கார்வலயம் முதல் - காரி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
காராம்பசு நாக்கும் முலைக்காம்பும் கருநிறமாக உள்ள பசு இனம் .
காராம்பி எருது பூட்டி நீரிறைக்கும் கருவிவகை .
காராமணி ஒருவகைப் பயறு , பெரும்பயறு .
காராளர் வேளாளர் ; வணிகர் ; முற்காலத்திருந்த ஒரு முருட்டுச் சாதியார் ; தென்னார்க்காட்டு மாவட்டத்திலுள்ள மலைவாழ்நரான ஒரு வேடச்சாதியார் .
காரான் எருமை ; கருநிறப் பசு .
காரானை மேகம் .
காரி கருமை ; கருநிறம் உடையது ; கரிக்குருவி ; காகம் ; சனி ; நஞ்சு ; கரிய எருது ; காரீயம் ; வாசுதேவன் ; ஐயனார் ; வயிரவன் ; இந்திரன் ; கடையெழு வள்ளல்களுள் ஒருவன் ; காரி நாயனார் ; ஓர் ஆறு ; ஆவிரைச் செடி ; கண்டங்கத்திரி ; செய்பவன் ; பதினாறு படியளவு ; வெண்காரம் ; காரி வள்ளலின் குதிரை ; களர் ; முதுநிலம் ; கீழ்மகன் ; தொழிற்சாலை .
காரணகர்த்தா முதற்கடவுள்
காரணகுரு ஞானதேசிகன் , வீடுபேறு அடைதற்குக் காரணமான ஞானகுரு .
காரணச்சிறப்புப்பெயர் காரணத்தால் ஓரினத்தில் ஒன்றற்குச் சிறப்பாக வரும் பெயர்ச்சொல் .
காரணச்சொல் கதை .
காரணசரீரம் ஐம்பூதச் சேர்க்கையால் பருவுடலுக்குக் காரணமாயுள்ள நுண்ணுடல் .
காரணப்பெயர் யாதானும் ஒரு காரணம் பற்றி வழங்கும் பெயர்
காரணப் பொதுப்பெயர் காரணத்தாற் பலவற்றிற்கும் பொதுவாய் வரும் பெயர்
காரணம் மூலம் ; ஏது ; கருவி ; நோக்கம் ; வழிவகை ; சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று
காரணமரபு காரணக்குறி மரபு ; காரணம்பற்றித் தொன்றுதொட்டு வழங்கும் பெயர்ச்சொல்
காரணமாயை உடம்பு முதலியவற்றின் தோற்றத்திற்குக் காரணமாயுள்ள பொருள்
காரணமாலை ஓர் அணி , பின்பின்னாக வருவனவற்றிற்கு முன்முன்னாக வருவனவற்றைக் காரணங்களாகவேனும் காரியங்களாகவேனும் சொல்லும் அணி .
காரணவணு உலகப் படைப்புக்கு ஒருங்கு பல தொக்குக் காரணமாகும் பரமாணுக்கள்
காரணவன் மூலகாரணனான கடவுள் ; கணக்கன் ; குடும்பத் தலைவன்
காரணவாகுபெயர் காரணம் காரியத்திற்கு ஆகிவரும் பெயர்ச்சொல்
காரணவாராய்ச்சி காரணம் குறைவின்றியிருந்தும் காரியம் பிறவாமையைச் சொல்லும் அணி .
காரணவிடுகுறி ஒருகாற் காரணப்பெயராயும் ஒருகால் இடுகுறிப்பெயராயும் இருக்கும் பெயர்ச்சொல்
காரணவிலக்கணை காரணத்தைக் காரியமாகக் கூறும் அணி .
காரணன் மூலமானவன் , கடவுள் ; தலைவன் ; மிருதபாடாணம் .
காரணாவத்தை காரியாவத்தைகட்குக் காரணமாக இருக்கும் அவத்தை .
காரணி பார்வதிதேவி
காரணிக்கம் வரலாறு , சரித்திரம் , செபமாலை
காரணிகன் நடுநிலையாளன் ; ஆய்வாளன்
காரணீகம் ஆய்ந்து அறிதற்குரிய பண்பு
காரத்திரி அறுத்த புண் முதலியவற்றில் உட்செலுத்தும் காரமருந்து தோய்த்த சீலைத்திரி
காரப்பசை குன்றிமணியையும் சீனிக்காரத்தையும் அரைத்துச்சேர்த்துத் தட்டார் பயன்படுத்தும் ஒருவகைப் பசை .
காரப்பொடி எரிவுண்டாக்கும் மருந்து ; பற்றாசு ; சிறுமீன் வகை .
காரம் உறைப்பு ; கார்ப்புப்பு ; சாம்பலுப்பு ; சீலையின் அழுக்குவாங்குங் காரம் ; சாயமிடுங்காரம் ; வெண்காரம் ; அக்கரகாரம் ; அழிவு ; திருநீறு ; சினம் ; மரவயிரம் ; எழுத்தின்சாரியை ; பொன் ; தொழில் ; உறுதி ; வலிமை ; முயற்சி .
காரம்போடுதல் ஆடை முதலியவற்றிற்குக் காரம்வைத்தல் ; உணவுப்பொருளுக்குக் காரஞ்சேர்த்தல் .
காரமருந்து மகப்பெற்ற பெண்களுக்குக் கொடுக்குங் காயமருந்து ; தோலை எரித்துத் தின்னும் மருந்து .
காரர் அச்சமுள்ளோர் ; செய்வோர் .
காரல் ஒருமீன் ; காறல் ; தொண்டையில் உண்டாகும் கறகறப்பு .
காரவல்லி பாகற்காய் .
காரளத்தல் நெல்லளத்தல் .
காரறிவு மயக்கம் பொருந்திய அறிவு .
காரறுத்தல் கார்நெற்பயிரை அறுவடை செய்தல் .
காரன் உரியவன் ; செய்வோன் ; ஆண்பாற் பெயர் விகுதி ; சோரபாடாணம் .
காரா எருமை ; கருநிறப் பசு .
காராகிரகம் சிறைச்சாலை .
காராஞ்சி நீர் இறைக்கும் ஒருவகைக் கருவி .
காராடு வெள்ளாடு .
காராண்மை நிலத்தைப் பயிரிடுங் குடியுரிமை ; ஒரு பழைய வரி .
காராப்பூந்தி ஒருவகைத் தின்பண்டம் .
கார்வலயம் கடல்
கார்வழலை இராசமாநாகம்
கார்வா கடல் மீன் வகை
கார்வாரி செயலாளன்
கார்வினை பாவத்தொழில்
கார்வெள்ளி மட்டவெள்ளி
கார்வை இசையில் நாதநீட்சி
காரக்கருணை காறுகருணை , கருணைக்கிழங்கு
காரக்கழிச்சல் அசீரண பேதிவகை
காரகக்கருவி தொழிலை இயற்றுவிக்கும் கருவி
காரகபஞ்சகம் காண்க : கருமேந்திரியம் ; நாக்கு , கை , கால் , எருவாய் , கருவாய் என்னும் உறுப்புகள் .
காரகம் வேற்றுமையுருபேற்ற பெயர்வினை கொண்டு முடியும் நிலை ; சிறைச்சாலை ; மேகநோய் .
காரகமுதற்கருவி செய்கையின் முதற்காரணம் .
காரகவேது தொழில் நிகழ்ச்சிக்குக் கருவியாயுள்ள ஏது .
காரகன் செய்வோன் ; படைப்போன் ; சூரிய ரேகாமிசம்
காரங்கட்டுதல் நீலச்சாயத்தை உறுதியாக்குதல் ; உறைப்பு மருந்து கூட்டுதல்
காரச்சீலை புண்ணுக்கிடும் மருந்துச்சீலை
காரசாரம் அளவோடு அமைந்த காரச்சுவை
காரடம் சாலவித்தை
காரடவித்தை சாலவித்தை
காரடன் வித்தைக்காரன்
காரடை ஒருவகைப் பணியாரம்
காரண்டம் நீர்க்காக்கை
காரணக்குறி காரணப்பெயர் ; முன்னறிகுறி
காரணக்குறிமரபு தொன்றுதொட்டு வருங்காரணப்பெயர்
காரணக்குறியாக்கம் காரணம் பற்றிப் படைத்துக் கொள்ளும் பெயர்ச்சொல்