கருங்காய் முதல் - கருடோற்சவம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கருடன் வைனதேயன் ; திருமால் வாகனம் ; பருந்துவகை ; கொல்லங்கோவைச் செடி .
கருடன் கிழங்கு பெருமருந்து .
கருடாசனம் யோகாசனவகை .
கருடாரூடன் கருடன்மேல் வீற்றிருக்குந்திருமால் .
கருடி சிலம்பம் ; கரடிக்கூடம் .
கருடிவித்தை காண்க : கரடிவித்தை .
கருடுதல் விரும்புதல் .
கருடோற்காரம் மரகதவகை .
கருடோற்சவம் திருமால் கருடாரூடராய்க் காட்சி கொடுக்கும் திருநாள் .
கருங்குங்கிலியம் ஒருவகை மருந்துப்பொருள் .
கருங்குட்டம் குட்டநோய்வகை .
கருங்குணம் தீக்குணம் .
கருங்குதிரையாளி கருங்குதிரை மீது செல்லும் வைரவன் .
கருங்குந்தம் கண்ணோய்வகை .
கருங்கும்மெனல் காண்க : கருகும்மெனல் .
கருங்குரங்கு கருநிறக் குரங்கு .
கருங்குருவி கரிக்கருவி .
கருங்குவளை நீலோற்பலம் ; குவளைவகை ; நெய்தல் .
கருங்குறுவை குறுகிய காலத்தில் விளையும் ஒருவகை நெல் .
கருங்குன்றி துவரைவகை ; ஒருவகைக் குன்றி .
கருங்கூத்து இழிவான நாடகம் .
கருங்கேசம் வெண்கலம் .
கருங்கை வலிய கை ; கொல்லுங் கை .
கருங்கொடி கொடிவகை ; வெற்றிலைவகை .
கருங்கொண்டல் தென்கீழ்காற்று ; வடகீழ்காற்று .
கருங்கொல் இரும்பு .
கருங்கொல்லன் இரும்புவேலை செய்வோன் , கருமான் .
கருங்கொன்றை மஞ்சட்கொன்றை .
கருங்கோள் இராகு .
கருச்சிதம் முழக்கம் ; வீராவேசம் .
கருஞ்சரக்கு நெல் முதலிய பதினெண்வகைப் பண்டம் , கூலம் .
கருஞ்சனம் முருங்கைமரம் .
கருஞ்சாதி கீழ்மக்கள் .
கருஞ்சாந்து குழைசேறு .
கருஞ்சார் அரைப்பொருத்து .
கருஞ்சாரை சாரைப்பாம்புவகை .
கருஞ்சிலை கருநிறக்கல் .
கருஞ்சிவதை ஒருவகைச் செடி .
கருஞ்சிவப்பு கருமை கலந்த செந்நிறம் .
கருஞ்சிறைப் பறவை மயில் .
கருஞ்சீரகம் ஒரு சரக்கு , சீரகவகை .
கருஞ்சுக்கான் ஒருவகைக் கல் .
கருஞ்சுக்கிரன் கண்ணோய்வகை .
கருஞ்சுரை சுரைவகை , காட்டுக்கத்திரி .
கருஞ்செம்பை ஒருவகைச் செடி .
கருஞ்செய் நன்செய் நிலம் .
கருஞ்செவ்வாப்பு பிறந்த குழந்தையின் நோய்க்குறியான நிறவேறுபாடு .
கருஞ்சேரா கடித்தலால் உடம்பில் கறுப்பு நிறமான தடிப்பை உண்டாக்கும் ஒரு நச்சுப்பூச்சி .
கருஞ்சேவகம் பெருவீரச் செயல் .
கருடக்கல் பாம்பின் நஞ்சைப் போக்கும் கல் .
கருடக்கை நின்று வணங்குதலைக் காட்டும் இணைக்கைவகை .
கருடக்கொடி கருடன் எழுதப்பெற்ற கொடி ; குறிஞ்சாக்கொடி ; பெருமருந்து .
கருடக்கொடியோன் கருடக்கொடியையுடைய திருமால் .
கருடகம்பம் திருமால் கோயில் கொடிமரம் ; கருடன் சன்னதியை அடுத்து இருக்கும் விளக்குத் தூண் ; கருடக்கொடித் தூண் ; வைணவ அடியவர் வலம்வருங்கால் கையில் ஏந்திச் செல்லும் எரியும் விளக்குத்தண்டு .
கருடகேதனன் திருமால் , கருடக்கொடியோன் .
கருடசாரம் கடலுப்பு .
கருடசானம் கருடத்தியானம் .
கருடத்துவசன் காண்க : கருடகேதனன் .
கருடத்தொனி ஒரு பண்வகை .
கருடதரிசனம் கருடனைக் கண்டு வணங்குகை .
கருடதிசை கிழக்கு .
கருடப்பச்சை ஒருவகை மரகதம் , கருடக்கல் .
கருடப்பார்வை கூரிய பார்வை ; மாறுகண் ; நஞ்சு தீர்க்கும் பார்வை .
கருடபக்கம் ஒருவகை நிருத்தக்கை .
கருடபஞ்சமி ஆவணி மாதத்துச் சுக்கிலபட்சப் பஞ்சமியில் சுமங்கலிகளால் கொண்டாடப்படும் நோன்பு .
கருடபஞ்சாக்கரம் ஐந்தெழுத்தாலாகிய கருடமந்திரம் .
கருடமுகம் முகம் மட்டும் வெள்ளை நிறமாயிருக்கும் மாட்டுக்குற்றம் .
கருடர் பதினெண் கணத்தாருள் ஒரு வகுப்பார் .
கருடவாகனன் கருடனை ஊர்தியாகவுடைய திருமால் .
கருங்காய் கொஞ்சங்குறைய முற்றிய பயிர் அல்லது காய் ; இளம்பாக்கு .
கருங்கால் காலிற்காணும் மாட்டுநோய்வகை ; கருமையான கால் .
கருங்காலி மரவகை ; எட்டிமரம் ; கேடு சூழ்வோன் .
கருங்காலித்தைலம் மேகநோய்களுக்குப் பயன் படுத்தும் தைலவகை .
கருங்காவி கருங்குவளை .
கருங்கிரந்தி உடம்பின் தோலைக் கருநிறமாக்குவதாய்க் குழந்தைகட்கு வருவதான ஒருவகை நோய் .