சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கண்கூடுவரி | ஒருவர் கூட்டவன்றித் தலைவன் தலைவியர் தாமே சந்திக்கும் நிலைமையை நடித்துக்காட்டும் நடிப்பு . |
| கண்கூலி | கண்காணிப்பாளனுக்குத் தரும் கூலி ; இழந்த பொருளைக் கண்டெடுத்துக் கொடுப்பதற்குத் தரும் அன்பளிப்பு ; சீட்டு நடத்துவோர் எடுத்துக்கொள்ளும் தொகை . |
| கண்கெடச்செய்தல் | அறிந்து தீமைசெய்தல் . |
| கண்கெடப்பேசுதல் | கண்டொன்று சொல்லுதல் . |
| கடைவிரித்தல் | வாணிகச் சரக்குகளைப் பரப்புதல் ; பலர்முன் தன்னாற்றலைப் பேசுதல் . |
| கடைவீதி | கடைத்தெரு . |
| கடோரம் | கடினம் ; கொடுமை . |
| கடோரன் | கொடியவன் . |
| கண் | விழி ; கண்ணோட்டம் ; பீலிக்கண் ; கணு ; மரக்கணு ; தொளை ; மூங்கில் முரசடிக்குமிடம் ; மூட்டுவாய் ; பெருமை ; இடம் ; ஏழனுருபு ; அறிவு ; பற்றுக்கோடு ; உடம்பு ; அசை ; உடலூக்கம் . |
| கண்கட்டி | கண்ணில் உண்டாகும் பரு ; கண்ணைக் கட்டிக்கொண்டு விளையாடும் ஒருவகை விளையாட்டு . |
| கண்கட்டிவித்தை | ஒரு காருட வித்தை , தந்திரவித்தை , சாலவித்தை . |
| கண்கட்டுவித்தை | ஒரு காருட வித்தை , தந்திரவித்தை , சாலவித்தை . |
| கண்கட்டு | கண்ணைப் பொத்துகை . |
| கண்கண்டதெய்வம் | கண் எதிரிலே தோன்றி வரந்தரும் தெய்வம் . |
| கண்கண்ணி | குறுங்கண்ணி . |
| கண்கயில் | உடைத்த தேங்காயின் மேல்மூடி . |
| கண்கரித்தல் | கண்காந்துதல் ; பொறாமை . |
| கண்கலக்கம் | கண்ணிலுறு துன்பம் ; வருத்தம் . |
| கண்கலத்தல் | எதிர்ப்படுதல் ; ஒருவரையொருவர் பார்த்தல் . |
| கண்கலவி | காதற் குறிப்போடு தலைவனும் தலைவியும் முதன்முறை பார்த்தல் . |
| கண்கழுவுதல் | முகம் அலம்பித் தூய்மை செய்தல் ; இளம்பயிருக்கு நீர்பாய்ச்சுதல் . |
| கண்களவுகொள்ளுதல் | ஒருவர் பார்ப்பதை மற்றொருவர் காணாதவாறு எதிர்எதிர் மறைவில் பார்த்தல் . |
| கண்காசம் | கண்ணின் படலநோய் . |
| கண்காட்சி | பார்வை ; வியப்பு ; கண்ணுக்கு மகிழ்ச்சி தருவது ; விநோதக் காட்சி . |
| கண்காட்சிச்சாலை | அரும்பொருட் காட்சி மண்டபம் , அருங்காட்சியகம் . |
| கண்காட்டி | அழகுள்ளவர் ; செயலாளர் . |
| கண்காட்டிவிடுதல் | சாடையால் ஏவிவிடுதல் . |
| கண்காட்டுதல் | குறிப்பாகக் கண்சிமிட்டுதல் . |
| கண்காட்டுவோன் | குருடர்களுக்கு வழிகாட்டுவோன் . |
| கண்காணக்காரன் | காவற்காரன் . |
| கண்காணச்சேவகன் | காவற்காரன் . |
| கண்காணம் | மேல்விசாரணை : பயிர்க்காவல் : கதிர் அறுக்கக் கொடுக்கும் ஆணை : ஒப்படி மேல்விசாரணைச் சம்பளம் . |
| கண்காணி | கண்ணால் நோக்கி அறிபவன் : மேல் விசாரிப்புக்காரன் , மேற்பார்வையாளன் : ஒப்படி உத்தியோகஸ்தன் : கூலியாள்களை மேற்பார்ப்போன் . |
| கண்காணித்தல் | மேல்விசாரணை செய்தல் : கண்ணால் கூர்ந்து கவனித்தல் . |
| கண்காணிப்பு | மேற்பார்வை , காவல் . |
| கண்காந்தல் | கண்ணெரிவு . |
| கண்காரன் | மேற்பார்ப்போன் : நோட்டக்காரன் , குறிப்பறியத்தக்கவன் ; குறிசொல்லுவோன் முன்னிருந்து வினாவிய செய்தியைக் கண்டுபிடிக்கவேண்டி அஞ்சனத்தைப் பார்ப்பவன் . |
| கண்குத்திக்கள்வன் | கண்முன்னேயே மறைவில் கொள்வோன் . |
| கண்குத்திப்பாம்பு | ஒருவகைப் பாம்பு , பச்சைப்பாம்பு . |
| கண்குவளை | கண்கூடு . |
| கண்குழி | கண்கூடு . |
| கண்குழிதல் | கண் உள்ளடங்குதல் . |
| கண்குழிவு | எளிமை . |
| கண்குளிர்ச்சி | கண்களிப்பு , மனமகிழ்ச்சி . |
| கண்குளிர்தல் | கண்களித்தல் . |
| கண்குறைத்தல் | கண்ணைப் பறித்திடுதல் . |
| கண்கூச்சம் | ஒளியாற் கண் கூசுகை ; வெளிச்சத்தைப் பார்க்கக்கூடாமை . |
| கண்கூடு | கண்குழி , கண்குவளை ; எதிரேகாணல் ; நேராக அறிதல் ; வெளிப்படை ; நெருக்கம் ; காட்சித்துறை . |
| கண்கூடுதல் | ஒன்றுகூடுதல் ; நெருங்குதல் . |
| கடையாணி | பூட்டாணி ; அச்சாணி . |
| கடையாந்தரம் | கடைசி , முடிவு ; தாழ்ந்தோர் . |
| கடையால் | கடைசால் ; பால் கறக்கும் மூங்கிற் குழாய் ; தோணியின் பின்பிறம் . |
| கடையிணைத்தொடை | மோனை முதலியவை அடிகளின் ஈற்றிரண்டு சீர்களில் வரத் தொடுப்பது . |
| கடையிலா அறிவு | அனந்த ஞானம் , அருகன் எண்குணங்களுள் முடிவில்லா அறிவுடைமை . |
| கடையிலா இன்பம் | அருகன் எண்குணங்களுள் முடிவில்லா ஆனந்தமுடைமை . |
| கடையீடு | இழிந்தது ; கடைத்தரமான நிலம் ; கீழதிகாரியின் கட்டளை ; அரசனது முடிவான ஆணை . |
| கடையுகம் | காண்க : கடையூழி . |
| கடையுணி | கீழ்மகன்(ள்) . |
| கடையுவா | காருவா , அமாவாசை . |
| கடையுற | முழுதும் . |
| கடையுறுநோக்கு | மெய்யுணர்வு . |
| கடையூழி | இறுதியுகம் , கலியுகம் . |
| கடையூறு | செயல்முடிவில் நீக்க முடியாமல் வரும் தடை . |
| கடையெதுகை | அடிதோறும் இறுதிக்கண் வரும் எதுகை . |
| கடையெழுஞ்சனி | உத்தரநாள் . |
| கடையெழுத்து | கையொப்பம் . |
| கடையெழுவள்ளல்கள் | கடை வள்ளல்கள் , புகழ்ந்து பாடினோர்க்கு வேண்டியாங்கு அளித்த கொடையாளிகள் ; பாரி , காரி , ஓரி , ஆய் , அதியமான் , நள்ளி , பேகன் . |
| கடையேடு | சாவோலை , மரணச்சீட்டு . |
| கடையொடுக்குதல் | வாணிகத்தைச் சுருக்குதல் ; வாணிகத்தை நிறுத்திவிடுதல் . |
| கடைவழி | இறந்தபின் உயிர் செல்லும் வழி . |
| கடைவள்ளல் | கேட்டபின் கொடுப்போன் ; பல்காலுங் கேட்க மறுத்துத் தருபவன் . |
| கடைவாசல் | காண்க : கடைவாயில் . |
| கடைவாய் | வாயருகு ; வாயின் கடை ; புகுவழி . |
| கடைவாய்நக்கி | காண்க : உலோபி . |
| கடைவாயில் | தலைவாயில் , புறவாயில் . |
|
|
|