கம்பளியாடு முதல் - கமலன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கமங்கட்டுதல் சொந்த நிலத்தில் வேளாண்மை செய்தல் .
கமஞ்சூல் நீர் நிறைந்த மேகம் .
கமடம் ஆமை .
கமண்டலம் பிரமசாரிகளும் முனிவரும் வைத்திருக்கும் ஒருவகை நீர்ப் பாத்திரம் , கரகம் .
கமண்டலு பிரமசாரிகளும் முனிவரும் வைத்திருக்கும் ஒருவகை நீர்ப் பாத்திரம் , கரகம் .
கமத்தல் நிறைதல் .
கமத்தொழில் உழவுத்தொழில் .
கமம் நிறைவு ; உழவுத்தொழில் ; வயல் .
கமம்புலம் நிலமும் புலமும் .
கமர் நிலப்பிளப்பு .
கமரதம் மணித்தக்காளி .
கமரிப்புல் ஒருவகைப் புல் .
கமல் வெட்பாலை .
கமலக்கண்ணன் தாமரைக் கண்களையுடைய திருமால் .
கமலகுண்டலமாய் தலைகீழாய் .
கமலகோசிகம் கைகுவித்து ஐந்து விரலும் அகல விரித்துக்காட்டும் இணையா வினைக்கை .
கமலத்தேவி தாமரையை இருப்பிடமாகக் கொண்ட திருமகள் .
கமலத்தோன் பிரமன் .
கமலநிருத்தம் கூத்தின் விகற்பம் .
கமலபாந்தி சூரியன் .
கமலம் தாமரை ; நீர் ; ஒருவகைத் தட்டு ; ஒரு பேரெண் ; பட்டை தீர்ந்த வயிரம் ; செம்படாம் ; கன்றிழந்த பசு .
கமலமனோகரி ஒரு பண்வகை .
கமலயோனி தாமரையில் பிறந்த பிரமன் .
கமலரேகை பதுமரேகை , தாமரை வடிவமைந்த கோடு .
கமலவருத்தனை தொழுதற்கு அறிகுறியாகத் தாமரைமொட்டைப்போலக் கைகளைக் குவித்தல் .
கமலவல்லி காண்க : கமலத்தேவி .
கமலவூர்தி தாமரையை ஊர்தியாகவுடைய அருகக் கடவுள் .
கமலவைப்பு தாமரையுள்ள நீர்நிலை .
கமலன் காண்க : கமலயோனி .
கம்பளியாடு குறும்பாடு .
கம்பன் காஞ்சிபுரத்துச் சிவபிரான் ; தமிழில் இராமாயணம் இயற்றிய பெரும்புலவர் .
கம்பனம் அசைவு ; நடுக்கம் .
கம்பாகம் கப்பற்கயிறு .
கம்பி பொன் , இரும்பு முதலியவற்றின் கம்பி ; காதணிவகை ; கடிவாளம் ; ஆடையின் ஓரச் சிறுகரை ; சித்திரக் கம்பி ; வெடியுப்பு ; காசு ; நீண்ட கொம்பு ; ஒருவகை மரம்' ; கம்பளிப் பிசின் ; அபின் ; தந்தி .
கம்பிகட்டுதல் ஆடைக்குச் சாயக்கரை யிடுதல் ; எழுதகவேலை செய்தல் ; கம்பியால் அணிகலன்கட்கு முத்து முதலியவை கட்டுதல் ; குடைக் கம்பி கட்டுதல் .
கம்பிகாட்டுதல் காண்க : கம்பிநீட்டுதல் .
கம்பித்தல் அசைதல் ; நடுங்குதல் ; முழங்குதல் ; அசைத்தல் ; நடுங்கச் செய்தல் .
கம்பிதம் அசைவு , நடுக்கம் ; கமகம் பத்தனுள் ஒன்று .
கம்பிநீட்டுதல் ஓடிவிடுதல் , ஓடிமறைதல் .
கம்பியச்சு கம்பியிழுக்கும் தட்டார் கருவி .
கம்பிலி கம்பி ; ஓரு மரவகை .
கம்பிவாங்குதல் கம்பியை நீட்டமாக்கல் ; ஒடி விடுதல் .
கம்பிவிளக்கு மின்சாரவிளக்கு .
கம்பீரம் ஆழம் ; ஆழ்ந்த அறிவு ; வீறு ; செருக்கு .
கம்பீரவாக்கு பொருளாழ்ந்த செய்யுள் ; எடுப்பான குரல் .
கம்பீரித்தல் எடுப்பான குரலாற் பேசுதல் .
கம்பு ஒருவகைத் தவசம் ; கம்பம் ; சிறு தடி ; கழி ; மரக்கொம்பு ; செடிகொடிகளின் சிறு தண்டு ; அளவுகோல் ; கட்டுத்தறி ; சங்கு .
கம்புகட்டி நீர் பாய்ச்சுவோன் .
கம்புகம் அபின் .
கம்புள் சங்கு ; சம்பங்கோழி ; நீர்ப்பறவை ; வானம்பாடி .
கம்பை கதவு முதலியவற்றின் சட்டம் ; ஏட்டுச் சுவடிச் சட்டம் ; அதிகார வரம்பு .
கம்மக்குடம் கம்மியர் செய்த குடம் .
கம்மக்கை கடினவேலை .
கம்மகாரர் கப்பலோட்டிகள் .
கம்மத்தம் காண்க : கம்பத்தம் .
கம்மம் கம்மியர் தொழில் .
கம்மல் மகளிர் காதணியுள் ஒன்று ; குரலடைப்பு ; மங்கல் ; மந்தாரம் ; குறைவு .
கம்மாட்டி கம்மாளப்பெண் .
கம்மாணன் கம்மாளன் .
கம்மால் உலோகவேலை செய்யுமிடம் .
கம்மாலை உலோகவேலை செய்யுமிடம் .
கம்மாளச்சி கம்மாளச்சாதிப் பெண் .
கம்மாளன் உலோகவேலை செய்வோன் ; தட்டான் ; கன்னான் , சிற்பன் , தச்சன் , கொல்லன் , பொன்வேலை முதலிய தொழில் செய்யுஞ் சாதியான் .
கம்மாறர் மரக்கல மோட்டுவோர் .
கம்மி தொழிலாளி ; குறைவு .
கம்மியம் கைத்தொழில் ; கம்மாளத்தொழில் .
கம்மியன் தொழிலாளி ; கம்மாளன் ; நெய்பவன் .
கம்முதல் குரல் குன்றல் ; ஒளி குறைதல் .
கம்மெனல் தெளிவின்றி ஒலித்தற் குறிப்பு ; ஓசையடங்கற் குறிப்பு ; மணத்தற் குறிப்பு ; விரைவுக் குறிப்பு .
கம்மை சிறுகீரை .
கமக்காரன் உழவன் .
கமகம் இசை வேறுபாடு அறியுங் குறிப்பு ; ஒன்றையறிதற்கு ஏதுவாயுள்ள குறிப்பு .
கமகமத்தல் மிக மணத்தல் .
கமகமவெனல் மணத்தற் குறிப்பு .
கமகன் நுண்ணறிவினாலும் கல்விப் பெருமையினாலும் கல்லாத நூற்பொருளையும் எடுத்துரைக்கவல்லவன் .