சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| காமப்பூ | மதனகாமப் பூ , கொடிச் சம்பங்கி . |
| காமப்பேய் | அறிவினை யழிக்குந் தீராப் பெருங்காமம் ; காமம் மிக்கவன் . |
| காமப்பைத்தியம் | அறிவினை யழிக்குந் தீராப் பெருங்காமம் ; காமம் மிக்கவன் . |
| காமப்போர் | புணர்ச்சி . |
| காமபாலன் | தன்னை அடைந்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுபவனான பலராமன் . |
| காமபீடம் | மாந்தர் விரும்பும் முத்திபோகங்களைக் கொடுப்பதாகிய காஞ்சிபுரம் . |
| காமபூமி | இன்புவுலகு , போகபூமி . |
| காமம் | ஆசை , அன்பு , விருப்பம் ; இன்பம் ; புணர்ச்சியின்பம் ; காமநீர் ; ஊர் ; குடி ; இறை . |
| காமமரம் | ஒரு வகை மரம் . |
| காமமலடி | கனவினால் கருப்பம் நசிக்கப் பெறுபவள் . |
| காமர் | விருப்பம் ; அழகு ; காமுகர் . |
| காமரசி | நெருஞ்சில் . |
| காமரம் | அடுப்பு ; அத்தநாள் ; இசை ; சீகாமரம் ; வண்டு ; அகில்மரம் ; ஆலமரம் ; காவடித் தண்டு . |
| காமரி | புளிநறளைச் செடி . |
| காமரீசம் | புல்லுருவி . |
| காமரூபம் | விரும்பியபடி மேற்கொள்ளுகிற வடிவம் ; ஒரு நாடு . |
| காமரூபி | பச்சோந்தி ; நினைத்த உருவங்கொள்பவன் . |
| காமல்லிகை | வனமல்லிகை . |
| காமல¦லை | புணர்ச்சி . |
| காமலை | கண்ணில் உண்டாகும் ஒருவகை நோய் . |
| காமாலை | கண்ணில் உண்டாகும் ஒருவகை நோய் . |
| காமவல்லபை | நிலவு . |
| காமவல்லி | கற்பகத்தில் படருங் கொடி . |
| காமவாயில் | இயற்கை அன்பு . |
| காமவிகாரம் | காமத்தால் உண்டாகும் வேறுபாடு . |
| காமவிடாய் | கலவி விருப்பம் . |
| காமவெறி | காமப் பைத்தியம் . |
| காமவேதம் | காமசாத்திரம் . |
| காமவேழம் | நாணல் . |
| காமவேள் | மன்மதன் . |
| காமற்கடந்தோன் | புத்தன் . |
| காமற்காய்ந்தோன் | சிவன் ; அருகன் . |
| காமன் | மன்மதன் ; பௌத்த மதத்திற் கூறப்படும் தீமை விளைக்குந் தெய்வம் ; ஒருவகை வரிக்கூத்து ; இந்திரன் ; வண்டு ; திப்பிலி . |
| காமன்கணை | அசோகம் ; குவளை , தாமரை , மாம்பூ , முல்லை என்னும் ஐந்து மலரம்புகள் . |
| காமன்கொடி | மீன் . |
| காமன்பண்டிகை | மன்மத தகனத் திருவிழா . |
| காமன்வில் | கரும்பு . |
| காமனாள் | இளவேனிற்காலம் . |
| காம்பு | பூ , இலை முதலியவற்றின் தாள் ; மலர்க்கொம்பு ; கருவிகளின் கைப்பிடி ; மூங்கில் ; ஆடைக்கரை ; ஒருவகைப் பட்டாடை ; பூசணி ; அம்புச்சிறகு . |
| காம்புக்கிண்ணம் | கைப்பிடியுள்ள ஏனம் . |
| காம்புச்சத்தகம் | ஓலை வாருஞ் சிறுகத்தி . |
| காம்புச்சல்லடை | சல்லடைவகை . |
| காம்புப்புகையிலை | காம்புடன் கூடிய புகையிலை . |
| காம்போகி | குன்றி . |
| காமக்கடப்பு | காமமிகுதி . |
| காமக்கடவுள் | வழிபடு தெய்வம் . |
| காமக்கண்ணி | காஞ்சியில் கோயில்கொண்டிருக்கும் காமாட்சியம்மன் . |
| காமக்கலகம் | புணர்ச்சி ; ஊடல் . |
| காமக்கவலை | காமமிகுதியால் தோன்றும் துன்பம் . |
| காமக்காய்ச்சல் | காமதாபம் . |
| காமக்கிழத்தி | ஒருவருக்கே உரிமைபூணுங் குலப்பரத்தை மகளாய்க் காமங் காரணமாகத் தலைமகனால் வரைந்துகொள்ளப்பட்டவள் . |
| காமக்குறிப்பு | காதலிற்றோன்றும் மெய்ப்பாடு , காதலை வெளியிடுங் குறிப்பு . |
| காமக்கூட்டம் | தலைவனும் தலைவியும் தம்முள் அன்பொத்துக் கூடுங் கூட்டம் . |
| காமக்கோட்டத்தி | காமக்கோட்டத்தில் உறையும் பார்வதி . |
| காமக்கோட்டம் | காஞ்சியில் உள்ள காமாட்சி கோயில் . |
| காமக்கோட்டி | பார்வதி ; காமக்கோட்டம் ; காமப்பைத்தியம் . |
| காமகாண்டம் | காமன் அம்பாகப் பயன்படுத்தும் ஒருவகைப் பூ . |
| காமகாரம் | காய்மகாரம் , பொறாமை . |
| காமசரம் | மாம்பூ ; காண்க : காமன்கணை . |
| காமசலம் | காண்க : காமநீர் . |
| காமசாலை | சிற்றின்பத்துக்குரிய இடம் . |
| காமத்தீ | காமாக்கினி , காமமாகிய நெருப்பு . |
| காமத்துப்பால் | காமத்தைப்பற்றிக் கூறும் இலக்கணப் பகுதி ; திருவள்ளுவர் திருக்குறளில் அகப்பொருட்பாலாகிய ஒரு பகுதி . |
| காமத்துப்பாலோர் | பரத்தமை கொண்டொழுகுவோர் . |
| காமதகனன் | காமனை எரித்த சிவன் . |
| காமதம் | பூமியில் விழுந்தபின் எடுத்துக் கொள்ளும் பசுவின் சாணம் . |
| காமதேவன் | மன்மதன் . |
| காமதேனு | தேவலோகப் பசு . |
| காமநாசன் | சிவன் . |
| காமநீர் | காமத்தால் தோன்றும் சுக்கிலம் . |
| காமநோய் | காமத்தால் உண்டாகும் துன்பம் . |
| காமப்பற்று | காமவிருப்பு . |
| காமப்பால் | முலைப்பால் . |
| காமப்பித்து | காமப் பைத்தியம் . |
| காமப்புணர்ச்சி | இயற்கைப் புணர்ச்சி . |
|
|
|