கரிமுரடு முதல் - கருங்காந்தள் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கருக்கழிதல் கூர் மழுங்குதல் ; புதுமை கெடுதல் .
கருக்காம்பாறை இரத்தசூறை .
கருக்காய் பிஞ்சு ; பதர்நெல் ; எள்ளு கொள்ளு முதலியவற்றின் மாறு .
கருக்கானபணம் புது நாணயம் .
கருக்கானவன் ஒழுங்குள்ளவன் ; கண்டிப்பானவன் ; வஞ்சகன் .
கருக்கிக்கொடுத்தல் பத்தியத்துக்குக் கஞ்சி முதலியன காய்ச்சிக்கொடுத்தல் .
கருக்கிடுதல் கூராக்குதல் ; மீசை அரும்புதல் .
கருக்கிடை ஆலோசனை .
கருக்கு ஆயுதப் பற்கூர்மை ; அறுவாளின் பல் ; பனைமட்டை ; இலைகளின் கருக்கு ; கூர்மை ; அறிவுக்கூர்மை ; நேர்மை ; பனங்காய்த்தோற்கருக்கு ; போதைப் பொருள் ; பொறித்த சித்திரம் ; புதுமை ; தூய்மை ; அழகு ; இளநீர் ; கொத்துளி .
கருக்குடி சவர்க்காரம் ; அழுக்கு நீக்கும் வழலை முதலியன .
கருக்குதல் கருகச்செய்தல் ; எரித்தல் ; காய்ச்சுதல் ; திட்டுதல் .
கருக்குப்பட்டு ஒருவகைப் பணிகாரம் .
கருக்குமீசை முறுக்கிய மீசை .
கருக்குவாய்ப்படுதல் ஆயுதவலகு கூர்மைப் படுதல் .
கருக்குவாள் கூர்மையான வாள் .
கருக்குவாளி கருக்குவாய்ச்சிமரம் .
கருக்குவிடுதல் மீசை அரும்புதல் .
கருக்குவேலை சிற்பவேலை .
கருக்குழி கருப்பப் பை .
கருக்கூட்டுதல் கருக்கட்டுதல் , சினைத்தல் ; உதவிசெய்தல் ; நியாயம் தேடுதல் .
கருக்கூடு கருப்பை ; சினைப்பை .
கருக்கொள்ளுதல் கருப்பமடைதல் , உருப்பிடித்தல் .
கருக்கோடுதல் காண்க : கருக்குவிடுதல் .
கருகல் கருகிய பொருள் ; கருகுதல் ; தீய்ந்து போகை ; சோறு கறிகளின் காந்தல் ; மங்கலான ஒளி ; தெளிவில்லாப் பேச்சு ; மாலைநேரம் ; மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்றாகிய இருள் .
கருகற்புண் ஆறின புண் .
கருகுதல் நிறங்கறுத்தல் ; பயிர் முதலியன தீய்தல் ; இருளுதல் ; மனம் வருந்துதல் ; வாடுதல் .
கருகும்மெனல் மிக இருளுதற் குறிப்பு .
கருகுமணி மகளிர் உட்கழுத்தில் அணியும் கறுப்பு மணிவகை .
கருகுமாலை மாலையில் தோன்றும் மங்கலான வெளிச்சம் .
கருகூலம் கருவூலம் , பொருளறை , கருப்புக் கட்டி .
கருங்கடல்வண்ணன் கடலின் நிறத்தை ஒத்த திருமால் ; ஐயனார் .
கருங்கன் கண்ணெச்சில் , திருட்டிதோடம் .
கருங்கண்ணி கரிய கண்களையுடையவள் ; ஒரு மீன்வகை ; பருத்திவகை .
கருங்கந்து நெற்களத்தில் பொலிக்கந்துக்கு அடுத்துவிழும் பதர் .
கருங்கரப்பன் கரப்பான்வகை .
கருங்கல் பாறைக்கல் ; மலைக்கல் ; சிகிமுகிக்கல் .
கருங்கலம் மண் ஏனம் , மட்பாண்டம் .
கருங்களா கடல்மீன்வகை .
கருங்கற்றலை கடல்மீன்வகை , வெள்ளைக்கற்றலை மீன் .
கருங்காஞ்சொறி சிறுகாஞ்சொறி .
கருங்காடு சுடுகாடு .
கருங்காடை கறுப்புக் காடைப்பறவை .
கருங்காணம் காட்டுக்கொள் .
கருங்காந்தள் கார்க்கோடல் .
கரிமுரடு கரிக்கட்டை .
கரிமுள்ளி நாய்முள்ளிச்செடி .
கரியடுப்பு கரியிட்டெரிக்கும் அடுப்பு .
கரியநிம்பம் கறிவேம்பு .
கரியபோளம் ஒருவகைப் பூடு ; இரத்தபோளம் .
கரியமணி கருகுமணி ; கண்மணி ; கருஞ்சீரகம் .
கரியமால் கருநிறமுள்ள திருமால் ; துளசி ; ஒரு நஞ்சு .
கரியமான் கறுப்புமான் .
கரியமிலவாயு வாயுவகை , கரிவளி .
கரியர் நடுச்செல்வோர் , சாட்சிக்காரர் ; கீழ்மக்கள் .
கரியல் வளராத மரம் ; ஒருவகைத் துகில் ; கருகல் ; வெஞ்சனவகை .
கரியல்வடலி பனங்கருக்கு .
கரியவன் கருநிறத்தவன் ; திருமால் ; இந்திரன் ; சனி ; கள்வன் ; நடுச்செல்வோன்
கரியன் கருநிறத்தவன் ; திருடன் .
கரியார் கருநிறம் உடையார் ; கீழ்மக்கள் ; சான்று கூறுவோர் .
கரியாள் குதிரைவகை .
கரில் குற்றம் ; கொடுமை ; கார்ப்பு .
கரிவாகனன் யானையின் மீது செல்லும் இந்திரன் ; ஐயனார் .
கரிவாளை ஒருவகைப் பெரிய கடல்மீன் .
கரிவு வெந்துபோனது ; பயிர்தீய்கை .
கரீத்துபட்டி கைச்சாத்து .
கரீப்பு எளிய , தாழ்ந்த .
கரீரம் மிடா ; கும்பராசி ; அகத்திமரம் ; கருவேலமரம் ; முளை ; மூங்கில்முளை ; யானை ; யானைத் தந்தத்தின் அடிப்பகுதி .
கரு கருப்பம் ; முட்டைக்கரு ; முட்டை ; உடம்பு ; குழந்தை ; குட்டி ; அச்சுக்கரு ; நிமித்த காரணம் ; நடு ; உட்பொருள் ; வித்தின் கரு ; அடிப்படை ; கருப்பொருள் ; அணு ; இயற்கையறிவு ; கறுப்பு ; நிறம் ; ஆயுதத்தின் பல் ; குப்பைமேடு .
கருக்கட்டுதல் உலோகத்தால் உருவம் வார்ப்பதற்கு அச்சுக்கரு அமைத்தல் ; மழைக்குணங்கொள்ளுதல் ; யோசனைபண்ணுதல் .
கருக்கம் கார்மேகம் .
கருக்கறுவாள் பற்கள் உள்ள அறுவாள் .
கருக்கரைதல் கருவழிதல் .
கருக்கல் இருள் ; மங்கின இருட்டு ; விடியற்காலை ; அடர்ந்த மந்தாரம் ; கருக்கல்நெல் ; காய்ந்த பயிர் ; சப்பட்டை ; பயனற்ற பொருள் .
கருக்கல்நெல் மணிபிடியாத நெல் .
கருக்கலிடுதல் அடர்த்தியான மந்தாரமாதல் , மேகமூட்டினால் இருளாதல் ; நெல்லிக்காய் போன்றவற்றைக் கருநிறம் ஆகும்வரை ஊறவைத்துப் பக்குவப்படுத்தல் .