சொல்
|
அருஞ்சொற்பொருள் |
கடமை | கடப்பாடு ; ஒவ்வொருவருக்கும் உரிய பணி ; முறை ; கடன் ; தகுதி ; குடிகள் அரசர்க்குச் செய்யும் உரிமை ; காட்டுப்பசு ஒருவகை மான் ; பெண்ணாடு ; குடியிறை . |
கடமைக்கால் | அரசினரால் ஏற்படுத்தப்பெற்ற மரக்கால் . |
கடயம் | அத்தகடகம் ; இந்திராணி ஆடும் கூத்து . |
கடரி | மரமஞ்சள் ; குச்சிமஞ்சள் , அரிசனம் . |
கடல் | சமுத்திரம் ; ஒரு பேரெண் ; இராக சின்னத்துள் ஒன்று ; சதயநாள் ; மிகுதி . |
கடல்கட்டி | வலைஞன் ; நீர் தடுப்போன் ; கடல்வாழ் உயிர்கள் ; தீங்கு செய்யாமல் மந்திரத்தால் கட்டுவோன் . |
கடல்கலக்கி | பேய்முசுட்டைக்கொடி . |
கடல்கோத்தல் | கடல் பொங்கி எங்கும் பெருகுதல் . |
கடல்நாய் | விலங்குவகை . |
கடல்படுபொருள் | கடலில் உண்டாகும் பொருள்கள் ; உப்பு , பவளம் , முத்து ,சங்கு , ஓர்க்கோலை முதலியன . |
கடல்முனை | கடலுள் நீண்டு கூர்த்த முனை போல் உள்ள நிலப்பகுதி . |
கடல்வண்டு | குடைவண்டு . |
கடல்வண்ணன் | திருமால் ; ஐயனார் . |
கடல்வாய்க்கால் | உப்பங்கழி |
கடல்வாழைக்காய் | மீன் . |
கடகம் | வட்டம் ; கங்கணம் : மதில் ; படை ; படைவீடு ; கேடகம் ; மலைப்பக்கம் ; கற்கடக ராசி ; நாட்டியத்தில் கைகாட்டும் வகை ; பனையோலைப் பெட்டி ; ஆடி ; நண்டு ; யானைத்திரள் . |
கடகன் | கடகராசியிற் பிறந்தவன் ; காரியத்தைக் கைகூடச் செய்பவன் ; வல்லவன் ; நடுவன் . |
கடகாவருத்தம் | இரண்டு கையும் கடகமாய் மணிக்கட்டுக்கு ஏற இயைந்து நிற்கும் இணைக்கை . |
கடகு | கேடகம் ; பாதுகாப்பு . |
கடங்கரம் | உமி ; பதர் ; வைக்கோல் . |
கடசடக நியாயம் | ஒன்று மன்றொன்றிலிருந்து காரியப்படுவதை விளக்கும் நெறி . |
கடத்தல் | கடந்துபோதல் ; தாண்டல் ; நடத்தல் ; மேற்படுதல் ; மீறுதல் ; அளத்தல் ; நீங்குதல் ; வெல்லுதல் ; நாட்போக்கல் ; அழித்தல் ; கழிதல் ; வஞ்சியாது எதிர்நிற்றல் ; போர் செய்தல் ; ஓர் ஓசையான தன்மை நீங்கிப் பல ஓசையாய் வருதல் . |
கடத்தி | கழப்புகிறவன் , கழப்புணி . |
கடத்து | தோணி . |
கடத்து | (வி) செலுத்து ; விலக்கு ; தவணை ; சொல் ; நெடுக விடு ; நாட்போக்கு . |
கடத்துதல் | கடக்கச் செய்தல் ; செலுத்துதல் ; காலம் போக்குதல் ; கழப்புதல் ; நாட்போக்குதல் ; நெடுகவிடுத்தல் ; வேறிடம் கொண்டுசெல்லல் . |
கடதாசி | காகிதம் ; கடிதம் ; விளையாடும் சீட்டு . |
கடதீபம் | குடவிளக்கு . |
கடந்தேறுதல் | கடந்துபோதல் ; இடையூறு கடத்தல் ; நற்கதி அடைதல் . |
கடந்தை | திருப்பெண்ணாகடம் என்னும் ஊர் : கொட்டும் குளவிவகையுள் ஒன்று ; பொருந்தேனீ . |
கடப்பநெல் | கருங்குறுவை நெல் , குறுவை வகை . |
கடப்பழி | ஒழுக்கமில்லாதவன் ; ஈகையில்லாதவன் . |
கடப்பாட்டாளன் | கடமையறிந்து அதனைச் செய்பவன் ; ஒப்புரவாளன் . |
கடப்பாடு | கடமை ; முறைமை ; கொடை ; ஒப்புரவு ; அதிகப்படுதல் . |
கடப்பாரை | இருப்புப்பாரை , இரும்பினாலாகிய ஓர் ஆயுதம் . |
கடப்பு | கடக்கை ; இடுக்குமரம் ; மிகுதியானது ; கருங்குறுவை நெல் . |
கடப்புக்கால் | வளைந்த கால் ; ஊனமுள்ள கால் ; தொழுவம் முதலியவற்றில் மாடுகள் புகாமல் தடுப்பதற்கு உழலை இழுத்துப் போடும்படி துளையிட்டு நிறுத்தியிருக்கும் மரம் . |
கடபடமெனல் | ஒலி வேறுபாட்டினால் மருட்டிப் பேசுதற் குறிப்பு . |
கடம் | கடமை ; உடல் ; காடு ; துன்பமான வழி ; தோட்டம் ; குடம் ; வாள் ; கயிறு ; யானை மதம் ; யானைக் கவுள் ; சுடுகாடு ; கடன் ; குடமுழா , கடவாத்தியம் ; காணிக்கை : அருநெறி ; மலைப்பக்கம் , மலைச்சாரல் ; தெய்வக்கடன் ; முறைமை ; நீதி . |
கடம்பகோரக நியாயம் | கடப்ப மரத்தின் அரும்புகள் ஒரே காலத்திற் பூப்பதுபோலப் பல செய்திகளும் ஒரே காலத்தில் நிகழ்வதைக் குறிக்கும் நியாயம் . |
கடம்படுதல் | நேர்ந்துகொள்ளுதல் ; கோபங் கொள்ளுதல் . |
கடம்பம் | கடப்பமரம் ; வெண்கடம்பு ; வாலுளுவை . |
கடம்பல் | குமிழமரம் . |
கடம்பவனம் | மதுரை . |
கடம்பன் | குமாரக்கடவுள் , முருகன் ; ஒரு பழங்குடி , முரடன் . |
கடம்பி | கெட்டவள் ; வேட்டுவப்பெண் . |
கடம்பு | கடம்புப்பால் , கடும்பு , கன்றை ஈன்றதும் சுரக்கும் பால் ; கடப்பமரம் ; தீங்கு . |
கடம்பை | குளவிவகை ; கடமா , ஒரு காட்டு விலங்கு ; தென்னைநார் ; கடம்பூர் . |
கடமணை | தேர் அல்லது வண்டியின் முன்னுறுப்பு . |
கடமா | காட்டுப்பசு ; மதயானை . |
கடமாதம் | மாசி மாதம் . |
கடமான் | காண்க : கடமா . |
கடமுடெனல் | வயிறிரைதல் ; ஒலிக்குறிப்பு . |
கடமுனி | அகத்தியர் . |
கட்டைபோடுதல் | தடைசெய்தல் ; மூர்ச்சித்தல் ; திமிசு போடுதல் ; சாதல் . |
கட்டையவிழ்த்தல் | பொய்கூறத் தொடங்குதல் . |
கட்டையன் | குள்ளன் . |
கட்டைவண்டி | வில் இல்லாத வண்டி ; பாரவண்டி . |
கட்டைவாக்கு | மணியின் மங்கலொளி . |
கட்டைவிரல் | பெருவிரல் . |
கட்டோசை | பேரொலி . |
கட்டோடு | முழுதும் . |
கட்டோர் | திருடர் . |
கட்படாம் | யானைமுகத் தணியாடை , யானை முகத்து அணியும் முகமூடி . |
கட்பலம் | தான்றி ; தேக்கு |
கட்புலம் | கண்ணாகிய புலன் , பார்வை . |
கட்புலன் | கண்ணாகிய புலன் , பார்வை . |
கட்போன் | களவுசெய்வோன் . |
கடக்காரி | கடன்காரி ; தண்டச் செலவுக்குக் காரணமானவள் . |
கடக்கை | வாத்தியவகை . |
கடகடத்தல் | கடகடென்றொலித்தல் ; நெகிழ்வடைதல் ; ஆட்டங்கொடுத்தல் . |
கடகடவெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு . |
கடகடெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு . |
கடகத்தண்டு | சிவிகை . |
கடகநாதன் | படைத்தலைவன் . |
![]() |
![]() |
![]() |