சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கரளம் | நஞ்சு ; எட்டிமரம் . |
| கரளை | வளர்ச்சியின்மை ; குள்ளன் ; வளர்ச்சியற்றது ; பருக்காத காய் . |
| கரன் | நிலையுள்ளவன் ; ஓர் அரக்கன் . |
| கரந்துறைச்செய்யுள் | சித்திரகவி வகையுள் ஒன்று . அஃது ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறு ஒரு செய்யுள் தோன்றும்படி எழுத்துகள் அமைத்துப் பாடப்பெறுவது . |
| கரந்துறைப்பாட்டு | சித்திரகவி வகையுள் ஒன்று . அஃது ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறு ஒரு செய்யுள் தோன்றும்படி எழுத்துகள் அமைத்துப் பாடப்பெறுவது . |
| கரந்தை | திருநீற்றுப்பச்சை ; கொடைக்கரந்தை ; ஒரு பூண்டு ; நிரைமீட்போரணியும் பூ ; மரவகை ; நீர்ச்சேம்புச் செடி ; கரந்தைத் திணை ; குரு ; தவணை . |
| கரந்தைத்திணை | பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்டலைக் கூறும் புறத்திணை . |
| கரந்தையார் | பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்கும் மறவர் . |
| கரநியாசம் | தேவர்களை மந்திராட்சர பூர்வமாக விரல்களில் வைக்கும் கிரியை . |
| கரப்பறை | ஒளிந்திருத்தற்குரிய அறை . |
| கரப்பன் | சொறிப்புண்வகை . |
| கரப்பான் | சொறிப்புண்வகை . |
| கரப்பான்கட்டு | கரப்பான் நோய்வகை . |
| கரப்பான் கொல்லி | கரப்பானைப் போக்கும் மருந்து . |
| கரப்பான்பூச்சி | கரப்புப் பூச்சி . |
| கரப்பிரசாரம் | ஒருவகை அபிநயம் . |
| கரப்பு | மறைக்கை ; களவு ; வஞ்சகம் ; மீன் பிடிக்குங் கூடை , பஞ்சரம் முதலியன ; மத்து ; கரப்பான் பூச்சி . |
| கரப்புக்குடில் | சிறுகுடிசை . |
| கரப்புக்குத்துதல் | கூடுவைத்து மீன்பிடித்தல் . |
| கரப்புநீர்க்கேணி | மறைகிணறு . |
| கரப்பொறி | குரங்குபிடிக்கும் ஒருவகைப் பொறி . |
| கரபத்திரம் | ஈர்வாள் , வாள் . |
| கரபம் | மணிக்கட்டிலிருந்து விரல்வரை உள்ள பகுதி ; யானை ; கழுதை . |
| கரபல்லவம் | கைவிரல் . |
| கரபவல்லபம் | விளாமரம் . |
| கரபாகம் | சூடுபட்டு மென்மையான குளிகை போல் திரளுகிற மருந்துப்பாகம் . |
| கரபாத்திரம் | கையையே பாண்டமாகக்கொண்டு உணவு உண்கை ; பிச்சை பெறுவதற்கான ஓடு . |
| கரம் | கை ; முழம் ; துதிக்கை ; ஓலைக்கொத்தின் திரள் ; ஒளிக்கதிர் ; ஒளி ; குடிவரி ; செய்வது ; வெப்பம் ; அழிவு ; சிறுமை ; திடம் ; இடு மருந்து ; விலையேற்றம் ; கழுதை ; நஞ்சு ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| கரம்பதிவு | வரிப்பதிவுப் புத்தகம் . |
| கரம்பதிவுக்கணக்கு | வரிப்பதிவுப் புத்தகம் . |
| கரம்பு | சாகுபடி செய்யாத நிலம் , தரிசு . |
| கரம்பை | வண்டல் பரந்த பூமி ; வறண்ட களிமண் நிலம் ; தரிசு ; கரம்பு ; சிறுகளா . |
| கரமசாலை | காரமான மசாலை . |
| கரமஞ்சரி | நாயுருவி . |
| கரமர்த்திகை | திராட்சை . |
| கரமாலம் | புகை . |
| கரமுகிழ்த்தல் | கைகூப்புதல் . |
| கரமை | யானை . |
| கரமொழிவு | வரி நீக்கம் . |
| கரலட்சணம் | கையாற்புரியும் அபிநயம் . |
| கரவட நூல் | களவைப்பற்றிக் கூறும் நூல் . |
| கரவடம் | வஞ்சம் ; களவு . |
| கரவடர் | திருடர் ; வஞ்சகர் . |
| கரவடி | தங்க நகைக்கிடும் மெருகுவகை . |
| கரவதம் | காக்கை . |
| கரவம் | காட்டீச்சை மரம் . |
| கரவர் | கள்வர் . |
| கரவல் | கொடாது மறைத்தல் . |
| கரவாகம் | காக்கை . |
| கரவாதி | அரிவாள் கத்தி , சுரிகைக் கத்தி . |
| கரவாபிகை | சிறுவாள் . |
| கரவாரம் | கையை எடுத்து உயர வீசுதல் . |
| கரவாலம் | நகம் . |
| கரவாள் | வாள் , கைவாள் . |
| கரவாளம் | வாள் , கைவாள் . |
| கரவிந்தை | களாச்செடி . |
| கரவீரம் | அலரிச்செடி . |
| கரவு | மறைவு ; வஞ்சனை ; களவு ; பொய் ; முதலை . |
| கரவை | கம்மாளர் கருவியுள் ஒன்று ; கூத்து . |
| கரணிக்கசோடி | கணக்கர் வரி . |
| கரணிகம் | அந்தக்கரணம் ; கூத்தின் விகற்பம் ; கலவி ; ஊர்க்கணக்கு வேலை . |
| கரணியமேனிக்கல் | கரும்புள்ளிக்கல் . |
| கரணை | கொத்துக்கரண்டி ; கரும்பு முதலியவற்றின் துண்டு ; வீணைத் தண்டு ; புண்வடு ; கருணை ; பாவட்டை ; ஒரு செடி ; கிழங்குவகை . |
| கரத்தல் | மறைத்தல் ; கவர்தல் ; கெடாதிருத்தல் ; அழித்து முதற்காரணத்தோடு ஒடுக்குதல் ; கெடுதல் . |
| கரத்தை | வண்டி . |
| கரதபத்திரம் | அரசிறையைக் கணிக்கும் பத்திரம் . |
| கரதலப்பாடம் | கடைதலைப் பாடம் , தலைகீழாகப் பாடம் பண்ணுகை . |
| கரதலம் | கைத்தலம் , கை . |
| கரதாளம் | பனைமரம் ; கைத்தாளம் . |
| கரந்தகற்படை | மதகு ; கற்படுத்து மூடப்பட்ட நகரின் நீர்க்கால் . |
| கரந்துபடை | மதகு ; கற்படுத்து மூடப்பட்ட நகரின் நீர்க்கால் . |
| கரந்துவரலெழினி | நாடகத் திரைச்சீலை . |
| கரந்துறை | கரந்த கற்படை . |
| கரந்துறைகிளவி | உள்ளக் குறிப்பை மறைத்துச் சொல்லும் மொழி . |
| கரந்துறைகோள் | இராகு , கேது , பரிவேடம் , வால்வெள்ளி , வானவில் போன்று மறைந்து சிறுபான்மையாகக் காணப்படும் கோள்கள் . |
|
|
|