சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கணித்தல் | எண்ணுதல் , கணக்கிடுதல் ; வரையறுத்தல் , அளவுகுறித்தல் ; மதித்தல் , படைத்தல் ; உண்டாக்குதல் ; மனத்துக்குள்ளே கணக்கிடல் . |
| கணிதம் | எண்ணுகை ; இலக்கம் ; கணிக்கப்பட்டது ; கணிதநூல் ; கணக்குவகை ; சோதிடம் . |
| கணிதன் | கணக்கறிந்தோன் ; கணக்கெழுதுவோன் ; சோதிடன் . |
| கணிப்பு | கணக்கிடுகை ; அளவிடுகை ; மதிப்பிடுகை . |
| கணியான் | கூத்தாடி ; ஒரு சாதியான் . |
| கணிலெனல் | காண்க : கணீரெனல் . |
| கணிவன்முல்லை | சோதிடநூல் வல்லவனது சீர்த்தியைச் சொல்லும் புறத்துறை . |
| கணீர்கணீரெனல் | ஈரடுக்கொலிக்குறிப்பு . |
| கணீரெனல் | ஒலிக்குறிப்பு . |
| கணு | மூங்கில் முதலியவற்றின் கண் ; மரங்களின் கணு ; எலும்புக்கணு ; உறுப்புப்பொருத்து . |
| கணுக்கால் | பரடு , கணைக்கால் , முழந்தாளின் கீழே பரட்டின் மேலே உள்ள பாகம் . |
| கணுக்கிரந்தி | பொருத்துகளில் வரும் ஒரு நோய் . |
| கணுக்கை | மணிக்கட்டு . |
| கணுப்பாலை | கடும்பாலைமரம் , ஏழிலைப்பாலை . |
| கணுமாந்தம் | நகச்சுற்று . |
| கணுவட்டு | சிறுவாழைக் குலை . |
| கணுவை | ஒருவகைத் தோற்கருவி . |
| கணேசுரர் எண்மர் | நந்தி , மகாகாளர் , பிருங்கி , கணபதி , இடபம் , கந்தர் , பார்வதி , சண்டர் என்னும் சிவகணத் தலைவராயுள்ளவர் . |
| கணை | திரட்சி ; அம்பு ; அம்பின் அலகு ; பூரநாள் ; வளைதடி , காம்பு ; மூங்கில் ; சிவிகையின் வளைந்த கொம்பு ; கரும்பு ; திப்பிலி ; ஒலி ; ஒரு நோய் . |
| கணைக்கட்டு | அம்புக்கட்டு . |
| கணைக்கால் | முழங்காலின்கீழ் பரட்டின் மேலுள்ள பாகம் ; திரண்ட கால் ; திரண்ட நாளம் . |
| கணைக்கை | முன்கை . |
| கணைக்கொம்பன் | கட்டைக் கொம்புள்ள எருது . |
| கணைகாடு | துன்பம் . |
| கணைச்சூடு | குழந்தை நோய்வகை . |
| கணைப்புல் | ஒட்டுப் புல் . |
| கணைமூங்கில் | பொன்னாங்காணி . |
| கணையம் | தண்டாயுதம் ; வளைதடி ; யானைத் தூண் ; காவற்காடு ; கணையமரம் ; குறுக்கு மரம் ; போர் , வாத்தியவகை ; பொன் ; ஒரு சுரப்பி . |
| கணையமரம் | கோட்டை வாயிற்கதவின் குறுக்கு மரம் . |
| கணையாழி | மோதிரம் ; முத்திரைமோதிரம் . |
| கணைவெட்டை | ஒருவகை வெட்டைநோய் . |
| கத்தக்காம்பு | புகையிலைக் காம்பு . |
| கத்தணம் | சட்டை , கவசம் . |
| கத்தபம் | கழுதை . |
| கத்தம் | தோள் , புயம் ; கதை ; பொல்லாங்கு ; மலச்சேறு . |
| கத்தராளி | தலைவன் |
| கத்தரி | கத்தரிச் செடி , வழுதுணை ; கத்தரிக்கோல் ; எலிப்பொறி ; ஒரு பாம்புவகை ; வேனிற்காலத்துக் கடுங்கோடையாகிய சித்திரை மாதம் இருபத்து மூன்றாம் தேதி முதல் வைகாசிமாதம் ஏழாம் தேதி வரையிலுள்ள அக்கினி நட்சத்திரம் . |
| கணப்பு | சூடு ; குளிர்காயுந் தீ ; தீச்சட்டி . |
| கணப்புச்சட்டி | குளிர்காய்தற்குரிய தீப்பெய்கலம் . |
| கணப்பெருமக்கள் | ஊராட்சி மன்றத்தார் . |
| கணப்பொருத்தம் | செய்யுள் முதன்மொழிப் பொருத்தவகை ; கலியாணப்பொருத்தங்களுள் ஒன்று . |
| கணப்பொழுது | நொடிப்பொழுது . |
| கணபங்கம் | கணந்தோறும் தோன்றியழிதல் , நொடியில் தோன்றி அழிவது . |
| கணபங்கவாதி | பிரபஞ்சம் கணந்தோறும் தோன்றியழியும் என்று வாதிப்பவன் . |
| கணபதி | சிவகணத் தலைவன் , விநாயகன் . |
| கணபதியணி | அறுகம்புல் . |
| கணபன் | கணநாதன் , கணங்களைக் காப்பவன் . |
| கணம் | காலநுட்பம் ; கூட்டம் ; விண்மீன் கூட்டம் ; ஒரு நோய் ; பேய் ; சிறுமை ; திரட்சி ; ஒருவகைப் புல் . |
| கணம்புல் | புல்வகை . |
| கணவம் | அரசமரம் . |
| கணவர் | கூட்டத்தார் . |
| கணவன் | கொழுநன் ; தலைவன் . |
| கணவாட்டி | கணவாளச் சாதிப்பெண் . |
| கணவாய் | மலைகளுக்கிடையே அமையும் வழி ; சிப்பிவகை . |
| கணவாளம் | ஒரு சாதி . |
| கணவீரம் | அலரிச்செடி ; செவ்வலரி . |
| கணன் | கள்ளன் ; தொகுதி . |
| கணனம் | எண்ணுதல் ; கோள்நடை முதலியன கணிக்கை . |
| கணனை | எண் . |
| கணா | திப்பிலி . |
| கணாதன் | தார்க்கீகன் ; ஒரு மதாசாரியன் ; ஒரு முனிவன் . |
| கணாதிபன் | குழுத் தலைவன் ; விநாயகன் . |
| கணி | கணிப்போன் ; நூல்வல்லோன் ; சோதிடன் ; கலை ; வேங்கைமரம் ; மருதநிலம் ; சண்பகம் ; ஒரு சாதி ; அணிகலன் . |
| கணி | (வி) கணக்கிடு , குணி , எண்ணு ; அளவுகுறி ; மதி . |
| கணிக்காரிகை | குறிசொல்லும் பெண் . |
| கணிகம் | நூறுகோடி ; காலநுட்பம் ; கணப்பொழுது இருக்கக்கூடியது ; தாற்காலிகப் பூசைக்குரியதாய்ச் செய்யப்படும் இலிங்கம் . |
| கணிகவெற்பு | திருத்தணிகைமலை . |
| கணிகன் | சோதிடன் , கணியன் . |
| கணிகாரம் | கோங்கு . |
| கணிகை | பொதுமகள் ; முல்லை . |
| கணிச்சி | மழு , கோடரி ; தோட்டி ; உளி ; குந்தாலி ; வெற்றிலை மூக்கரிகத்தி . |
| கணிச்சியோன் | மழுவேந்தியவன் , சிவன் . |
| கணிசம் | மதிப்பு ; மேம்பாடு ; அளவு ; மிகுதி ; சத்தம் . |
| கணிசம்பார்த்தல் | மதிப்பிடுதல் ; கையால் நிறையறிதல் ; தகுதியறிதல் . |
| கணிசித்தல் | சிந்தித்தல் ; விரும்புதல் ; மதித்தல் ; உய்த்துணர்தல் . |
|
|
|