கதாமஞ்சரி முதல் - கதையறிதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கதிர்வீசுதல் ஒளிவீசுதல் ; கதிர்வாங்குதல் , கதிர் ஈனுதல் .
கதிரடித்தல் போரடித்தல் .
கதிரம் அம்பு ; கருங்காலி , ஒருவகைப் பிசின் மரம் .
கதிரவன் சூரியன் .
கதிரவன் புதல்வி யமுனை .
கதிரி நாயுருவி .
கதிரீனுதல் கதிர்வாங்குதல் , கதிர் வெளிப்படுதல் .
கதிரெழுதுகள் சூரிய கிரணத்து எழும் துகளாகிய ஒரு நுட்ப அளவு .
கதிரை கதிர்காமம் ; நாற்காலி .
கதிரோன் சூரியன் .
கது வடு ; வெடிப்பு , மலைப்பிளவு .
கதுக்கு இராட்டினத்தில் நூலைப் பற்றும் உறுப்பு .
கதுக்குதல் அதக்குதல் ; பெருந்தீனி கொள்ளுதல் .
கதுப்பு கன்னம் , தாடை ; தலைமயிர் , கூந்தல் ; பழத்தின் நடுவேயுள்ள கொட்டையை நீக்கி அறுத்த துண்டம் ; பசுக் கூட்டம் .
கதுப்புளி முக்கவருள்ள சூட்டுக்கோல் .
கதுமுதல் உறுமுதல் ; கடிந்துகொள்ளுதல் ; பிடிவாதம் செய்தல் .
கதுமெனல் விரைதல் ; விரைவுக்குறிப்பு .
கதுமை காண்க : கதிமை .
கதுவாய் குறைதல் ; வடுப்படுதல் ; மேற்கதுவாய் , கீழ்க்கதுவாய் என்னும் தொடை விகற்பம் .
கதுவுதல் பற்றுதல் ; வலிந்திழுத்தல் , நீங்காது பற்றல் ; கலங்குதல் ; அழித்தல் ; எதிரொளித்தல் ; வாங்குதல் ; சினத்தல் .
கதை பெரிய சரிதம் ; வரலாறு ; கட்டுக்கதை ; இதிகாச புராணங்கள் ; பெருங்கதை ; பொய்ச் செய்தி ; சொல் ; உரையாடல் ; விதம் ; தடி ; தண்டாயுதம் .
கதைகட்டுதல் கதையுண்டாக்குதல் ; பொய்ச் செய்தி எழுப்புதல் .
கதைகாரன் கதை சொல்லுவோன் ; வாயாடி , வீண்பேச்சுக்காரன் ; தந்திரமுள்ளவன் .
கதைகாவி குறளை கூறுவோன் , கோட் சொல்லுவோன் .
கதைத்தல் சொல்லுதல் ; கதை சொல்லுதல் ; பேசுதல் ; வளவளவென்று பேசுதல் , வீண் பேச்சுப் பேசுதல் .
கதைதல் சிறப்பித்துச் சொல்லுதல் .
கதைபடித்தல் புராணம் படித்தல் ; பொய் கூறுதல் .
கதைபண்ணுதல் கட்டிப் பேசுதல் ; கதாகாலட்சேபம் செய்தல் .
கதைபிடுங்குதல் பிறர் வாயினின்றும் இரகசியம் வெளிவரும்படி செய்தல் .
கதைமாறுதல் பொருள் பலபடச் பேசுதல் .
கதையறிதல் உளவறிதல் .
கதிர்விடுதல் ஒளிவீசுதல் ; கதிர்வாங்குதல் , கதிர் ஈனுதல் .
கதாமஞ்சரி கதைக்கொத்து , கதைகளின் தொகுதி .
கதாயுதம் தண்டாயுதம் .
கதாயுதன் தண்டாயுதமுடையோன் ; வீமன் ; வயிரவன் .
கதாவணி கணக்குப் புத்தகம் .
கதாவுதல் சொல்லுதல் .
கதி நடை ; குதிரை நடை ; போக்கு ; விரைவு ; வழி ; தேவகதி ; அறிவு ; பரகதி ; வீடுபேறு ; நிலை ; ஆற்றல் ; படலம் ; சாதனம் ; புகலிடம் .
கதிக்கும்பச்சை நாகப்பச்சை ; பச்சைக்கல் .
கதிக்கை அதிகரிப்பு ; கருக்குவாளிமரம் .
கதிகால் காண்க : ஊணிக்கம்பு .
கதித்தல் செல்லுதல் ; எழுதல் ; நடத்தல் ; விரைதல் ; மிகுதல் ; பருத்தல் ; அறிதல் ; கதியடைதல் .
கதித்தவிலை மிகுந்தவிலை , அநியாய விலை .
கதிதம் சொல்லப்பட்டது .
கதிப்பு கதித்தல் , இறுகல் .
கதிமி தலைமைக் குடியானவன் .
கதிமை பருமை , கனம் ; கூர்மை .
கதிமோட்சம் கழுவாய் , பரிகாரம் ; மீளும் நிலை .
கதியற்றவன் திக்கற்றவன் , மிக வறியவன் .
கதியால் வேலியில் நாட்டுங் கிளை
கதிர் ஒளிக்கதிர் , சூரிய கிரகணம் ; ஒளி ; வெயில் ; சூரியசந்திரர் ; நெற்கதிர் , இருப்புக்கதிர் , நூல் நூற்குங் கருவி ; சக்கரத்தின் ஆரக்கால் ; தேரினுட்பரப்பின் மரம் .
கதிர்க்கட்டு நெல்லரிக் கட்டு .
கதிர்க்கடவுள் சூரியன் .
கதிர்க்கம்பி கதிர்க்கோல் , நூற்கும் கருவி ; தட்டார் கருவிவகை .
கதிர்க்குஞ்சம் கதிர்க்கற்றை .
கதிர்க்குடலை மணிபிடியாத கதிர் .
கதிர்க்கோல் நூல் நூற்கும் கருவி ; தட்டார் கருவிவகை .
கதிர்ச்சாலேகம் இரும்புக் கம்பிகளையுடைய சாளரம் .
கதிர்ச்சிலை சூரியகாந்தக் கல் .
கதிர்செய்தல் ஒளிவிடுதல் .
கதிர்த்தல் ஒளிர்தல் , ஒளிவீசுதல் ; வெளிப்படுதல் ; மிகுதல் ; இறுமாத்தல் .
கதிர்த்தாக்கம் கதிர் முதிர்ந்து சாய்கை .
கதிர்நாள் உத்தரநாள் .
கதிர்ப்பகை இராகுகேதுக்கள் ; அல்லி ; குவளை .
கதிர்ப்பயிர் இளங்கதிரத் தவசம் .
கதிர்ப்பாரி தாமரை .
கதிர்ப்பு ஒளி .
கதிர்ப்புல் ஒருவகைப் புல் .
கதிர்மகன் சூரியன் புதல்வன் ; யமன் ; சனி ; சுக்கிரீவன் ; கன்னன் .
கதிர்மடங்கல் அறுவடை முடிவு .
கதிர்மண்டபம் தேரைப்போல அலங்கரிக்கப்பட்ட மணவறை அல்லது மண்டபம் .
கதிர்முத்து ஆணிமுத்து , சிறந்த முத்து .
கதிர்வட்டம் சூரியன்
கதிர்வாங்குதல் ஒளிவிடுதல் ; கதிர் ஈனுதல் .
கதிர்வால் பயிர்க்கதிரின் நுனி .