கடல்விராஞ்சி முதல் - கடற்கொள்ளை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கடவுட்பள்ளி பௌத்தர் திருக்கோயில் , பௌத்த சைத்தியம் .
கடவுட்பொறையாட்டி தேவராட்டி .
கடவுண்மங்கலம் தெய்வத்தை நிலைநிறுத்துதல் , தெய்வப் பிரதிட்டை .
கடவுண்மண்டலம் சூரியன் , கதிரவன் .
கடவுண்மை கடவுள் தன்மை , தெய்வத்தன்மை ,
கடவுணதி கங்கையாறு .
கடவுதல் செலுத்துதல் ; முடுக்குதல் ; வினாவுதல் , கேட்டல் ; தகுதியாதல் .
கடவுநர் செலுத்துவோர் .
கடவுள் இறைவன் ; வானவன் ; முனிவன் ; குரு ; நன்மை ; மேன்மை ; தெய்வத்தன்மை .
கடவுள்எழுதுதல் தெய்வ வடிவைச் சமைத்தல் .
கடவுள்தாரம் தேவதாரு மரம் .
கடவுள்வாழ்த்து தெய்வ வணக்கம் ; மும்மூர்த்திகளுள் ஒருவரை உயர்த்திச் சொல்லும் புறத்துறை .
கடவுள்வேள்வி தேவயாகம் , தேவர்பொருட்டு ஓமத்தீயில் செய்யும் வேள்வி .
கடவுளர் தேவர் , தேவகணத்தார் .
கடவுளார் தேவர் , தேவகணத்தார் .
கடவை கடக்கை ; வழி ; வாயில் ; ஏணி ; கடப்பு மரம் ; தணக்குமரம் ; குற்றம் .
கடவைப்படுதல் நீங்குதல் ; காணாமற்போதல் .
கடற்கரை கடலருகு , கடல் ஓரம் , கடலின் எல்லை .
கடற்காக்கை கடற்காகம் என்னும் பறவை ; கடலிறஞ்சி மரம் .
கடற்காளான் கடலின் ஒருவகைப் பாசி .
கடற்காற்று கடலினின்று நிலத்தை நோக்கி வீசும் காற்று .
கடற்கிடந்தோன் கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமால் .
கடற்குதிரை ஒரு மீன்வகை .
கடற்குருவி காண்க : கல்லுப்பு .
கடற்கொஞ்சி ஒரு மரவகை , சீமைக்கொஞ்சி .
கடற்கொடி தும்பை .
கடற்கொழுப்பை எழுத்தாணிப்பூண்டு .
கடற்கொள்ளை கப்பற்கொள்ளை .
கடல்விராஞ்சி செடிவகை .
கடல்விளையமுதம் கடல்படு பொருள் , உப்பு .
கடல்விறால் பெரிய கடல்மீன்வகை .
கடலகம் ஊர்க்குருவி ; ஆமணக்கு ; பூமி ; கடற்கரை இல்லம் .
கடலஞ்சிகம் தருப்பை .
கடலட்டை அட்டைவகை .
கடலடக்கி கடல்கலக்கி ; பேய்முசுட்டை .
கடலடம்பு ஒருவகை அடப்பங்கொடி .
கடலடி இலவங்கம் .
கடலடைத்தான் அபின் ; கஞ்சா .
கடலமிர்து காண்க : கடல்விளையமுதம் .
கடலர் நெய்தல்நில மக்கள் .
கடலாடி நாயுருவி ; ஓர் ஊர் .
கடலாத்தி பாதிரி .
கடலாமணக்கு காட்டாமணக்கு .
கடலாமை ஆமைவகை .
கடலி பூமருது .
கடலிப்பூ பூமருது .
கடலிற்குருவி காண்க : கடற்குருவி
கடலிறைஞ்சி கடற்கரை மரவகை .
கடலிறைவன் வருணன் .
கடலுடும்பு கடல் மீன்வகை .
கடலுப்பு கறியுப்பு .
கடலுராய்ஞ்சி கடற்பறவைவகை .
கடலெடுத்தல் கடல் ஏற்றம் , கடல்நீர் மிகுகை .
கடலெல்லை உலகம் .
கடலெலி ஒருமீன்வகை .
கடலெள் ஒருவகை எள்ளு .
கடலை ஒருவகைப்பயறு , ஒரு தவசம் , நவதானியத்துள் ஒன்று ; சிறு மரவகை .
கடலைக்காய் நிலக்கடலை .
கடலைக்கொட்டை நிலக்கடலை .
கடலைப்பட்டாணி பட்டாணிக் கடலை ; புடைவைவகை .
கடலைப்பணியாரம் கடலை மாவாலான காரமில்லாத பணியாரவகை ; பருப்புத் தேங்காய் என்னும் பணியாரம் .
கடலைமணி கடலை வித்துப்போலும் பொன் மணிகளாலான கழுத்தணிவகை .
கடலோசை கடல் முழக்கம் ; வெற்றோசை , வீண் ஆரவாரம் .
கடலோடி கடற்பயணி , கடற்பயணக்காரன் .
கடலோடுதல் கடலிற் பயணம் செய்தல் .
கடவது செய்யவேண்டுவது .
கடவன் கடமைப்பட்டவன் ; தலைவன் ; கடன் கொடுத்தவன் .
கடவாத்தியம் குடவாத்தியம் , இசைக்கருவியாகப் பயன்படுத்தும் மட்குடம் .
கடவான் துளை ; செய்வரப்பில் கழிவுநீர் செல்லுதற்கு வெட்டப்பட்ட நீர்மடை .
கடவு தணக்குமரம் ; வழி ; எருமைக்கடா ; ஆட்டுக்கடா ; பக்கம் .
கடவு (வி) செலுத்து ; முடுக்கு ; கேள் .
கடவுட்கணிகை தேவருலகத்து ஆடல்மகள் .
கடவுட்சடை வரிக்கூத்துவகை .
கடவுட்டீ ஊழித் தீ .
கடவுட்பணி ஆதிசேடன் ; கடவுள் ஊழியம் , தேவர் தொண்டு .