கபவிரோதி முதல் - கம்பளிப்பூச்சி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கம்பளிப்பூச்சி உடலில் மயிருள்ள ஒருவகைப் புழு .
கம்பளி ஆட்டுமயிரினாற் செய்யப்பட்ட ஆடை முதலியன ; ஆட்டின் மயிர் ; ஒருவகை ஆடு ; கம்பளிச்செடி ; தாறுமாறு ; ஒருவகைப் பூச்சி .
கம்பளிச்செடி முசுக்கட்டை .
கபிலப்பொடி மரவகை .
கபிலம் புகர்நிறம் , கருமை கலந்த பொன்மை ; உபபுராணங்கள் பதினெட்டனுள் ஒன்று ; கரிக் குருவி ; கபிலப்பொடி .
கபிலமதம் கபிலரால் ஏற்படுத்தப்பட்ட சாங்கிய மதம் .
கபிலர் உருத்திரர் ; ஒரு புலவர் .
கபிலை எருதுகளைப் பூட்டி நீரிறைக்கும் ஏற்றம் , கருமை கலந்த பொன்மை ; காராம் பசு ; தெய்வப்பசு ; காமதேனு ; தென்கீழ்த்திசைப் பெண்யானை ; ஓர் ஆறு ; மணப்பண்டவகை .
கபுக்குக்கபுக்கெனல் ஓர் ஒலிக்குறிப்பு .
கபோதகத்தலை கொடுங்கையைத் தாங்குதலையுடைய பலகை .
கபோதகம் புறா ; சிற்பவுறுப்புகளுள் ஒன்று .
கபோதம் புறா ; கரும்புறா ; புறாமுட்டிச் செடி ; கொடுங்கை ; பெருவிரல் விட்டு நிமிர மற்றை நான்கு விரல்களும் ஒட்டி நிமிரும் இணையா வினைக்கை ; இரண்டு கைகளையும் கபோதையாகக் கட்டுவது .
கபோதி குருடன் ; அறிவிலி ; பெண்புறா .
கபோலம் கன்னம் , தாடை .
கம் வானம் ; காற்று ; மேகம் ; வெண்மை ; உயிர் ; தலை ; நீர் ; ஆடு ; தொழில் ; கம்மியர் தொழில் ; வீட்டின்பம் ; மண்டையோடு ; பிரமன் .
கம்பக்கணை மனஞ்சலியாதவன் .
கம்பக்கூத்தாடி கழைக்கூத்தன் .
கம்பங்கூத்தாடி கழைக்கூத்தன் .
கம்பக்கூத்து கழைக்கூத்து .
கம்பங்களி கம்புமாவாற் சமைத்த களி .
கம்பங்கொளுத்தல் கம்பவாணத்துக்கு நெருப்புவைத்தல் .
கம்பங்கோரை ஒருவகைப் புல் .
கம்பசூத்திரம் குறிப்புப் பொருள் அடங்கிய கம்பன் கவி ; விடுவிக்க இயலாத புதிர் .
கம்பசேவை கம்பத்தில் திருவிளக்கு ஏற்றிச் செய்யும் பூசை .
கம்பஞ்சம்பா சம்பா நெல்வகை .
கம்பட்டக்காரன் காசு செய்வோன் .
கம்பட்டக்கூடம் நாணயசாலை .
கம்பட்டம் காசு , நாணயம் .
கம்பட்டமுளை நாணய முத்திரை .
கம்படி ஊர்ப்புறத்துக் கம்பு விளைவிக்கும் நிலம் .
கம்பத்தக்காரன் நிலச் சொந்தக்காரன் ; செல்வன் .
கம்பத்தம் சொந்த வேளாண்மை , வேளாண்மை .
கம்பத்து தோணியின் ஓட்டை ; கப்பலில் விழும் ஓட்டை ; பகட்டு .
கம்பத்துப்பார்த்தல் கப்பலின் ஓட்டையை அடைத்தல் .
கம்பதாளி ஒருவகை நோய் .
கம்பபாணம் நீண்ட கம்பத்தில் இணைத்துக் கொளுத்தப்படும் வாணம் .
கம்பவாணம் நீண்ட கம்பத்தில் இணைத்துக் கொளுத்தப்படும் வாணம் .
கம்பம் தூண் ; விளக்குத்தண்டு ; கொடிமரம் ; அசைவு ; நடுக்கம் ; கச்சி யேகம்பர்கோயில் ; பாய்மரம் .
கம்பம்புல் புல்வகை .
கம்பரிசி கம்புத்தவசம் .
கம்பல் ஆடை ; ஆரவாரம் .
கம்பலம் கம்பளி ; இரத்தினக் கம்பளம் ; செவ்வாடை ; மேற்கட்டி ; கம்பலை , ஆரவாரம் .
கம்பலை நடுக்கம் ; அச்சம் ; துன்பம் ; சச்சரவு ; ஆரவாரம் ; மருதநிலம் ; யாழோசை .
கம்பலைகட்டுதல் சச்சரவு செய்தல் .
கம்பலைத்தல் ஆரவாரித்தல் .
கம்பலைப்படுதல் சண்டை செய்தல் .
கம்பலைமாரி சினமுடையவள் ; ஒரு பெண் தெய்வம் .
கம்பளத்தான் ஒரு சாதியான் .
கம்பளம் ஆட்டுமயிரினாற் செய்யப்பட்ட போர்வை முதலியன ; கம்பளிப் போர்வை ; செவ்வாடை ; செம்மறிக்கடா ; மயிர்ப்படாத்தாலாகிய இருக்கை ; தொட்டியச் சாதி ; சருக்கரைப் பூசணி .
கம்பளர் மருதநில மாக்கள் ; தொட்டியச் சாதியார் .
கபவிரோதி சிற்றரத்தை .
கபாடக்கட்டி வசம்பு .
காடபந்தனம் கதவடைப்பு .
கபாடம் கதவு ; காவல் ; பொதி .
கபாய் நிலையங்கி , மேற்சட்டை .
கபால் கபாலம் , தலையோடு .
கபாலக்கரப்பான் தலையில் வரும் ஒரு நோய் .
கபாலக்குத்து கடுந்தலைவலி .
கபாலச்சூலை கடுந்தலைவலி .
கபாலசாந்தி ஆவிரை .
கபாலதரன் பிரமன் தலையோட்டைக் கையிலும் தலையோடுகளை மாலையாகக் கழுத்திலும் கொண்ட சிவன் .
கபாலநீர் தலையிலேறிய கெட்ட நீர் .
கபாலபாணி கபாலத்தைத் கையிலேந்திய சிவன் .
கபாலம் மண்டையோடு ; இரப்போர் கலம் ; சிவன் ஐயமேற்கும் பாத்திரம் ; கடுந்தவைலி ; நீர்க்குடத்தின் ஒரு பகுதி ; முட்டையின் ஒரு பகுதி .
கபாலமூர்த்தி காண்க : கபாலதரன் .
கபாலரேகை தலையெழுத்து .
கபாலவாசல் தலையின் உச்சித்தொளை .
கபாலவாடை தலைநோய் .
கபாலவாயு கபாலக்குத்து , நரம்புத் தலைவலி .
கபாலன் சிவன் ; சீர்பந்த பாடாணம் .
கபாலி கபாலத்தையுடைய சிவன் ; வயிரவன் ; உமாதேவி ; பதினோர் உருத்திரருள் ஒருவர் .
கபி குரங்கு ; கயிறிழுக்குங் கருவி .
கபிஞ்சலம் காடை ; சாதகப்புள் ; ஆந்தை ; சிச்சிலிப்பறவை ; ஒரு புண்ணிய சிவத்தலம் .
கபித்தம் விளாமரம் ; அபிநயவகை , சுட்டுவிரல் நுனியும் பெருவிரல் நுனியும் நகங்கள் கௌவப்பிடித்து ஏனைய மூன்று விரலும் மெல்லெனப் பிடிப்பது ; கொட்டிக்கிழங்கு .
கபிதம் கருஞ்சீரகம் .