கத்தரி முதல் - கதாப்பிரசங்கம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கதலிபாகம் செய்யுள் அமைதிகளுள் ஒன்று .
கதவம் கதவு ; காவல் .
கதவாக்கியம் சோதிட சாத்திரத்தின் ஆண்டு இறுதியைக் குறிக்கும் ஒரு தொடர் .
கதவு மறைவு ; காவல் ; சினம் .
கதவுக்குடுமி கதவு தாங்கும் கொம்மை .
கதவுதல் சினத்தல் .
கதழ்தல் சினத்தல் ; பிளத்தல் ; ஓடுதல் ; விரைதல் ; மிகுதல் ; கடுமையாதல் ; கோணுதல் .
கதழ்வு விரைவு ; கடுமை ; மிகுதி ; பெருமை ; உவமைச்சொல் ; ஒப்பு ; சினம் .
கதழ்வுறுதல் கலங்கிக் கூப்பிடுதல் , அச்சத்தால் கலங்கிக் கூச்சலிடுதல் .
கதறுதல் உரக்க அழுதல் ; விலங்கு முதலியன கத்துதல் .
கதனம் கடுமை ; கடுப்பு ; கலக்கம் ; போர் ; வேகம் .
கதாசித்து இடைவிட்ட காலம் ; சிலவேளை ; கதைக்கொத்து ; அரிதாய் .
கதாப்பிரசங்கம் புராண சரித்திரஞ் சொல்லல் .
கத்தன் கர்த்தா , செய்பவன் , ஆக்குவோன் ; முதலாளி ; முதல்வன் , கடவுள் .
கத்தா கர்த்தா , செய்பவன் , ஆக்குவோன் ; முதலாளி ; முதல்வன் , கடவுள் .
கத்தி வெட்டுக்கத்தி ; வாள் ; கப்பியடிக்க உதவும் கட்டை .
கத்திகட்டி போர்வீரன் ; கத்திகட்டி ஆடுபவர் .
கத்திகை மாலைவகை ; சிறுகொடி ; துகிற்கொடி ; குருக்கத்தி ; கருக்குவாய்ச்சி .
கத்திதீட்டுதல் வெட்டுங் கருவிகளைக் கூராக்குதல் ; பகைத்தல் ; கெடுதிசெய்யச் சமயம் பார்த்தல் .
கத்திதீட்டுவோன் வெட்டுங் கருவிகளைக் கூராக்கும் தொழிலாளி .
கத்திநுணா நிலவேம்பு .
கத்திமுனையாதல் மிகக் கண்டிப்பாயிருத்தல் .
கத்தியம் சிறுதுகில் ; நல்லாடைவகை ; சொல்லத்தக்கது ; உரைநடை ; இலக்கணமின்றி இலக்கணப் பாட்டுப்போற் சொல்வது .
கத்தியோகம் மின்மினிப்பூச்சி .
கத்திரம் கீரிப்பிள்ளை .
கத்திரி ஒருவகைப் பறை , தலைவிரி பறை ; பாம்பு ; கத்திரிவெயில் , அக்கினி நட்சத்திரம் .
கத்திரிகம் கால்மாறி நிற்கை .
கத்திரிசால் மெழுகுவத்தி நின்று எரிவதற்கு ஆதாரமான கருவி ; சரவிளக்கின் தண்டு .
கத்திரியம் ஆடுதின்னாப்பாளை .
கத்திரியன் அரசன் , சத்திரியன் .
கத்திரு கர்த்தா .
கத்திருவம் குதிரை .
கத்து சந்து , உடற்பொருத்து ; சடைவு ; கடிதம் ; கூப்பிடுகை ; பிதற்றுகை .
கத்து கூவு ; விலங்கு , பறவை முதலியன போல் கத்து ; பிதற்று ; முழங்கு .
கத்துதல் ஒலித்தல் ; பறவை முதலியன ஒலித்தல் ; கூவுதல் ; பிதற்றுதல் ; முழுங்குதல் ; சொல்லுதல் ; ஓதுதல் .
கத்துரு கர்த்தா ; ஆளுவோன் ; படைப்போன் ; ஆதிசேடன் தாய் .
கத்துருவம் குதிரைப்பற் பாடாணம் .
கத்தூரி கத்தூரி விலங்கு ; மான்மதம் .
கத்தூரிகை தக்கோலப் பொட்டு ; வால்மிளகு .
கத்தூரிப்பிள்ளை கத்தூரிநாவி , ஒரு விலங்கு .
கத்தூரிப்பொட்டு நெற்றிக்கிடும் கத்தூரி திலகம் .
கத்தூரிமஞ்சள் ஒருவகை மஞ்சள் .
கத்தூரிமான் கத்தூரி உண்டாகும் மான்வகை .
கத்தூரியெலுமிச்சை எலுமிச்சைவகை .
கத்தை கழுதை .
கத்தோயம் கள் .
கத்தோலிக்கன் கிறித்தவமதத்தின் ஒருபிரிவைச் சார்ந்தவன் .
கதகதெனல் வெப்பமாதல் குறிப்பு ; ஒலிக் குறிப்பு .
கதகம் தேற்றாமரம் , தேற்றாங்கொட்டை ; சொல்லுதல் .
கதண்டு கருவண்டு .
கதநம் கடுப்பு ; கலக்கம் ; கொலை ; பேசுதல் ; போர் .
கதம் சினம் ; பஞ்சம் ; பாம்பு ; அடைகை ; சென்றது ; ஓட்டம் .
கதம்பகம் கூட்டம் ; கலவை ; கடுகு .
கதம்பம் மேகம் ; நறுமணப்பொடி ; கடப்பமரம் ; கலவை ; கலப்புணவு ; கூட்டம் ; கானாங்கோழி ; பலவகைப் பூக்கள் ; பசுமந்தை ; பச்சிலை ; வேர்களால் தொடுக்கப்பட்ட மாலை ,
கதம்பமுகுளநியாயம் மழைபெய்தபோது கதம்பமொட்டுகள் ஒரசேரப் பூத்தல்போலச் செயல்கள் ஒருங்கே நிகழ்வதாகிய நெறி .
கதம்பு கடம்பு ; கூட்டம் .
கதம்பை தேங்காயின் மேல்மட்டை ; தேங்காய் நார்த் தும்பு ; ஒருவகைப் புல் ; வைக்கோல் .
கதர் கைராட்டை நூலால் செய்த ஆடை .
கதலம் வாழை .
கதலி கதலிவாழை ; துகிற்கொடி ; காற்றாடி ; தேற்றாமரம் .
கதலிகை கதலிவாழை ; துகிற்கொடி ; ஓர் அணிகல உறுப்பு .
கதலிச்சி கருப்பூரம் .
கதலிப்பூ வாழைப் பூ ; பச்சைக் கருப்பூரம் .
கத்தரி (வி) கத்தரியால் வெட்டு ; எண்ணம் வேறுபடு ; நெருப்புப் பற்றாமற் போ ; புழுவரி .
கத்தரிக்கட்டு கத்தரிக்கோல்போல வீட்டு முகட்டுக் கைகளைச் சேர்க்கை .
கத்திரிக்கோல் கத்தரிக்குங் கருவி .
கத்தரிகை கத்தரிக்கோல் , கத்தரிக்குங் கருவி ; இணையா வினைக்கைவகை .
கத்தரிகைப்பூட்டு காண்க : கத்தரிக்கட்டு .
கத்தரித்தல் கத்தரியால் வெட்டிப் பிரித்தல் ; அறுத்தல் ; சிதறியதறிதல் ; புழுவரித்தல் ; மாறு படுதல் ; எண்ணம் வேறுபடுதல் .
கத்திரிநாயகம் யானைச் சீரகம் ; பெருஞ்சீரகம் .
கத்தரிமணியன் ஓர் எலிவகை ; ஒருவகைப்பாம்பு .
கத்தரிவிரியன் கண்ணாடிவிரியன் .
கத்தரை கோத்திரம் .
கத்தலை ஒரு மீன்வகை .
கத்தளை ஒரு மீன்வகை .