கதையெடுத்தல் முதல் - கந்துகன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கந்திற்பாவை தூணில் பெண் வடிவாய் அமைந்த தெய்வம் .
கந்து தூண் ; யானை கட்டும் தறி ; ஆதீண்டு குற்றி ; தெய்வம் உறையும் தூண் ; பற்றுக் கோடு ; யாக்கையின் மூட்டு ; சந்து ; கழுத்தடி ; வண்டியுளிரும்பு ; வண்டி இருசு ; வண்டி ; மாடு பிணைக்குந் தும்பு ; வைக்கோல் வரம்பு ; பொலிப் புறத்தடையும் பதர் .
கந்துகட்டுதல் காய்கறிகளைக் கொதிக்கவைக்கும்போது நீரில் அவை ஒதுங்கி மிதத்தல் ; களத்தைச் சுற்றி வைக்கோல் சேர்தல் .
கந்துகம் பந்து ; குதிரை ; குறுநில மன்னரின் குதிரை .
கந்துகவரி மகளிர் பந்தாட்டுப் பாட்டு .
கந்துகளம் நெல்லும் பதரும் கலந்த களம் .
கந்துகன் தான்றிமரம் .
கந்திவாருணி பேய்த் தும்மட்டி .
கந்தடித்தல் சூடு மிதித்தபின் கதிர்த்தாளைக் கோல்கொண்டு அடித்தல் .
கந்தடைத்தல் களத்தைச் சுற்றி வைக்கோலால் வேலி கட்டுத்தல் .
கந்தநாகுலி செவ்வியம் ; மிளகு ; மிளகுகொடி .
கந்தநாகுலியம் பேரரத்தை .
கந்தப்பொடி மணப்பொடி .
கந்தபத்தம் புழுகுசம்பா நெல் .
கந்தபாடாணம் கந்தகம் .
கந்தபுட்பி மெருகன்கிழங்குச் செடி .
கந்தபுட்பை அவுரி .
கந்தம் மணம் ; சந்தனம் ; வசம்பு ; கந்தகம் ; கிழங்குப்பொது ; கழுத்தடி ; வெள்ளைப் பூண்டு ; கருணைக்கிழங்கு ; இந்திரியம் ; மணப்பூடு ; தூண் .
கந்தமாதனம் ஒரு மலை , குலகிரி எட்டனள் ஒன்று .
கந்தமூடிகம் கத்தூரி விலங்கு ; மூஞ்சூறு .
கந்தமூலபலம் கிழங்கு வேர் கனிகள் .
கந்தமூலி சிறு இண்டஞ்செடி .
கந்தர் கந்தன் , முருகக்கடவுள் .
கந்தர்ப்ப நகரம் கந்தருவ நகரம் .
கந்தர்ப்பர் கந்தருவர் .
கந்தர்ப்பன் மன்மதன் .
கந்தரக்காட்டம் வெள்ளைப் பாடாணம் .
கந்தரசம் சந்தனம் .
கந்தரசு சாம்பிராணி .
கந்தரம் கழுத்து ; மேகம் ; மலைக்குகை ; புனமுருங்கைமரம் ; கடற்பாசி ; கற்கடகபாடாணம் ; தீமுறுகற் பாடாணம் .
கந்தரமுட்டி நேரே அம்பெய்வதற்கு வில்லைப் பிடிக்கை .
கந்தராசம் ஒருவகை மணமுள்ள மரம் , சந்தனம் .
கந்தருவம் இசை , பண் ; இசைப்பாட்டு ; எண்வகை மணத்துள் ஒன்று , தலைவனும் தலைவியும் தாமே மணத்தல் ; தேவசாதியுள் ஒன்றான கந்தருவ சாதி ; குதிரை .
கந்தருவர் பதினெட்டுத் தேவசாதியுள் ஒரு வகையார் ; இசைவல்ல சிறுகுடைத் தேவகுலத்தார் .
கந்தருவவேதம் இசைநூல் , சாமவேதத்தின் ஒருபாகம் .
கந்தல் கேடு , ஒழுக்கக்கேடு ; அறியாமையால் விளையும் குற்றம் ; பீறல் , கிழிந்த ஆடை .
கந்தவகம் மோப்பம் ; மூக்கு .
கந்தவகன் காற்று , வாயுதேவன் .
கந்தவடி மணத்தயிலம் .
கந்தருவக்கம் மணப்பொருள்கள் .
கந்தவாகன் காண்க : கந்தவகன் .
கந்தவாகனம் காண்க : கந்தவகன் .
கந்தவாரம் அரண்மனையிலுள்ள அந்தப்புரம் , அரசன் தேவியிருக்கை .
கந்தவுத்தி கந்தவருக்கம் , சேர்த்தற்குரிய மணப்பண்டங்கள் .
கந்தழி பரம்பொருள் , ஒரு பற்றுக்கோடும் இன்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள் , கடவுள் ; கண்ணன் வாணனது சோநகரத்தை அழித்ததைக் கூறும் புறத்துறை ; மதிலையழித்தலாகிய புறத்துறை .
கந்தளம் கவசம் , சட்டை ; கதுப்பு ; பொன் ; முளை ; தளிர் ; போர் .
கந்தன் முருகக்கடவுள் ; அருகதேவன் ; சீர்பந்த பாடாணம் , சூதபாடாணம் .
கந்தாடை ஒரு பார்ப்பனக் குடி .
கந்தாயம் ஆண்டில் மூன்றில் ஒரு பாகம் ; தவணை ; ஆதாயம் ; அறுவடைக்காலம் ; கந்தாய வரி கொடுக்குங் காலம் .
கந்தார்த்தம் ஓர் இசைப்பாட்டு .
கந்தாரம் கள் ; காந்தாரம் , ஓர் இசைப்பாட்டு .
கந்தாலி கச்சோலம் .
கந்தாவகன் காண்க : கந்தவகன் .
கந்தி மணப்பொருள் ; ஆரியாங்கனை என்னும் தவப்பெண் , கமுகு ; துவரை ; மரகதம் ; கந்தகம் , கந்தக பாடாணம் .
கந்திகை சிறுதேக்கு .
கந்தித்தம் சீலை
கந்தித்தல் மணத்தல் .
கந்திரி ஒரு முகமதியப் பண்டிகை , நாகூரில் துருக்கர் கொண்டாடும் சிறப்புப் பண்டிகை ; பிச்சைக்காரன் ; வண்டி .
கந்திருவர் கந்தருவர் , யாழ்வல்லோர் .
கதையெடுத்தல் ஒரு பொருளை அறிவிக்கத் தொடங்குதல் .
கதைவளர்த்தல் பேச்சை விவரித்தல் .
கதைவிடுதல் பொய்ச்செய்தி எழுப்புதல் ; இரகசியம் வெளிவரும்படி தந்திரமாய்ச் சொல்லுதல் .
கந்தகட்பலம் தான்றிமரம் .
கந்தகதைலம் சொறிக்கிடும் கந்தகக் கலப்புள்ள எண்ணெய் .
கந்தகப் பூ மருந்துச் சரக்குவகை .
கந்தகபூமி கந்தக சம்பந்தமுள்ள நிலம் ; காங்கையான நாடு .
கந்தகம் ஒருவகைத் தாதுப்பொருள் ; ஒரு மருந்து ; உள்ளி ; முருங்கை மரம் ; ஒருவகைத் தவச அளவை .
கந்தக விரைப்பாடு ஐந்து ஏக்கர் அளவுள்ள நிலம் .
கந்தகாப்பிரகம் மஞ்சள் அப்பிரகம் .
கந்தகாரி ஆடுதின்னாப்பாளை .
கந்தங்குவளம் கழுகு .
கந்தசட்கம் தமரத்தைமரம் .
கந்தசட்டி ஐப்பசி மாதத்தின் அமாவாசைக்குப் பின் வரும் சட்டி திதி , முருகக் கடவுள் சூரபதுமனை வென்றதைக் குறித்து ஐப்பசி மாதச் சட்டி திதியில் நடத்தப்படும் திருநாள் .
கந்தசாரம் சந்தனம் ; பனிநீர் .
கந்தசாலி ஒருவகை உயர்ந்த செந்நெல் .