கட்டுச்சரக்கு முதல் - கட்டைப்பொன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கட்டுரைத்தல் உறுதிப்படச் சொல்லுதல் ; தெளிவாகச் சொல்லுதல் .
கட்டுரைப்போலி ஒருவகை உரைநடை .
கட்டுவடம் மணிமாலை , இரத்தினவடம் .
கட்டுவம் மாதர் காலணியுள் ஒன்று ; மாதர் காலின் நான்காம் விரலில் அணியும் காலாழி .
கட்டுவன் மாதர் காலணியுள் ஒன்று ; மாதர் காலின் நான்காம் விரலில் அணியும் காலாழி .
கட்டுவாங்கம் கட்டங்கம் , மழு ; யோகியர் தண்டு ; தடி ; ஒருவகைத் தைலம் .
கட்டுவாங்கன் சிவன் ; விநாயகன் .
கட்டுவாயில் மேல்வளைவு இட்டுக் கட்டப்படும் வாயில் .
கட்டுவார்த்தை பொய்யாகக் கற்பித்த பேச்சு .
கட்டுவிச்சி குறிகாரி , குறிசொல்பவள் .
கட்டுவிடல் பலக்குறைவாதல் ; மொட்டு அவிழ்தல் .
கட்டுவிடுதல் கட்டவிழ்தல் ; உடற்பொருத்து விடுதல் ; உடல் பலவீனப்படுதல் .
கட்டுவித்தி காண்க : கட்டுவிச்சி .
கட்டுவிரியன் விரியன்பாம்புவகை .
கட்டுவை கட்டில் .
கட்டுறவி கட்டெறும்பு .
கட்டூண் களவுசெய்து உண்கை ; களவுசெய்து வாழ்தல் ; கட்டுச்சோறு .
கட்டூர் பாசறை .
கட்டெலி கடித்தால் இறப்புண்டாக்கும் எலிவகை .
கட்டெறும்பு எறும்புவகை , பெரிய கறுப்பெறும்பு .
கட்டேறுதல் ஆவேசம் வருதல் .
கட்டை குற்றி ; கடாவு முளை ; விறகு ; உடல் ; பிணம் ; மரக்கட்டை ; குட்டை ; நீளங்குறைந்தது ; தேய்ந்தது ; குறைவு ; மயிர்க்கட்டை ; திப்பி ; கழற்சிக்காய் ; ஒருவகை இசைக்குற்றம் ; ஆர்மோனியத்தின் இசை யெழுப்புங் கருவி ; திண்ணையுடன் சேரக்கூடிய அணை .
கட்டைக்கரி அடுப்புக்கரி .
கட்டைக்காப்பு செப்புக்கட்டைமேல் பொன் தகடு வேய்ந்த காப்பு .
கட்டைக்காரை முட்செடிவகை .
கட்டைக்காலி குறுகிய கால் உள்ளவன்(ள்) ; குறுகிய காலுள்ளது ; கரடி .
கட்டைக்குரல் அமர்ந்த குரல் , தடித்த குரல் .
கட்டைக்குருத்து வாழையின் ஈற்றிலை , கண்ணாடியிலை .
கட்டைக்கொக்கான் மகளிர் விளையாட்டு வகை .
கட்டைகட்டுதல் கொண்டிப் பசுவுக்குத் தடிகட்டுதல் ; மணம் புரிவித்து வாழவைத்தல் .
கட்டைச்சுவர் கைப்பிடிச்சுவர் ; சிறுசுவர் .
கட்டைப்பயிர் முதிர்ந்த பயிர் .
கட்டைப்பாரை காண்க : கடப்பாரை .
கட்டைப்புத்தி தடிப்புத்தி , மந்தபுத்தி .
கட்டைப்பொன் மட்டமான பொன் .
கட்டுச்சரக்கு மொத்தமாக விற்கப்படும் பண்டம் ; நாட்பட்ட பொருள் .
கட்டுச்சாட்சி பொய்ச்சாட்சி .
கட்டுச்சொல் பொய்யுரை .
கட்டுச்சொல்லுதல் குறிசொல்லுதல் .
கட்டுச்சோறு வழிப்பயணத்துக்குக் கொண்டு செல்லும் சோறு .
கட்டுசூலை சூலைக்கட்டு ; குதிரை நோய் வகை .
கட்டுடைத்தல் தபால் கட்டிய பையை உடைத்தல் ; கருத்தை வெளிப்படுத்துதல் ; கரைகடத்தல் ; அணையுடைத்தல் ; புண்ணுடைதல் .
கட்டுடைதல் உடல் தளர்வுறுதல் ; பூமுறுக்கு அவிழ்தல் .
கட்டுண்கை கட்டுப்படுதல் .
கட்டுண்ணல் கட்டுப்படுதல் .
கட்டுண்ணி கட்டுப்பட்டுப் பேசுபவன் .
கட்டுத்தறி விலங்குகளைக் கட்டும் தூண் ; யானை மாடு முதலியன கட்டும் தூண் .
கட்டுத்திரவியம் பொற்கிழி .
கட்டுத்தோணி கடற்கரையருகில் ஆழமில்லா நீரில் செல்லவிடும் ஒருவகைப் படகு .
கட்டுதல் பிணித்தல் ; அமைத்தல் ; செலுத்துதல் ; கற்பித்துச் சொல்லுதல் ; சேர்த்தல் ; தடுத்தல் : இயற்றுதல் : போலுதல் ; இறுகுதல் ; வெல்லுதல் ; நிமித்தமாதல் ; அடக்குதல் : எழுப்புதல் ; தழுவுதல் ; திருமணம் பண்ணுதல் ; பிடுங்குதல் ; கதை கட்டல் ; வீடு முதலியன கட்டல் ; உரை கட்டுதல் ; களவு செய்தல் ; உகுத்தல் ; சூடுதல் ; வசப்படுத்தல் ; முடித்தல் .
கட்டுதிட்டம் சட்டதிட்டம் ; ஒழுங்கு , வரையறை .
கட்டுப்படகு கட்டுத்தோணி .
கட்டுப்படி இழப்பு இல்லாமல் சிறிது இலாபகரமாக அமைதல் .
கட்டுப்படுத்தல் அடக்கிக்கொள்ளுதல் ; எல்லைப்படுத்துதல் ; கட்டுவித்தியினிடம் குறி கேட்டல் .
கட்டுப்படுதல் கட்டுக்குள் அடங்குதல் ; மந்திர முதலியவற்றாற் கட்டுப்படல் ; அடங்கியிருத்தல் ; தடைபடுதல் .
கட்டுப்பண்ணுதல் கட்டுப்பாடு பண்ணுதல் ; நிபந்தனை விதித்தல் .
கட்டுப்பவளம் பவளத்தாலான கையணி .
கட்டுப்பனை பதநீருக்கு என்று பாளை சீவிக் கட்டப்படும் பனை .
கட்டுப்பாக்கு வாய்ச் சூடுபடத் துணியாலிடும் ஒற்றடம் .
கட்டுப்பாடு கட்டுப்படுகை ; பந்துக்கட்டு , சமூக ஏற்பாடு ; கட்சி நிபந்தனை ; இணக்கம் ; ஆணை ; காவல் ; ஒன்றுபடுதல் ; ஒப்பந்தம் .
கட்டுப்பாளை காண்க : கட்டுப்பனை
கட்டுப்புணை காண்க : கட்டுமரம் .
கட்டுப்பூட்டு அணிகலன் .
கட்டுப்பெட்டி ஒருவகைப் பெட்டி ; பிரம்பு , ஓலை , மூங்கிற்பற்றை முதலியவற்றால் முடைந்த பெட்டி ; நாகரிகமறியாத தன்மை .
கட்டுபடி காண்க : கட்டுப்படி .
கட்டுமட்டு அளவாய்ச் செலவிடுகை ; ஒத்ததன்மை ; சொல் அடக்கம் ; திறமை .
கட்டுமரம் மிதவை ; மீன் பிடிக்க மரங்களில் பிணிக்கப்படும் மிதவை .
கட்டுமலை செய்குன்று .
கட்டுமா ஒட்டுமாமரம் .
கட்டுமாந்தம் மலச்சிக்கலால் குழந்தைகளுக்கு வரும் நோய் .
கட்டுமானம் கட்டிப் பேசும் பொய் ; வீடு முதலியன கட்டுகை ; நகைகளில் மணி பதிக்கும் வேலை .
கட்டுமுகனை அதிகாரம் ; மேல்விசாரணை ; கண்டிப்பு ; அடக்கம் ; சிக்கனம் .
கட்டுமுட்டு அமைதி ; கட்டுமட்டு ; தேகக்கட்டு .
கட்டுமை கட்டுப்பாடு .
கட்டுரை வாக்குறுதி ; உறுதிச்சொல் ; பொருள் நிரம்பிய சொல் ; பழமொழி ; புனைந்துரை ; பொய் ; வியாசம் , ஒரு பொருள்பற்றி எழுதும் உரைநடை ; விளங்கச் சொல்லல் ; தொகுப்பு உரை .