சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கரித்தல் | உறுத்தல் ; எரித்தல் ; தாளித்தல் ; உப்புக்கரித்தல் ; வெறுத்தல் ; குற்றம் கண்டு குறைகூறுதல் . |
| கரித்துண்டு | அழுக்குச்சீலை ; கரியின் சிறுபாகம் . |
| கரித்துணி | அழுக்குச்சீலை ; பிடிதுணி . |
| கரிதல் | கருகுதல் ; தீய்தல் ; கருமையாதல் . |
| கரிதன் | அச்சமுள்ளவன் . |
| கரிதூபம் | கரிப்புகை . |
| கரிநாள் | தீயநாள் . |
| கரிப்பான் | காண்க : கரிசலாங்கண்ணி . |
| கரிப்பு | அச்சம் , நிந்தித்தல் ; காரம் . |
| கரிப்புளிப்பு | கரியமிலம் . |
| கரிப்புறத்திணை | புறத்திணையுள் ஒன்று , சான்றோர் கூறியவற்றைச் சான்றாகக் காட்டல் . |
| கரிபிடித்தல் | கரிபற்றுதல் . |
| கரிபூசுதல் | கண்ணேறு நீங்கக் கரிதீட்டுதல் ; அவமதித்தல் . |
| கரிபோக்குதல் | கண்ணுக்கு மை எழுதுதல் ; சான்று கூறுதல் . |
| கரிமருந்து | வெடிமருந்து . |
| கரிமா | எண்வகைச் சித்திகளுள் ஒன்று , மிக்க கனமாயிருக்கை ; யானை . |
| கரிமுகவம்பி | யானைமுக ஓடம் . |
| கரிமுகன் | யானைமுகங் கொண்ட விநாயகர் ; கயமுகாசுரன் . |
| கரிமுட்டைச்சுறா | கடல் மீன்வகை . |
| கரிமுண்டம் | மிகக் கறுத்த ஆள் . |
| கரா | முதலை ; ஆண்முதலை . |
| கராக்கி | கிராக்கி ; விலையதிகம் ; விலையேற்றம் . |
| கராகண்டிதம் | கண்டிப்பாய்ப் பேசுகை . |
| கராசலம் | யானை . |
| கராசனம் | புலி . |
| கராடம் | மருக்காரைச் செடி ; தாமரைக் கிழங்கு . |
| கராத்திரி | யானை . |
| கராம் | காண்க : கரா . |
| கராம்பு | இலவங்கம் . |
| கராமம் | வெண்கடம்பு . |
| கரார்நாமா | உறுதிப்பத்திரம் . |
| கராலகம் | கருந்துளசி . |
| கராளம் | தீக்குணம் ; பயங்கரம் . |
| கராளன் | சிவகணத் தலைவருள் ஒருவன் . |
| கராளி | தீக்குணம் ; அக்கினி பகவானின் ஏழு நாக்குகளுள் ஒன்று . |
| கராளை | காண்க : கரளை . |
| கரி | அடுப்புக்கரி ; நிலக்கரி ; கரிந்தது ; கருமையாதல் ; மிளகு ; நஞ்சு ; மரவயிரம் ; யானை ; பெட்டைக் கழுதை ; சான்று கூறுவோன் ; சான்று ; விருந்தினன் ; பயிர் தீய்கை ; வயிரக்குற்றங்களுள் ஒன்று . |
| கரிக்கட்டை | எரிந்த கட்டை ; மரவகை . |
| கரிக்கண்டு | கரிசலாங்கண்ணிப் பூடு . |
| கரிக்கணை | யானைத் திப்பிலி . |
| கரிக்காத்தாள் | அங்காளம்மன் . |
| கரிக்காந்தல் | கருகிக் காந்தினது ; கலத்தில் அடிப்பற்றின உணவு . |
| கரிக்காப்பு | ஓலையெழுத்து விளங்கக் கரிபூசுகை ; தெய்வத்திருமேனியைச் சுத்திசெய்யும் புற்கரி . |
| கரிக்காரன் | கரி விற்பவன் . |
| கரிக்கால் | நாசகாரன் . |
| கரிக்காளவாய் | சுண்ணாம்புக் காளவாய்வகை . |
| கரிக்கிடங்கு | கரிக்கடை ; அடுப்புக்கரி உண்டாக்குமிடம் . |
| கரிக்குடல் | கற்குடல் . |
| கரிக்குருவி | குருவிவகை . |
| கரிக்கை | கரிசலாங்கண்ணிப் பூடு ; கேடு விளைக்குங் கை . |
| கரிக்கொடி | கருங்கொடிவேலி . |
| கரிக்கோடிடுதல் | கருஞ்சாந்தால் நெற்றிக்குறியாகக் கோடு இடுதல் ; மோவாயில் மயிர் அரும்புதல் . |
| கரிக்கோடு | மாத்துவர் நெற்றியில் இடும் கருஞ்சாந்துக் கோடு . |
| கரிக்கோலம் | கணவன் இறந்ததுமுதற் பத்து நாள் வரை மனைவிக்குச் செய்யும் அலங்காரம் ; கறுத்துத் தோன்றும் நிலை ; அழிஞ்சில்மரம் . |
| கரிகரம் | புணர்ச்சி வகையுள் ஒன்று . |
| கரிகறுத்தல் | கவலையால் முகங்கருகல் ; மிகக் கறுத்தல் . |
| கரிகன்னி | வெருகு , ஒரு கிழங்கு . |
| கரிகாடு | கரிந்த பாலைநிலம் ; சுடுகாடு . |
| கரிச்சால் | காண்க : கரிசலாங்கண்ணி . |
| கரிச்சான் | கரிக்குருவி ; கரிசலாங்கண்ணிப் பூடு . |
| கரிச்சோளம் | கருஞ்சோளவகை . |
| கரிசங்கு | தென்னோலை மூடு , தென்னங்கீற்று . |
| கரிசம் | தேய்கை . |
| கரிசல் | கருமை ; கரியநில விசேடம் ; விலையேற்றம் . |
| கரிசலாங்கண்ணி | கையாந்தகரைப் பூண்டு . |
| கரிசலை | கையாந்தகரைப் பூண்டு . |
| கரிசற்காடு | கருமண்ணிலம் , கரிசலான பகுதி . |
| கரிசனம் | யானைக்கோடு , பொற்றலைக் கையாந்தகரை ; அன்பு ; அக்கறை , பரிவு . |
| கரிசனை | கரிசனம் , அன்பு , அக்கறை . |
| கரிசாலை | காண்க : கரிசலாங்கண்ணி . |
| கரிசு | குற்றம் ; பாவம் ; கரிசை ; உறுதிப்பிடி . |
| கரிசை | நானூறு மரக்கால் அளவு ; 48 படி கொண்ட மூட்டை 64 கொண்டது ; குதிர் . |
| கரிஞ்சம் | அன்றிற்பறவை . |
| கரிணி | மலைக்குகை ; பெண்யானை ; யானை ; மலை . |
| கரித்தண்ணீர் | கரிச்சட்டியைக் கழுவிய நீர் . |
|
|
|