காமனூர்தி முதல் - காயக்கிலேசம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
காயக்கிலேசம் உடலை வருத்தி யொடுக்குகை .
காமுகப்பிரியம் கத்தூரி மஞ்சள் .
காமுகன் காம இச்சை மிகுந்தவன் ; மன்மதன் ; திருமால் ; நாகரிகன் .
காமுருகி ஓணான் .
காமுறுதல் விரும்புதல் ; வேண்டிக்கொள்ளுதல் .
காமோத்தீபகம் காமத்தை மிகுவிக்கும் பொருள் .
காய் முதிர்ந்து பழுக்காத மரஞ்செடிகளின் பலன் ; மூவகைச்சீரின் இறுதியிலுள்ள நேரசை ,காய்ச்சீர் ; பழுக்காத புண்கட்டி ; முதிராது விழுங் கரு ; பயனின்மை ; வஞ்சனை விதை ; சொக்கட்டான்காய் ; பக்குவப்படாத விளை பொருள்கள் .
காய்க்கடுக்கன் உருத்திராட்சம் வைத்துக் கட்டிய கடுக்கன் .
காய்க்கறியமுது கடவுட்குப் படைக்குங் கறி .
காய்க்கும்பருவம் காய் தோன்றுங் காலம் ; பிள்ளைபெறும் பருவம் .
காய்கறி உணவுக்குரிய மரக்கறிகள் .
காய்ங்கனி காயும் கனியும் .
காய்ச்சல் உலர்ச்சி ; சுரநோய் ; மனவெரிச்சல் ; வெப்பம் .
காய்ச்சல்காரன் சுரமுள்ளவன் ; பணம் வறண்வன் ; பொறாமையால் மனவெரிச்சல் உள்ளவன் .
காய்ச்சற்பாடாணம் பிறவிப் பாடாணங்களுள் ஒன்று .
காய்ச்சற்பாடு தவசத்தின் நன்றாகக் காய்ந்த நிலை ; நெல் முதலியன உலர்த்துதலால் உண்டாகும் அளவுக்குறைவு ; பொருளிழந்து ஏங்கிநிற்கும் நிலை .
காய்ச்சி துவரை .
காய்ச்சிரக்கு புளிச்சைக்கீரை .
காய்ச்சீர் நேரீற்று மூவசைச் சீர் .
காய்ச்சுக்கட்டி காசுக்கட்டி .
காய்ச்சுக்கல் போலி இரத்தினம் .
காய்ச்சுக்குப்பி திராவகம் காய்ச்சி இறக்கும் குப்பி .
காய்ச்சுண்டை காசுக்கட்டி .
காய்ச்சுப்பு சவட்டுப்பு ; உவர்நீரைக் காய்ச்சியெடுக்கும் உப்பு .
காய்ச்சுமண் வளையல் செய்தற்குரிய மணல் .
காய்ச்சுரை புடமிட்ட பொன் ; புளிச்சைக்கீரை .
காய்ச்சுறுக்கு புளிச்சைக்கீரை .
காய்த்தல் மரஞ்செடி முதலியன காய்களை உண்டாக்குதல் .
காய்த்தானியம் முதிரை ; கதிர்த்தானியம் ; முசுக்கட்டை .
காய்த்துதல் எரியச்செய்தல் ; சினத்தல் ; காய்ச்சுதல் .
காய்த்தும்பை கறித்தும்பை .
காய்தல் உலர்தல் ; சுடுதல் ; மெலிதல் ; வருந்தல் ; விடாய்த்தல் ; வெயில்நிலாக்கள் எறித்தல் ; எரித்தல் ; அழித்தல் ; விலக்குதல் ; வெறுத்தல் ; வெகுளுதல் ; கடிந்துகூறுதல் ; வெட்டுதல் .
காய்நீர் வெந்நீர் .
காய்ப்பழம் முழுதும் பழுக்காத பழம் .
காய்ப்பறங்கி கோழிக்கு வரும் நோய்களுள் ஒன்று .
காய்ப்பனை சாறு எடுக்காத பெண்பனை .
காய்ப்பு வெறுப்பு ; மட்டமான இரும்பு ; மரஞ்செடி முதலியன பலன் தருதல் ; தோலின் தடிப்பு ; தழும்பு .
காய்ப்புமரம் காய்களுள்ள மரம் .
காய்பசி மிக்க பசி .
காய்ம்பனை காய்க்கும் பனை .
காய்ம்பாளை பெண்பனையின் பாளை .
காய்மகாரம் பொறாமை , எரிச்சல் .
காய்மடி பசுவின் வன்முலை .
காய்மரம் காண்க : காய்ப்புமரம் .
காய்மை பொறாமை .
காய்மைகரித்தல் பொறாமைப்படுதல் .
காய்மைகாரி பொறாமைப்பட்டவன்(ள்) .
காய்வள்ளி ஒரு வகை வள்ளிக்கொடி , காட்டுவள்ளி ; சீரகவள்ளி ; வெற்றிலைவள்ளி ; கிழங்குவகை .
காய்வாழை நிறையக் காய்க்கும் வாழை வகை .
காய்விழுதல் கருச்சிதைந்து வெளிப்படுதல் .
காயக்கம் மோகமயக்கம் .
காயக்கரணம் உறுப்பினாற் செய்யும் அபிநயம் .
காமனூர்தி தென்றல் .
காமனை சிறுகிழங்கு ; விருப்பம் .
காமனைங்கணை காண்க : காமன்கணை .
காமாக்கினி காமத்தீ .
காமாட்சி பார்வதி ; காஞ்சிபுரத்து அம்பிகை .
காமாட்சிப்புல் காவட்டம்புல் ; சுன்னாறிப்புல் ; கருப்பூரப்புல் .
காமாட்சிவிளக்கு கலியாணம் முதலிய சிறப்பு நாள்களில் பயன்படுத்தும் பாவைவிளக்கு .
காமாட்டி மண்வெட்டுவோன் ; மூடன் .
காமாதூரன் காம இச்சை மிக்கவன் .
காமாந்தகன் சிவன் ; காமத்தால் அறிவிழந்தவன் .
காமாப்பலகை மரக்கலத்தின் சுற்றுப்பலகை .
காமாரி சிவன் ; காளி .
காமி காம இச்சை மிகுந்தவன் ; உவர்மண் ; பொன்னிமிளை .
காமிகம் இருபத்தெட்டுச் சிவாகமங்களுள் ஒன்று .
காமித்தல் விரும்புதல் ; காமங்கொள்ளுதல் .
காமியக்கல் கோமேதகம் .
காமியகுரு ஈசுரபத்தியும் அறமும் போதிக்கும் குரு .
காமியசத்தி அப்பிரகம் .
காமியம் இச்சிக்கும் பொருள் ; பயன்கருதிச் செய்யும் வினை ; கன்மமலம் ; ஆகாமியம் .
காமியமரணம் தற்கொலை .
காமியர் காமவேட்கையுள்ளோர் .
காமினி பெண் ; ஆகாயகமன மந்திரம் ; அழகு .
காமீ சென்ம லக்கினத்திலிருந்து ஏழாமிடத்துள்ள கோள் .