கட்டளைக்கலி முதல் - கட்டுங்காவலுமாதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கட்டுங்காவலுமாதல் பெருங்காவலுடையதாதல் .
கட்டிச்சுருட்டுதல் பொருளைச் சுருட்டிக் கட்டுதல் ; கவர்ந்த பொருளைத் திரட்டுதல் ; செய்தொழிலை நிறுத்துதல் .
கட்டிப்பிடித்தல் இறுகத் தழுவுதல் ; செலவை மிகச் சுருக்குதல் .
கட்டிப்புகுதல் கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளுதல் .
கட்டிப்புகுந்தவள் மறுமணம் செய்துகொண்டவள் .
கட்டிப்புழுக்கு வெல்லத்துடன்கூடிய அவரை முதலியவற்றின் புழுக்கு .
கட்டிபடுதல் கட்டியாதல் .
கட்டிமேய்த்தல் கால்நடைகளைக் கட்டி மேயச் செய்தல் ; அடக்கி நடத்துதல் .
கட்டிமை உலோபம் , பிசுனத்தன்மை ; கட்டுப்பாடு .
கட்டியக்காரன் புகழ்வோன் ; அரசனின் சீர்த்தியைப் புகழ்வோன் ; கட்டியம் கூறிப் புகழ்வோன் ; கூத்தில் வரும் கோமாளி .
கட்டியங்காரன் கட்டியக்காரன் ; புகழ்வோன் ; சீவகன் தந்தையாகிய சச்சந்தனுக்கு அமைச்சன் .
கட்டியங்கூறுதல் புகழ்சொல்லுதல் .
கட்டியம் புகழ்மொழி ; அரசர் முதலியோரைக் குறித்துச் சொல்லும் புகழ்த் தொடர் ; ஒருவகைக் கூத்து .
கட்டியன் காண்க : கட்டியக்காரன் .
கட்டில் மஞ்சம் ; அரசுகட்டில் , அரியணை ; பாடை .
கட்டிலேற்றுதல் புது மணமக்களை மணவறைக் கட்டிலில் பள்ளிகொள்ள வைத்தல் .
கட்டிலேறுதல் அரியணையேறுதல் ; மணவறைக் கட்டிலில் பள்ளிகொள்ளுதல் .
கட்டிவராகன் பொன்நாணயம் .
கட்டிவருதல் ஊதியங் கூடிவருதல் .
கட்டிவிடுதல் செலுத்துதல் ; விலக்கிவைத்தல் ; பொய்ச் செய்தியைப் பரப்புதல் .
கட்டிளமை மிக்க இளமை ; காளைப் பருவம் .
கட்டு உறுதி ; காவல் ; அரண் ; ஆணை ; உறவின் கட்டு ; தடைக்கட்டு ; யாக்கை ; மூட்டை ; குறி ; வரம்பு , கட்டுப்பாடு ; மிகுதி ; மலைப்பக்கம் ; பொய்யுரை ; வளைப்பு ; திருமணப்பற்று ; வீட்டின் பகுதி .
கட்டு (வி) பந்தி , தளை , பிணி ; வீடு முதலியன கட்டு ; தழுவு ; மணஞ்செய் ; தடைகட்டு ; கதைகட்டு ; சரக்குக்கட்டு ; அடக்கு ; இறுகு ; மூடு .
கட்டுக்கட்டுதல் மூட்டை முதலியன கட்டுதல் ; பொய்யாகப் புனைந்துரைத்தல் ; புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டுதல் .
கட்டுக்கடத்தல் வரம்பு கடத்தல் .
கட்டுக்கடுக்கன் மணி பதித்த கடுக்கன் .
கட்டுக்கதை பொய்க் கதை , கற்பனைக் கதை .
கட்டுக்கரப்பான் சிறு பிள்ளைக்கு வரும் ஒரு வகைக் கரப்பான் நோய் .
கட்டுக்கரை சரக்கு இறக்கும் துறை .
கட்டுக்கழுத்தி சுமங்கலி , மங்கலியம் அணிந்தவள் ; மனைவி .
கட்டுக்காடை நீர்ப்பறவைவகை ; பாற்குருவி .
கட்டுக்காரன் குறிசொல்வோன் ; கட்டியங் கூறுவோன் .
கட்டுக்காவல் கட்டான காவல் , கடுங்காவல் .
கட்டுக்கிடை நாட்பட்டசரக்கு ; தேக்கம் ; நெடுநாளாய்க் கிடக்கிற பொருள் ; ஓடாமல் தேங்கிய நீர் .
கட்டுக்கிடையன் நாட்பட்டசரக்கு ; தேக்கம் ; நெடுநாளாய்க் கிடக்கிற பொருள் ; ஓடாமல் தேங்கிய நீர் .
கட்டுக்குத்தகை உத்தேசமாய் ஒரு தொகைக்குக் கொடுக்குங் குத்தகை ; காலம் நீட்டித்து விடும் மொத்தக் குத்தகை ; விளைவுக்காகக் கொடுக்கும் மொத்தத் தொகை ; தோணிக் குத்தகை .
கட்டுக்கூட்டு கட்டுக்கதை ; எழுத்து மாறியெழுதல் .
கட்டுக்கொடி ஆடுமாடுகளைக் கட்டும் கயிறு ; ஒரு பூண்டு .
கட்டுக்கோப்பு அமைப்பு ; கட்டடம் ; புனைந்துரை ; மேற்கூரை ; காவல் உள்ள பகுதி .
கட்டளைக்கலி எல்லா அடிகளும் ஒற்று நீங்க எழுத்து ஒத்துவரும் கலிப்பா .
கட்டளைக்கலித்துறை கலிப்பா இனவகை .
கட்டளைக்கலிப்பா கலிப்பா இனவகை .
கட்டளைக்கோல் நியாயப் பிரமாணம் .
கட்டளைகேட்டல் நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற இசைவு கேட்டல் .
கட்டளைச்சட்டம் நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற இசைவு கேட்டல் .
கட்டளைச்சுவாமி சைவ மடத்தைச்சார்ந்த கோயில்களை மேற்பார்க்கும் சைவத்துறவி .
கட்டளைத்தம்பிரான் சைவ மடத்தைச்சார்ந்த கோயில்களை மேற்பார்க்கும் சைவத்துறவி .
கட்டளையடி எழுத்துக் கணக்கில் அமைந்த செய்யுளடி .
கட்டளையாசிரியம் எல்லா அடிகளும் ஒற்று நீங்க எழுத்து ஒத்துவரும் அகவல் .
கட்டளையிடுதல் பணித்தல் , ஆணையிடல் .
கட்டளைவஞ்சி எல்லா அடிகளும் ஒற்று நீங்க எழுத்து ஒத்துவரும் வஞ்சிப்பா .
கட்டளை வலித்தல் அவரவர் தன்மையை உறுதிப்படுத்துதல் .
கட்டனை மரம் திமிசுக்கட்டை .
கட்டாக்காலி பட்டிமாடு .
கட்டாகட்டி விடாத்தன்மை , விடாப்பிடி .
கட்டாகட்டிமை மிகுந்த உலோபத்தன்மை ; மிகுந்த கட்டுப்பாடு .
கட்டாஞ்சி முள்வேலமரம் .
கட்டாட்டம் பல்லாங்குழி ஆட்டத்தில் ஒருவகை .
கட்டாடி குறிசொல்வோன் ; வண்ணான் ; வண்ணார் தலைவன் .
கட்டாடியார் கோயிற் பூசாரி .
கட்டாண்மை பேராண்மை , பெருவீரம் .
கட்டாணி உலோபி ; வல்லவன் , பலசாலி ; கடைப்பூட்டாணி ; கயவன் ; பேராசைக்காரன் .
கட்டாந்தரை வெட்டாந்தரை , வெறுந்தரை ; வறண்டு இறுகிய தரை .
கட்டாப்பு வேலியடைத்த நிலம் , காவல் நிலம் .
கட்டாம்பாரை கடல்மீன்வகை .
கட்டாயம் வலாற்காரம் , பலாத்காரம் ; நெருக்கம் ; கட்டுப்பாடு ; அவசியம் ; ஒரு பழைய வரி .
கட்டார்ச்சிதம் வருந்தித் தேடிய பொருள் .
கட்டாரம் குத்துவாள் , கட்டாரி .
கட்டாரி குத்துவாள் ; சூலம் ; எழுத்தாணிப் பூண்டு .
கட்டாவணி கதிர் அறுப்பு .
கட்டான் கட்டங்களுள் காய் வைத்து ஆடும் ஒருவகை விளையாட்டு .
கட்டி இறுகின பொருள் ; மண்கட்டி முதலியன ; கருப்பண்டம் ; சருக்கரைக் கட்டி ; கருப்புக் கட்டி ; கற்கண்டு ; திரளை ; புண்கட்டி ; பிளவை ; பொன் ; திரண்ட மாத்திரளை ; வெல்லம் ; ஒரு புள் ; அகமகிழ்ச்சி .
கட்டிக்காத்தல் கவனித்துப் பாதுகாத்தல் ; விடாது அணுகிக் கீழ்ப்படிந்து நடத்தல் .
கட்டிக்கொடுத்தல் திருமணம் செய்து கொடுத்தல் ; பொதிந்து தருதல் ; ஈடுசெய்தல் ; மிகவும் உதவுதல் .
கட்டிக்கொள்ளுதல் அடிப்படுத்துதல் ; தழுவுதல் ; திருமணஞ் செய்துகொள்ளுதல் ; வசமாக்குதல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; உடுத்தல் ; பறித்தல் ; இலஞ்சங்கொடுத்து வசப்படுத்தல் ; சமாதானஞ் செய்தல் .