சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கர்ப்பவோட்டம் | கருக்கொள்ளும் மேகவோட்டம் , மார்கழி மாதத்தில் கருக்கொண்ட மேகத்தின் தென்சார்பான ஓட்டம் . |
| கர்ப்புரை | சாம்பிராணி . |
| கயிறுவெட்டுப்புண் | வடத்தால் அறுபட்ட புண் . |
| கயினி | அத்தநாள் ; கைம்பெண் . |
| கர்க்கசம் | கடினமானது . |
| கர்க்கடக சங்கிராந்தி | ஆடிமாதப் பிறப்பு . |
| கர்க்கடகசிங்கி | கடுக்காய்ப்பூமரம் . |
| கர்க்கடகம் | நண்டு ; ஓர் இராசி . |
| கர்க்கரி | கரகம் ; தயிர்கடை தாழி . |
| கர்ச்சித்தல் | முழங்குதல் . |
| கர்ச்சிதம் | முழக்கம் ; மேகம் ; யானை முதலியவற்றின முழக்கம் . |
| கர்ச்சிப்பு | முழக்கம் ; மேகம் ; யானை முதலியவற்றின முழக்கம் . |
| கர்ச்சினை | பேரொலி . |
| கர்ச்சூர் | பேரீந்து ; கழற்கொடி . |
| கர்ச்சூரம் | பேரீந்து ; கழற்கொடி . |
| கர்ணகடோரம் | செவிக்குக் கடுமையானது . |
| கர்ணகடூரம் | செவிக்குக் கடுமையானது . |
| கர்ணகூசிகை | காதுநோய்வகை . |
| கர்ணசூலை | காதுக் குத்து . |
| கர்ணநாதம் | காதிரைச்சல் நோய் . |
| கர்ணபத்திரம் | ஓலையென்னும் காதணி ; தெய்வத் திருமேனிகட்குச் சாத்தும் காதுபோன்ற அணி . |
| கர்ணபரம்பரை | செவிவழியாக வந்த செய்தி . |
| கர்ணம் | காது ; ஊர்க்கணக்கு வேலை ; ஊர்க்கணக்கன் . |
| கர்ணமந்திரம் | காதோடு சொல்லும் இரகசியம் ; இரகசியம் பேசிப் பெறுஞ் செல்வாக்கு ; இறக்கும் நிலையில் இறப்பவரின் காதில் சபிக்கும் வேதமந்திரம் . |
| கர்ணவேதம் | காதுகுத்தல் . |
| கர்ணவேனம் | காதுகுத்தல் . |
| கர்ணா | ஒருவகை வாத்தியம் . |
| கர்ணிகம் | சன்னிவகை . |
| கர்ணிகை | தாமரைப் பொகுட்டு . |
| கர்த்தத்துவம் | கர்த்திருத்துவம் , கடவுள் தன்மை ; தொழில் நடாத்து முதன்மை . |
| கர்த்த துரோகம் | அரச துரோகம் . |
| கர்த்தபம் | கழுதை . |
| கர்த்தவம் | கழுதை . |
| கர்த்தமம் | சேறு ; பாவம் ; இறைச்சி . |
| கர்த்தரிப் பிரயோகம் | செய்வினை வழக்கு . |
| கர்த்தவியம் | செய்யத்தக்கது . |
| கர்த்தன் | செய்வோன் , வினைமுதல் ; கடவுள் ; தலைவன் . |
| கர்த்தா | செய்வோன் , வினைமுதல் ; கடவுள் ; தலைவன் . |
| கர்த்தாக்கள் | படைப்பு முதலிய தொழில் புரியும் ஐங்கடவுளர் ; மதுரை நாயக்க அரசர் பட்டப் பெயர் . |
| கர்நாடகம் | கன்னடம் , ஒரு மாநிலம் ; தென்னாட்டு இசை ; ஒரு பண் ; பழைய மாதிரி . |
| கர்ப்பக்கிருகம் | கருவறை , ஆலயத்திலுள்ள மூலத்தானம் . |
| கர்ப்பக்குழி | காண்க : கர்ப்பப் பை . |
| கர்ப்பகோசம் | காண்க : கர்ப்பப் பை . |
| கர்ப்பகோளகை | காண்க : கர்ப்பப் பை . |
| கர்ப்பங்கரைதல் | கருச் சிதைதல் ; அச்ச மிகுதல் . |
| கர்ப்பங்கலங்குதல் | கருச் சிதைதல் ; அச்ச மிகுதல் . |
| கர்ப்பச்சடங்கு | கருக்கொண்டவளுக்கு இரண்டாமாதம் முதல் பத்தா மாதம்வரை செய்யுஞ் சடங்குகள் . |
| கர்ப்பச்சூடு | பெற்றோர் வழியாக வரும் குழந்தை நோய்வகை ; அச்சரம் . |
| கர்ப்பசிராவம் | கருச்சிதைவு ; வெள்ளைநோய் . |
| கர்ப்பசீமான் | பிறவிச் செல்வன் . |
| கர்ப்பசூலை | சூதகத் தடை ; கருப்பையில் வேதனை . |
| கர்ப்பந்தரித்தல் | கருக்கொள்ளுதல் . |
| கர்ப்பப் பை | கருத்தங்கும் உறுப்பு . |
| கர்ப்பம் | கரு ; கருக்கொள்கை ; உட்கொண்டது ; நாடகச் சந்தி ஐந்தனுள் ஒன்று ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| கர்ப்பமேகம் | வெள்ளைநோய் . |
| கர்ப்பவதி | கருவுற்ற பெண் , கர்ப்பிணி . |
| கர்ப்பவாசம் | கருப்பத்தில் தங்குகை . |
| கர்ப்பவாதை | மகப்பேற்று வலி . |
| கர்ப்பவாயு | சூதகவாயு , குழந்தை பிறக்கும் காலத்தில் ஏற்படும் ஒருவகை நோய் . |
| கயிற்றுக்கோலாட்டம் | பின்னற் கோலாட்ட விளையாட்டு . |
| கயிற்றுப்பொருத்தம் | கலியாணப் பொருத்தங்களுள் ஒன்றான இரச்சுப் பொருத்தம் . |
| கயிற்றுவலை | ஒருவகை மீன்வலை . |
| கயிற்றேணி | நூலேணி . |
| கயிறடித்தல் | அறுக்கும் மரங்களுக்கு நூல் வைத்துக் காவி முதலியவற்றாற் குறிதட்டுதல் . |
| கயிறு | நூல் முதலியவற்றால் முறுக்கித் திரித்தவடம் , பாசம் ; மங்கலநாண் ; நூல் ; சாத்திரம் . |
| கயிறுகட்டிவிடுதல் | பொய்ச்செய்தி உண்டாக்கிப் பரப்புதல் . |
| கயிறுகட்டுதல் | இல்லாததை உண்டாக்கிச் சொல்லுதல் ; நாட்கழித்தல் ; பாசாங்கு செய்தல் ; வஞ்சித்தல் . |
| கயிறுசாத்துதல் | சாத்திரம் பார்க்க ஏட்டிலே கயிறிடுதல் . |
| கயிறுதடி | நெய்வோர் கருவியுள் ஒன்று . |
| கயிறுதிரித்தல் | கயிறு முறுக்குதல் ; கற்பித்துச் சொல்லுதல் . |
| கயிறுபிடித்தல் | கட்டடம் முதலியவற்றுக்காகக் கயிறுபிடித்து நேர்மையறிதல் . |
| கயிறுபிடித்தறிதல் | கட்டடம் முதலியவற்றுக்காகக் கயிறுபிடித்து நேர்மையறிதல் . |
| கயிறுமாறுதல் | மாடு குதிரை போன்றவற்றை விற்பவர் கயிற்றைப் பிடித்து வாங்குவோர் கையில் கொடுத்தல் . |
| கயிறுமுறுக்குதல் | காண்க : கயிறுதிரித்தல் . |
| கயிறுருவிவிடுதல் | எருது முதலியவற்றை அவிழ்த்துவிடுதல் ; தூண்டிவிடுதல் . |
|
|
|