காயக்குத்தகை முதல் - கார்வண்ணன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கார்த்திகைக்கொள்ளி கார்த்திகைத் திருநாளில் அனற்பொறி தட்டி விளையாடுதற்குரிய அகத்திக்கொள்ளி .
கார்த்திகைத்தேவிமார் காண்க : கார்த்திகைப் பெண்கள் .
கார்த்திகைப்பச்சை பழைய வரிவகை .
கார்த்திகைப்பூ காந்தள் .
கார்த்திகைப்பெண்கள் அறுவராகிய கார்த்திகைப் பெண்டிர் .
கார்த்திகைப்பொரி கார்த்திகைத் திருநாளில் படைக்கும் நெற்பொரி .
கார்த்திகைவிரதம் முருகக்கடவுளைக் குறித்துக் கார்த்திகை நாள்தோறும் கடைபிடிக்கப் படும் நோன்பு .
கார்த்திகைவிளக்கீடு திருக்கார்த்திகைக் கொண்டாட்டமாக வீடு முதலியவற்றில் விளக்கேற்றுகை .
கார்த்திகைவிளக்கு திருக்கார்த்திகையில் ஏற்றப்படும் விளக்கு .
கார்நாற்றம் தலைப்பெயல் மழையால் மண்ணில் தோன்றும் மனம் .
கார்நிறம் கறுப்புவண்ணம் ; மாமிசச்சிலை என்னும் ஒருவகைக் கறுப்புக்கல் .
கார்நெல் கார்காலத்தில் அறுவடையாகும் நெல் .
கார்ப்பணியம் கடும்பற்றுள்ளம் ; பொறாமை .
கார்ப்பருவம் காண்க : கார்காலம் .
கார்ப்பாசம் பருத்திச்செடி .
கார்ப்பாளன் கொடியவன் .
கார்ப்பான் கரிசலாங்கண்ணி .
கார்ப்பு காரம் ; உவர்ப்பு .
கார்ப்பெயல் கார்காலத்து மழை .
கார்பார் அதிகாரம் .
கார்வார் அதிகாரம் .
கார்போகரிசி கார்போகி என்னும் பூண்டின் வித்து .
கார்போகி பூடுவகை .
கார்மணி கரிசலாங்கண்ணி
கார்மலி கடல்
கார்முகம் வில் ; பஞ்சுகொட்டும் வில் ; மூங்கில்
கார்முகில் கருக்கொண்ட மேகம் ; கார்காலத்து மேகம் ; கருமுகில் பாடாணம் .
கார்முல்லை பிரிந்த தலைவன் வருமுன் அவன் வருவதற்குரிய கார்ப்பருவத்தின் குறியாக மேகம் முன்வந்ததைக் கூறும் புறத்துறை .
கார்வண்ணர் அசுரர் .
கார்வண்ணன் திருமால் .
கார்த்திகைக்கிழங்கு கலப்பைக்கிழங்கு .
காயக்குத்தகை நிலையான குத்தகை ஏற்பாடு .
காயகம் இசை மோகமயக்கம் ; வாணிகம் .
காயகற்பம் உடல் நீடித்திருக்க உண்ணும் மருந்து .
காயகன் இசைபாடுவோன் ; மயக்குவோன் .
காயங்கட்டுதல் புண்ணுக்கு மருந்திட்டுக் கட்டுதல் .
காயசன்னி காயம்பட்டதனால் உண்டாகும் இரணசன்னி .
காயசித்தி உடலை நெடுநாள் இருக்கச் செய்யும் வித்தை ; அணிமா , மகிமா முதலிய சித்திகள் ; பொன்னாங்காணி .
காயசித்திக்கடியான் காந்தக்கல் .
காயசித்திச் சுண்ணம் கருப்பூரச் சிலாசத்து .
காயசித்தியானோன் உடல் நீடித்திருக்கப் பெற்றவன் ; சூதபாடாணம் .
காயசித்தியுப்பு அமரியுப்பு
காயடித்தல் விதையடித்தல் .
காயத்திரி நான்முகன் மனைவியாகிய காயத்திரி தேவதை ; அந்தணர் நாள்தோறும் ஓதும் ஒரு வேதமந்திரம் ; நான்கடிகட்குமாக 24 உயிர் எழுத்துக்களுள்ள சந்தம் ; கருங்காலி ; கலைமகள் .
காயத்தையிருத்தி பூவழலை .
காயப்பெண் கனவில் தோன்றி மயக்கி வருத்தும் மோகினி .
காயம் ஆகாயம் ; உடல் ; பெருங்காயம் ; ஐங்காயம் ; மிளகு ; உறைப்பு ; குழம்பில் வெந்த கறித்துண்டு ; கறிச்சம்பாரம் ; காயமருந்து ; காழ்ப்பு ; அடிபட்டதனால் உண்டான புண் ; வடு ; நிலைபேறு .
காயம்படுதல் புண்படுதல் .
காயமருந்து மகப்பெற்றவளுக்குக் கொடுக்கும் காரமருந்து .
காயமேரை அரசாங்கத் தீர்வைபோக எஞ்சிய விளைவில் ஊர்க்குடிகளிடமிருந்து தச்சர் , கொல்லர் முதலிய தொழிலாளிகள் அடையும் ஊதியம் .
காயல் கழி ; கழிமுகம் ; உப்பளம் ; சுரநோய் .
காயா காசாமரம் ; காசாவகை ; பீக்கொஞ்சி .
காயாபுரி உடல் .
காயாம்பூமேனியன் நீலநிறமுடைய திருமால் .
காயாம்பூவண்ணன் நீலநிறமுடைய திருமால் .
காயாமரம் ஒருபொழுதும் காய்ப்பில்லாத மரம் .
காயிகம் உடம்பினாற் செய்வது .
கார் கருமை ; கரியது ; மேகம் ; மழை ; நீர் ; கார்ப்பருவம் ; கார்நெல் ; கருங்குரங்கு ; வெள்ளாடு ; ஆண்மயிர் ; கருங்குட்டம் ; இருள் ; அறிவுமயக்கம் ; ஆறாச்சினம் ; பசுமை ; அழகு ; செவ்வி ; எலி ; கொழு .
கார்க்காய் சந்திரநாகம் ; இராகு ; கார்காலத்தில் காய்க்கும் காய் .
கார்க்கோடகன் எட்டு நாகங்களுள் ஒன்றான கடவுட்பாம்பு ; இரக்கமற்றவன் ; கருடக்கல் .
கார்க்கோடல் கருங்காந்தள் .
கார்க்கோடன் காண்க : கார்க்கோடகன் .
கார்க்கோழி கருங்கோழி ; கருங்காணம் ; கருஞ்சீரகம் .
கார்கரணை கருணை ; கருணைச்செடி .
கார்காலம் ஒரு பருவகாலம் , ஆவணி புரட்டாசி மாதங்கள் ; மேகங்கள் கூடி மழை பெய்யும் காலம் .
கார்கோள் கடல் ; சனி ; ஓமை .
கார்கோளி முத்துக்காசு ; காண்க : கார்க்கோழி .
கார்கோன் ஒரு தலைமை அதிகாரி .
கார்த்தல் உறைத்தல் ; உப்புக்கரித்தல் ; கறுப்பாதல் ; அரும்புதல் ; வெறுத்தல் .
கார்த்தன் துரிசு .
கார்த்திகம் சாந்திர மாதத்துள் எட்டாவது , கார்த்திகை மாதம் .
கார்த்திகேயன் முருகக் கடவுள் .
கார்த்திகை ஒரு நட்சத்திரம் ; ஒரு மாதம் ; கார்த்திகைப்பூ ; கார்த்திகை மாதத்தில் வீடு தோறும் விளக்கேற்றிக் கொண்டாடும் கார்த்திகையோடு கூடிய நிறைமதி நாள் ; துர்க்கை .
காத்திகைக்காசு ஒரு பழைய வரி .
கார்த்திகைக்காணிக்கை ஒரு பழைய வரி .