சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கயத்தி | கீழ்மகள் ; கொடியவள் . |
| கயந்தலை | மெல்லிய தலை ; யானைக்கன்று ; மனத்துயர் ; குழந்தை . |
| கயப்பினை | வங்கமணல் . |
| கயப்பு | கசப்பு . |
| கயப்பூ | நீர்ப்பூ . |
| கயம் | மென்மை ; பெருமை ; இளமை ; கீழ்மை ; கீழ்மக்கள் ; கரிக்குருவி ; நீர்நிலை ; நீர் ; கடல் ; ஆழம் ; அகழி ; யானை ; தேய்வு ; குறைபாடு ; கேடு ; காசநோய் . |
| கயமுகன் | யானைத்தலையையுடைய விநாயகன் ; ஓரசுரன் . |
| கயமுனி | யானைக்கன்று . |
| கயமை | கீழ்மை . |
| கயல் | கெண்டைமீன் . |
| கயவஞ்சி | உலுத்தன் . |
| கயவளாகம் | கீழுலகம் . |
| கயவன் | கீழ்மகன் ; கொடியவன் . |
| கயவாய் | கழிமுகம் ; கரிக்குருவி ; எருமை ; பெரியவாய் . |
| கயவாளி | பேராசைக்காரன் ; அயோக்கியன் ; கயையிற் செய்யும் சிராத்தத்தில் உண்ணுதற்குரிய அந்தணன் . |
| கயாவாளி | பேராசைக்காரன் ; அயோக்கியன் ; கயையிற் செய்யும் சிராத்தத்தில் உண்ணுதற்குரிய அந்தணன் . |
| கயவு | பெருமை ; மென்மை ; கழிமுகம் ; களவு ; கரிக்குருவி ; கீழ்மை . |
| கயற்கெண்டை | கெண்டைமீன்வகை . |
| கயிங்கரியபரர் | ஏவல் செய்வார் . |
| கயிங்கரியம் | கைங்கரியம் , ஊழியம் , ஏவல் தொழில் . |
| கயிப்பு | இலாகிரி . |
| கயிரம் | அலரிச்செடி . |
| கயிரவம் | ஆம்பல் ; செவ்வாம்பல் ; வெள்ளாம்பல் . |
| கயிரிகம் | காவிக்கல் . |
| கயில் | தேங்காய்ப்பாதி ; அணிகலக் கடைப் புணர்வு ; பிடரி . |
| கயிலாசம் | காண்க : கயிலை . |
| கயிலாயம் | காண்க : கயிலை . |
| கயிலாயன் | கயிலாய மலைக்குரிய சிவன் . |
| கயிலி | பலவண்ண உடை ; கையொலி . |
| கயிலை | கைலாயமலை . |
| கயிலையாளி | காண்க : கயிலாயன் . |
| கயிலையிற்கடுங்காரி | மாமிசபேதி . |
| கயிற்கடை | கொக்குவாய் . |
| கயிற்றரவு | கயிற்றில் தோன்றும் பாம்புணர்ச்சி . |
| கயிற்றளவு | தவசக் குவியல் முதலியவற்றைக் கயிறுகொண்டு குறிக்கும் அளவு . |
| கயிற்றுக்கோல் | ஒருவகைத் தராசு , காய்கறி முதலியன நிறுக்கும் ஒருவகை நிறைகோல் . |
| கயத்தல் | வெறுத்தல் , கைத்தல் . |
| கமலா | கிச்சிலிவகை . |
| கமலாக்கனி | இரண்டு விரல் கனமுள்ள இரண்டு விறகாலெரிக்குந் தீ . |
| கமலாசனம் | பதுமாசனம் , தாமரைமலர் வடிவில் அமைந்த இருக்கை . |
| கமலாசனன் | தாமரையை இருப்பிடமாகக் கொண்டவன் ; பிரமன் ; அருகன் . |
| கமலாசனி | காண்க : கமலத்தேவி . |
| கமலாலயம் | திருவாரூர்க் குளத்தின் பெயர் . |
| கமலாலயன் | பிரமன் . |
| கமலி | குங்கும பாடாணம் . |
| கமலிப்பட்டு | பட்டாடைவகை . |
| கமலினி | உமாதேவியின் தோழியருள் ஒருத்தி . |
| கமலை | திருமகள் ; திருவாரூர் . |
| கமவாரம் | உழவுக் கருவிகளுக்காக வாங்கும் வாரம் . |
| கமழ்தல் | மணம்வீசுதல் ; தோன்றுதல் ; பரத்தல் . |
| கமறுதல் | மிகவொலித்தல் ; மிக அழுதல் ; மிக வேகுதல் ; நெடியுண்டாதல் . |
| கமனகுளிகை | நினைத்தவிடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் மருந்து , இரசகுளிகை . |
| கமனசித்தி | வானவெளியே நினைத்த இடம் செல்லுந்திறன் . |
| கமனம் | செல்லுகை , போதல் , நடை . |
| கமனித்தல் | போதல் . |
| கமி | மிளகு . |
| கமித்தல் | நடத்தல் ; பொறுத்தல் ; தாங்குதல் . |
| கமுக்கக்காரன் | அடக்கமுள்ளவன் . |
| கமுக்கட்டு | அக்குள் . |
| கமுக்கம் | அடக்கம் , குறையை வெளிப்படுத்தாமை ; இரகசியம் . |
| கமுகம்பூச்சம்பா | ஒருவகை நெல் . |
| கமுகமடல் | கமுகம்பட்டை . |
| கமுகு | பாக்குமரம் . |
| கமுனை | மாதுளை . |
| கமை | பொறுமை ; மலை . |
| கமைத்தல் | பொறுத்தல் , தாங்குதல் . |
| கமைதல் | நிரம்புதல் |
| கமைப்பு | பொறுமை ; அடக்கம் . |
| கய | பெரிய ; மெல்லிய . |
| கயக்கம் | வாட்டம் ; இடையீடு ; கலக்கம் . |
| கயக்கால் | ஊற்றுக்கால் . |
| கயக்கு | மனக்கலக்கம் , சோர்வு . |
| கயக்குதல் | கசக்கச்செய்தல் ; கலங்குதல் . |
| கயங்குதல் | கசங்குதல் ; சோர்தல் ; கலங்குதல் . |
| கயத்தம் | துளசி . |
|
|
|