சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஓலைக்கிளிஞ்சல் | சங்குவகை ; கிளிஞ்சல்வகை ; |
ஓலைக்குடை | ஓலையால் மழை வெயில் தாங்க முடையப்படும் கூடு . |
ஓலைக்கூடை | ஓலையால் மழை வெயில் தாங்க முடையப்படும் கூடு . |
ஓலைக்கோள் | கடிதப் போக்குவரத்து . |
ஓலைச்சுருள் | ஓலைக் கடிதம் . |
ஓலைச்சுவடி | ஓலையால் அமைந்த நூல் ; ஒரு மீன்வகை . |
ஓலைத்தூக்கு | சீட்டுக்கவி . |
ஓலைதீட்டுதல் | ஓலையில் எழுதுதல் . |
ஓலைதீட்டும்படை | எழுத்தாணி . |
ஓலைநாயகம் | சோழருடைய தலைமைக்காரிய நிருவாகி . |
ஓலைநாயகன் | சோழருடைய தலைமைக்காரிய நிருவாகி . |
ஓலைப்பாசுரம் | கடிதச் செய்தி ; சீட்டுக்கவி . |
ஓலைப்பாயிரம் | கடிதச் செய்தி ; சீட்டுக்கவி . |
ஓலைப்புறம் | கட்டளை . |
ஓலைப்பூ | தாழம்பூ . |
ஓலைபோக்குதல் | ஓலையில் செய்தி எழுதி அனுப்புதல் . |
ஓலைமுகப்பாசுரம் | கடிதத் தொடக்கத்தில் எழுதும் வக்கணை . |
ஓலைமுத்திரை | ஓலை முகப்பில் இடும் முத்திரை . |
ஓரசைச்சீர் | ஓர் அசையே சீர்நிலைபெற்று வருகை , தனித்து நேரசையோ நிரையசையோ சீர்நிலை பெறல் , அசைச்சீர் . |
ஓரட்டும் | எல்லாம் ; முழுதும் . |
ஓரடி | ஒருபோகம் . |
ஓரடிக்கோரடி | அடிக்கடி ; நெருக்கமாக . |
ஓரடிப்பதம் | ஒருவகை இசைப்பாட்டு . |
ஓரடை | ஒரு சிற்றளவு . |
ஓரெடை | ஒரு சிற்றளவு . |
ஓரம் | விளிம்பு ; பக்கம் ; ஒருபக்கம் சார்ந்து பேசுதல் ; பெண்குறி . |
ஓரம்பேசல் | ஒருபக்கம் சார்ந்து பேசல் . |
ஓரவாரம் | ஓரவஞ்சனை ; நெறி தவறி ஒருபக்கத்திலே பற்றுவைத்தல் ; பட்சபாதம் . |
ஓரற்று | ஒருதன்மையானது . |
ஓரறிவுயிர் | புல் மரம் முதலியன . |
ஓரன்மை | ஒரு தன்மையல்லாமை . |
ஓரா | ஒரு மீன்வகை . |
ஓராங்கு | ஓருசேர ; ஒன்றுபோல ; இடைவிடாமல் . |
ஓராட்டுதல் | தாலாட்டுதல் . |
ஓராட்டுப்பட்டோலை | சதுர்ப்பட்டோலை . |
ஓராண்காணி | ஒருவனுக்கே உரிய நிலம் . |
ஓராண்வழி | ஒரு தொடராய் வரும் பரம்பரை . |
ஓராயம் | சேர்க்கை ; சாய்வு ; தோணியின் சாய்ந்த ஒருபுறம் ; இணைப்பு . |
ஓரானொரு | ஏதோவொன்று . |
ஓரி | ஆண்நரி ; ஆண்முசு ; விலங்கேற்றின் பொது ; ஆண்மயிர் ; கடையெழு வள்ளல்களுள் ஒருவன் ; ஓரியின் குதிரை ; தேன்முதிர்நிறம் ; விலங்கின் படுக்கை ; நீலநிறம் ; திருமணமாகாதவன் ; கணவனுடன் பிறந்தான் மனைவி . |
ஓரிசு | தீர்மானம் ; சமாதானம் ; இசைவு . |
ஓரிதழ்த்தாமரை | ஓரிதழுடைய சிறு பூண்டு . |
ஓரிபூத்தல் | தேடாமற் கிடத்தல் . |
ஓரிலைத்தாமரை | காண்க : ஓரிதழ்த்தாமரை |
ஓரிலைத்துத்தி | துத்திவகை . |
ஓரீற்றா | ஒருமுறை ஈன்ற பசு . |
ஓரு | நொடி . |
ஓரும் | ஓர் அசைச்சொல் . |
ஓருள்ளிப்பூடு | பல பல்லில்லாத உள்ளி . |
ஓரெழுத்துமடக்கு | வந்த எழுத்தே மடக்கிவரும் சொல்லணி . |
ஓரை | மாதர் கூட்டம் ; மகளிர் விளையாட்டு ; விளையாடிடம் ; குரவை ; இராசி ; ஒரு முகூர்த்தம் ; நேரம் ; சித்திரான்னம் ; கூகை ; இரண்டரை நாழிகைப் பொழுது ; அணிகலன் . |
ஓரைப்பாவை | மகளிர் விளையாட்டுப் பாவை . |
ஓரையயர்தல் | ஓரைப்பாவையை வைத்துக் கொண்டு மகளிர் விளையாடுதல் . |
ஓரொட்டு | முழுதும் ; சராசரியாக . |
ஓரொற்றுவாரம் | தாளத்து ஒரு மாத்திரை பெற்றுவருஞ் செய்யுள் . |
ஓரொன்று | ஒவ்வொன்று . |
ஓரோவழி | ஒருசார் ; சிறுபான்மையாய் . |
ஓல் | ஒலி ; தாலாட்டு ; ஒரு விளியுருபு . |
ஓலக்கச்சூளை | அத்தாணியிற்சேவை செய்யும் பரிவாரம் . |
ஓலக்கம் | சபை ; சபை கூடுமிடம் ; அத்தாணிக் காட்சி . |
ஓலக்கமண்டபம் | அத்தாணி மண்டபம் ; சங்க மண்டபம் ; சபா மண்டபம் . |
ஓலம் | ஒலி ; கடல் ; பாம்பு ; அபயக்குரல் ; அடைக்கலம் . |
ஓலமிடுதல் | முறையிடுதல் ; முழங்குதல் ; அழுதல் ; அபயங்கூறுதல் . |
ஓலாட்டுதல் | தாலாட்டுதல் . |
ஓலிடுதல் | அலறுதல் ; முழங்குதல் . |
ஓலுதல் | முழங்குதல் . |
ஓலுறுத்தல் | இன்னோசையுண்டாக்குதல் ; தாலாட்டுதல் . |
ஓலுறுதல் | ஒலி பொருந்துதல் ; கூவுதல் . |
ஓலை | பனை , தென்னை முதலியவற்றின் ஓலை ; தாழையோலை ; எழுதுமோலை ; திருமுகம் ; ஆவண ஓலை ; சீட்டு ; ஓலைச் சுருள் ; பேய்முன்னை ; ஓலைப்படல் ; ஓலைக்குடை ; ஓலைக்குடல் ; காதணி . |
ஓலைக்கண் | ஓலைச்சட்டம் ; ஓலைச்சட்டத்தில் விழும் துளை . |
ஓலைக்கணக்கர் | பள்ளியிற் படிப்போர் , மாணவர்கள் . |
ஓலைக்காந்தல் | ஓலையின் நெருப்புக் கனிவு . |
ஓலைக்கிணாட்டு | ஓலைத்துண்டு . |
ஓரகத்தாள் | காண்க : ஓர்ப்படியாள் . |
ஓரகத்தி | காண்க : ஓர்ப்படியாள் . |
![]() |
![]() |
![]() |