயசியமாய்ப் போதித்தல் ; செபஞ்செய்தல் ; மந்திரம் உச்சரித்தல் ; பாடுதல் ; தோடம் நீங்குவதற்காக அன்னம் முதலியவற்றிலே மந்திரஞ்சொல்லி உருவேற்றுதல் .
ஓதுவார் கோயிலில் தேவாரம் முதலிய அருட்பாக்கள் பாடுவோர் ; வேதசாத்திரம் படிப்போர் .
ஓதுவார்க்குணவு கற்பவர்க்கு உணவிடுதல் , முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்று .
ஓதுவான் ஆசான் ; படிப்பவன் ; மாணாக்கன் ; திருப்பாட்டுப் பாடுவோன் .
ஓதுவித்தல் படிப்பித்தல் ; வேதசாத்திரம் கற்பித்தல் .
ஓதை ஓசை ; பேரொலி , ஆரவாரம் ; எழுத்தொலி ; மலை ; காற்று ; மதில் ; மதிலின்மேல் வழி .
ஓதைவாரி சிறகு ; வீட்டின் வரிசை ; ஒலியுள்ள கடல் .
ஓந்தி ஓணான் .
ஓநாய் கோநாய் , ஒருவகை நாய் .
ஓப்படியாள் காண்க : ஓர்ப்படியாள் .
ஓப்புதல் ஓட்டுதல் ; துரத்துதல் ; நீக்குதல் ; உயரவெடுத்தல் .
ஓபாதி கூறு , அம்சம் ; அவித்தை .
ஓபு கதவு .
ஓம் ஆமென்னும் உடன்பாட்டை உணர்த்தும் ஓர் இடைச்சொல் ; தன்மைப் பன்மை விகுதி ; பிரணவம் .
ஓம்படுத்தல் பாதுகாக்குமாறு சேர்த்தல் ; பரிகரித்தல் ; உறுதிகூறல் .
ஓம்படுதல் உடன்படுதல் .
ஓம்படை காவல் , பாதுகாப்பு ; பாதுகாக்குமிடம் ; கையடை ; போதிக்குமிடம் ; கழுவாய் ; பரிகாரம் ; மறவாமை .
ஓம்படைக்கிளவி பெரியயோர் கூறும் அறிவுரை ; தலைவியைப் பாதுகாத்துக்கொள் எனத் தலைவற்குத் தோழி கூறும் கூற்று .
ஓம்புதல் காப்பாற்றுதல் , பாதுகாத்தல் , பேணுதல் , வளர்த்தல் ; தீங்கு வாராமற் காத்தல் ; போற்றுதல் ; உபசரித்தல் ; சீர்தூக்குதல் ; பரிகரித்தல் ; தவிர்த்தல் ; விலக்கல் ; நீக்குதல் ; உண்டாக்குதல் .
ஓமகுண்டம் வேள்விக்குழி .
ஓமசாந்தி நெருப்பு வளர்த்துச் சாந்தி பண்ணுகை .
ஓமசாலை வேள்விச்சாலை .
ஓமத்திரவியம் வேள்விக்குரிய துணைப்பொருள் , ஓமம் செய்யும் பொருள் .
ஓமத்திராவகம் ஓமச்சத்துக் கலந்த நீர் .
ஓமப்பொடி ஓமம் செய்த சாம்பல் ; திருநீறு ; ஓமமிட்ட ஒருவகைத் தின்பண்டம் ; ஓம மருந்து .
ஓமம் வேள்விவகை ; ஒரு மருந்துச் சரக்கு ; அப்பிரகம் .