சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கப்பியம் | உண்ணத்தக்கது . |
| கப்பியல் | கயிறிழுக்குங் கருவி . |
| கப்பு | கவர்கொம்பு ; கிளை ; பிளவு ; சிறுதூண் ; தோள் ; ஆதாரம் ; கவர்ச்சி ; சாயத்தின் அழுத்தம் ; செஞ்சாயவகை ; மயிர்க்கு ஊட்டுஞ்சாயம் ; கமுக்கம் ; உயரம் . |
| கப்புக்கால் | வளைகால் , முட்டுக்கால் . |
| கப்புக்குனையறுத்தல் | இழையோட்டுதல் . |
| கப்புச்சிப்பெனல் | பேச்சின்றி அடங்குகைக் குறிப்பு . |
| கப்புத்தோள் | வலத்தோளும் இடத்தோளுமாக மாறிக் காவுகை . |
| கப்புதல் | மூடிக்கொள்ளல் ; விரைவாய் விழுங்குதல் ; உண்ணல் . |
| கப்புமஞ்சள் | கொச்சியிலிருந்து கிடைக்கும் ஒருவகை உயர்ந்த மஞ்சள் , குளிமஞ்சள் . |
| கப்புரம் | கருப்பூரம் . |
| கப்புவலை | வலைவகை . |
| கப்புவிடுதல் | கிளைவிடுதல் ; புரட்டுப் பேசுதல் . |
| கப்பைக்காலன் | வளைந்த காலை உடையவன் . |
| கபக்கட்டு | சளி நெஞ்சில் திரண்டிருக்கை . |
| கபகபவெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; பசி முதலியவற்றால் வயிறெரிகைக் குறிப்பு . |
| கபட்டு நாக்கு | வஞ்சம் பேசும் நா . |
| கபட்டுப் படிக்கல் | கள்ள நிறைகல் . |
| கபடக்காரன் | வஞ்சகன் . |
| கபடநாடகம் | மிகத் தந்திரமான செய்கை ; வஞ்சக நடிப்பு ; போலி நடிப்பு . |
| கபடம் | வஞ்சகம் . |
| கபடவித்தை | மாயவித்தை . |
| கபடன் | வஞ்சகன் , கள்ளன் . |
| கபடி | கபடன் ; வஞ்சகி ; தந்திரசாலி ; சடுகுடு விளையாட்டு . |
| கபடு | சூது , வஞ்சனை . |
| கபந்தம் | தலையற்ற உடல் , முண்டம் , அறிவிலி . |
| கபநாசம் | கண்டங்கத்தரி . |
| கபநாசனி | தேற்றாங்கொட்டை . |
| கபம் | கோழை , சிலேட்டுமம் , சளி , மார்ச்சளி . |
| கபம்பம் | வாலுளுவை . |
| கபர்த்தம் | சிவபிரான் சடை . |
| கபர்த்தி | சடையையுடைய சிவன் . |
| கபரி | பெருங்காயம் . |
| கபரோகம் | சிலேட்டும நோய் , காசநோய்வகை . |
| கபவாதசுரம் | சிலேட்டுமவாதங்களின் சேர்க்கையால் தோன்றும் சுரநோய் . |
| கந்துதல் | கெடுதல் ; கூச்சமடைதல் . |
| கந்துமாறிக்கட்டுதல் | நுகத்தில் மாடுகளை மாற்றிக்கட்டுதல் ; தந்திரம் செய்து புரட்டுதல் . |
| கந்துமாறுதல் | இணைத்ததை மாற்றிவிடல் , நுகத்திற் பூட்டிய மாடுகளை வலமிடம் மாற்றிக் கட்டுதல் . |
| கந்துவட்டி | பிடிப்புவட்டி . |
| கந்துவான் | பிணைகயிறு . |
| கந்துள் | கரி . |
| கந்துளம் | பெருச்சாளி . |
| கந்தேறு | கோடகசாலை என்னும் ஒருவகைப் பூடு . |
| கந்தை | கிழிந்த ஆடை , பீற்றல் துணி , சிறு துகில் ; கருணைக்கிழங்கு . |
| கந்தோடம் | குவளைவகை . |
| கந்தோதம் | தாமரை ; குவளை . |
| கப்பங்கட்டுதல் | திறைசெலுத்தல் . |
| கப்பச்சு | கம்மாளர் கருவியுள் ஒன்று . |
| கப்படம் | கந்தைச்சீலை ; சீலை ; ஆடை . |
| கப்படா | அரைக்கச்சை . |
| கப்படி | கொடுக்கு . |
| கப்படிமரம் | வேரில் இருந்து கிளைத்தெழும்பும் ஒருவகை மரம் . |
| கப்பணம் | இரும்பால் ஆனைநெருஞ்சி முள்போலப் பண்ணிய கருவி ; ஒருவகைக் கழுத்தணி ; கைவேல் ; காப்புக்கயிறு ; கொச்சைக் கயிறு . |
| கப்பம் | திறைப்பொருள் ; சிற்றரசர் பேரரசருக்குக் கொடுக்கும் திறை ; கற்பம் . |
| கப்பரை | பிச்சைக் கலம் ; மட்கலம் ; திருநீற்றுக் கலம் ; கிடாரம் . |
| கப்பல் | மரக்கலம் . |
| கப்பல்மிளகு | மிளகாய் . |
| கப்பல்வாழை | ரசதாளி , வாழைவகை . |
| கப்பலேற்றுதல் | தண்டனையாகத் தொலைவிலுள்ள நாட்டிற்கு அனுப்புதல் , நாட்டைவிட்டு வெளியேறுதல் ; அம்பலப்படுத்துதல் . |
| கப்பலோட்டி | மாலுமி ; கப்பலின் வேலையாள் . |
| கப்பலோட்டுதல் | மரக்கலஞ் செலுத்துதல் . |
| கப்பலோடுதல் | நாவாய் செல்லுதுல் ; கடல் கடந்து வாணிகம் செய்தல் . |
| கப்பற்கடலை | பட்டாணிக்கடலை . |
| கப்பற்கதலி | வாழைவகை . |
| கப்பற்காரன் | கப்பல் தலைவன் ; கப்பலில் வேலை செய்வோன் . |
| கப்பற்கால் | படகு . |
| கப்பற்படை | கடற்படை ; கப்பலுக்குரிய பொருள் . |
| கப்பற்பாட்டு | கப்பற்காரர் பாடும் ஓடப்பாடல் , ஏலேலோப் பாட்டு . |
| கப்பற்பாய் | கப்பலிற் காற்றை வாங்குவதற்காகச் சீலையால் அமைத்த பாய் . |
| கப்பறை | தாய விளையாட்டில் ஒரு கணக்கு . |
| கப்பாசு | தூய்மை செய்யாத பருத்தி . |
| கப்பி | தவசம் ; சிறுநொய் ; கயிறிழுக்குங் கருவி ; நெய்வோர் கருவியுள் ஒன்று ; பொய்யுரை ; சல்லி . |
| கப்பிக்காய் | பருவமல்லாக் காலத்தில் காய்க்கும் காய் . |
| கப்பித்தல் | கிளைவிடல் ; பெருத்தல் ; முகையரும்பல் . |
| கப்பிப்பிஞ்சு | இளம்பிஞ்சு ; பருவம் அலலாக் காலத்தில் தோன்றிய பிஞ்சு . |
| கப்பிப்பூ | உரிய காலத்தில் ஒருசேர இலுப்பைப்பூ விழுகை . |
|
|
|