கர்ப்பூரசிலாசத்து முதல் - கரணி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கரடி ஒரு விலங்கு ; கரடிப்பறை ; கரடிக்கூடம் ; புரட்டு ; முத்து ; சிலம்பம் .
கரடிக்கூடம் அரங்கம் , மல் சிலம்பம் முதலியன பயிலுஞ் சாலை .
கரடிகை கரடி கத்துவதுபோல் ஓசையுண்டாக்கும் பறை .
கரடிப்பறை கரடி கத்துவதுபோல் ஓசையுண்டாக்கும் பறை .
கரடிவிடுதல் பொய்யைக் காட்டிக் கூறுதல் , தொடர்பில்லா ஒன்றைத் கூறிக் கலங்கச் செய்தல் .
கரடிவித்தை சிலம்பவித்தை .
கரடு முருடு ; முருட்டுக் குணம் ; சிறுகுன்று ; காற்பரடு ; மரக்கணு ; புற்கரடு ; வளர்ச்சியற்றது ; ஒருவகை முத்து ; யானையின் மதவெறி .
கரடுமுரடு செம்மையற்றது , ஒழுங்கின்மை .
கரண் காய்கறிகளின் முண்டு ; புண்வடு ; புல்லுடன் கூடிய மண்ணாங்கட்டி .
கரண்டகம் சுண்ணாம்புச் செப்பு ; தென்னை ஓலையால் முடைந்த பூக்கூடை .
கரண்டம் நீர்க்காக்கை ; அணிகலச்செப்பு ; கமண்டலம் ; கரண்டகம் .
கரண்டி உலோகத்தாலாகியதும் காம்புள்ளதுமாகிய முகத்தற் கருவி ; சிறு அகப்பை .
கரண்டிகை பூக்கூடை ; முடியின் ஓர் உறுப்பு .
கரண்டிகைச்செப்பு கரண்டகம் , சுண்ணாம்புச் செப்பு .
கரண்டுதல் சுரண்டுதல் .
கரண்டை கற்பாழி , முனிவர் வாழிடம் ; பறவையின் கதிவிசேடம் ; கமண்டலம் .
கரண்டைக்காய்மோதிரம் பரவ மகளிர் ஒரு விரலுக்கு நாலைந்து வீதம் ஐந்து விரலிலும் அணியும் மோதிரம் .
கரண்டைக்கை முன் கை .
கரணகளேபரம் பொறிகளும் உடலும் .
கரணத்தான் கணக்கன் .
கரணத்தியலவர் அரசர்க்குரிய எண்பெருந் துணைவருள் ஒருவராகிய கணக்கர் .
கரணம் கைத்தொழில் ; இந்திரியம் ; அந்தக்கரணம் ; மனம் ; உடம்பு ; மணச்சடங்கு ; கல்வி ; கூத்தின் விகற்பம் ; தலைகீழாகப் பாய்கை ; கருவி ; துணைக்கருவி ; காரணம் ; எண் ; பஞ்சாங்க உறுப்புகளுள் ஒன்று ; சாசனம் ; கணக்கன் ; கருமாதிச் சடங்குக்குரிய பண்டங்கள் .
கரணம்பாய்தல் கூத்தாடுதல் ; கரணம் போடுதல் .
கரணம்போடுதல் தலைகீழாகப் பாய்தல் ; கெஞ்சுதல் ; தன்னால் இயன்றதெல்லாம் செய்தல் .
கரணவாதனை உடலுறுப்புகளின் பழக்கவறிவு .
கரணன் கணக்கன் .
கரணி மருந்து ; செய்பவன் .
கர்ப்பூரசிலாசத்து ஒருவகை மருந்துக்கல் .
கர்ப்பூரத்துளசி கருப்பூர மணமுள்ள துளசி வகை .
கர்ப்பூரத்தைலம் மணமுள்ள பூச்சுமருந்து ; கருப்பூரத்தினின்று எடுக்குந் தைலம் .
கர்ப்பூரதீபம் கருப்பூரத்தினின்று எரியும் விளக்கு .
கர்ப்பூரப்புல் ஒருவகை மணப்புல் .
கர்ப்பூரமரம் கருப்பூரம் உண்டாதற்குரிய மரம் ; மரவிசேடம் .
கர்ப்பூரவல்லி ஒருவகை மருந்துச் செடி ; ஒரு வகை மணந்தருஞ் செடி .
கர்ப்பூரவள்ளி ஒருவகை மருந்துச் செடி ; ஒரு வகை மணந்தருஞ் செடி .
கர்ப்பூரவாழை வாழைவகை .
கர்ப்பூரவிலை கோயில் நிலங்களுக்குக் கொடுக்கும் விலை .
கர்ப்பூரவெற்றிலை வெற்றிலைவகை .
கர்ப்போட்டம் காண்க : கர்ப்பவோட்டம் .
கர்மணிப்பிரயோகம் செயப்பாட்டுவினை வழக்கு .
கர்மம் செயல் , கருமம் .
கர்மாந்தரம் இறந்தவர் பொருட்டுப் பதினாறாம் நாள் செய்யும் சடங்கு .
கர்மிகள் தொழிலாளிகள் ; காண்க : உலோபி .
கர்லாக்கட்டை உடற்பயிற்சிக்காகக் சுழற்றுந் திரண்டு கனத்த மரக்கட்டை .
கர்வடம் மலையும் ஆறுஞ் சூழ்ந்த ஊர் ; நானூறு ஊருக்குத் தலையூர் .
கர்வம் செருக்கு ; இலட்சங்கோடி ; குபேரனுடைய நிதியுள் ஒன்று .
கர்வி செருக்குள்ளவன் .
கர்வித்தல் செருக்குதல் .
கர்விதன் காண்க : கர்வி .
கர அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தைந்தாம் ஆண்டு .
கரகம் கமண்டலம் ; ஆலங்கட்டி ; நீர்த்துளி ; நீர் ; கங்கை ; தாதுமாதுளை ; வேண்டுதலுக்காக எடுக்கும் பூங்குடம் .
கரகமாடுதல் வேண்டுதலுக்காகப் பூங்குடமெடுத்து ஆடுதல் .
கரகமூக்கு நீர் விழும் கெண்டியின் உறுப்பு .
கரகரணம் கையினாற் செய்யும் அபிநயம் .
கரகரத்தல் உறுத்துதல் ; சீதளம் முதலியவற்றால் தொண்டையில் அரிப்புண்டாதல் ; கடித்தற்குக் கரகரப்பாதல் ; விடாமல் வேண்டுதல் ; அலைக்கழித்தல் .
கரகரப்பிரியா ஒரு பண்வகை .
கரகரப்பு தொண்டையரிப்பு ; குரல் கனத்திருக்கை ; ஓயாது வேண்டுகை ; அலைக்கழிப்பு .
கரகரெனல் தொண்டையரித்தற் குறிப்பு ; வருத்துதற் குறிப்பு ; கடிப்பதற்குக் கரகரப்பாயிருத்தற் குறிப்பு ; பலாத்காரமாய் இழுத்த ஒலிக்குறிப்பு .
கரசம் புலித்தொடக்கி ; கூரிய நுனியுடைய ஓர் ஆயுதம் ; யானை .
கரசரணாதி கைகால் முதலியன .
கரசை கரணம் பதினொன்றனுள் ஒன்று ; கரிசை , 400 மரக்கால் கொண்ட ஓரளவு .
கரஞ்சம் புன்கமரம் .
கரட்டரிதாரம் அரிதாரவகை , ஒரு மருந்து .
கரட்டான் ஓணான்வகை .
கரட்டுக்கரட்டெனல் ஓர் ஒலிக்குறிப்பு .
கரட்டுக்கல் செப்பனிடப்பெறாத முருட்டுக்கல் .
கரட்டுத்தரை மேடுபள்ளமான நிலம் ; கரிசற் பூமி .
கரட்டுவாதம் கழலை ; விதண்டாவாதம் .
கரட்டுவிரியன் செந்நிறமுள்ள விரியன்பாம்பு வகை .
கரட்டோணான் கரட்டு நிலத்தே வாழும் ஓணான் .
கரட்டோந்தி கரட்டு நிலத்தே வாழும் ஓணான் .
கரடகம் கபடம் , வஞ்சனை .
கரடகம்பம் கபடம் , வஞ்சனை .
கரடகன் விரகன் , தந்திரி .
கரடம் காக்கை ; யானையின் மதம் ; யானைக் கவுளினின்றும் மதம்பாயுந் தொளை .