காரிக்கன் முதல் - கால் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
காரியவாகுபெயர் காரியம் காரணத்திற்கு ஆகும் பெயர்ச்சொல் .
காரியவாதி தன் செயலைச் சாதித்துக்கொள்பவன் .
காரியவான் திறமையுடையவன் .
காரியவிலக்கணை காரியத்தைக் காரணமாக உபசரித்தல் .
காரிரத்தம் ஆடுதின்னாப்பாளைச்செடி .
காரிருள் மிக்க இருள் .
காரிழை நாதம் கந்தகம் .
காரீயம் கருநிறமான ஈயவகை .
காரு வண்ணான் ; கம்மாளன் ; கம்மத்தொழில் .
காருகத்தம் இல்லறநிலை .
காருகத்தியம் இல்லறநிலை .
காருகத்தொழில் நெய்யுந்தொழில் .
காருகம் நெய்யுந்தொழில் ; ஊழிய வேலை ; இல்லறம் ; நெருப்பை வணங்குஞ் சமயம் .
காருகவடி கோள்நிலை .
காருகன் நெய்வோன் ; வண்ணான் ; ஓவியன் ; கொலையாளன் .
காருச்சிவல் கடற்பாசி , கடற்காளான் .
காருடம் கருடன் ; கருடசமூகம் ; அறுபத்து நாலு கலையுள் நஞ்சு தீர்க்கும் வித்தை ; ஓர் உபநிடதம் ; கருடபுராணம் ; பச்சைக்கல் ; மருக்காரைச் செடி ; காருடவித்தை .
காரூடம் கருடன் ; கருடசமூகம் ; அறுபத்து நாலு கலையுள் நஞ்சு தீர்க்கும் வித்தை ; ஓர் உபநிடதம் ; கருடபுராணம் ; பச்சைக்கல் ; மருக்காரைச் செடி ; காருடவித்தை .
காருடயூகம் கருட வடிவாக அமைக்கும் ஒரு படைவகுப்பு .
காருடவித்தை நஞ்சு வைத்தியம் ; சாலவித்தை .
காருடன் சாலவித்தைக்காரன் .
காருண்ணியம் அருள் , கருணை .
காருண்யமேகம் மேகம்போற் கைம்மாறு எதிர்பாராது உதவி செய்பவன் .
காருணி வானம்பாடி .
காருணிகன் கருணையுள்ளவன் , அருளுடையோன் .
காருணியம் காண்க : காருண்ணியம் .
காருவாகன் வண்ணான் .
காரூகம் கருங்குரங்கு .
காரெலி கறுப்பெலி .
காரெள் எள்ளின்வகை .
காரெனல் ஒளி மழுங்குதற் குறிப்பு ; கருநிற மாகை .
காரேறு கரிய எருமைக்கடா .
காரை காட்டுச்செடிவகை ; மருக்காரை ; காறல்மீன் ; ஆடை ; சுண்ணச்சாந்து ; பல்லில் இறுகப்பற்றிய ஊத்தை .
காரைக்கட்டுவீடு சுண்ணாம்பு செங்கற்களால் கட்டப்பட்ட வீடு .
காரோடன் சாணைக்கல் செய்வோன் ; ஆயுதவுறை செய்வோன் .
கால் நாலில் ஒன்று ; தமிழில் நாலிலொன்றைக் குறிக்கும் 'வ' என்னும் பின்ன எண்குறி ; பாதம் ; பூவின் தாள் ; அடிப்பாகம் ; எழுத்தின் கால் ; தேருருள் ; வண்டி ; கோல் ; குறுந்தறி ; நெசவுத்தறியின் மிதி ; கைப்பிடி ; தூண் ; பற்றுக்கோடு ; முளை ; மரக்கன்று ; மகன் ; இனமுறை ; பிறப்பிடம் ; வாய்க்கால் ; பிரிவு ; வழி ; நடை ; இடம் ; வனம் ; முனை ; மரக்கால் ; அளவு ; கதிர் ; மழைக்கால் ; காற்று ; வாதரோகம் ; ஐம்பூதம் ; பொழுது ; செவ்வி ; தடவை ; காலன் ; கருநிறம் ; ஏழனுருபுள் ஒன்று ; ஒரு வினையெச்ச விகுதி ; ஒரு முன்னொட்டு .
காரிக்கன் வெளுக்காத வெள்ளைத்துணி .
காரிக்குதிரை கருநிறக் குதிரை ; ஐயனாரது குதிரை .
காரிக்கூன் ஒருவகைக் காளான் .
காரிகம் காரகம் ; மேகநோய் ; வாதனை ; காவிக்கல் .
காரிகை பெண் ; அழகு ; அலங்காரம் ; கட்டளைக் கலித்துறை ; ஓர் யாப்பிலக்கண நூல் ; ஒரு நிறை ; வாதனை .
காரிப்பிள்ளை கரிக்குருவி .
காரிப்புள் கரிக்குருவி .
காரிமை கொடிவேலி .
காரியக்காரன் செயலாளன் ; ஊரதிகாரியின் பதிலாள் ; வேலையில் திறமையுள்ளவன் ; தன்னலம் நாடுவோன் .
காரியக்கெட்டி திறமையாளன் , தொழிலில் வல்லவன் ; வேலைத்திறம் .
காரியகர்த்தா தொழில் நடத்துவோன் ; மேலதிகாரி .
காரியகரம் பயனுடைய செயல் .
காரியகாரன் காரியத்தலைவன் ; காரியம் பார்ப்போன் .
காரியகுரு பொருளுக்காகக் கற்பிக்கும் ஆசிரியன் .
காரியகேவலம் உடலத்தைப் பெற்ற ஆன்மா ஐம்புல நுகர்ச்சி நீங்கி இளைப்பாறும் பொருட்டு மூலாதாரத்தில் ஒடுங்கிக்கிடக்கும் நிலை .
காரியசகலம் உடலத்தைப் பெற்ற ஆன்மா தொழிற்பட்டு ஐம்புலன்களை நுகரும் நிலை .
காரியசாதகம் காரியத்தைச் சிந்திக்கச்செய்வது .
காரியசாதனம் துணைக்கருவி .
காரியசித்தி காரியானுகூலம் , செயல் முடித்தல் .
காரியசுத்தம் உடலைப் பெற்ற ஆன்மா ஒழுக்கமும் செயற்படுமின்றி இறைவன் திருவடியை நினைந்துசெல்லும் நிலை .
காரியஞ்செலுத்துதல் தொழில் நடத்துதல் .
காரியத்தடை தொடங்கிய செயலுக்கு நேரும் இடையூறு .
காரியத்தலைவன் மேலதிகாரி .
காரியத்தவறு விரும்பியது கைகூடாமை ; செயற்கேடு .
காரியத்தன் காண்க : காரியகாரன் .
காரியத்தாழ்ச்சி செயல் கைகூடாமை .
காரியத்துக்குவருதல் பயன்படுதல் .
காரியத்தை மடித்தல் குதர்க்கம் பேசுதல் .
காரியத்தோன் செயல் பார்க்கும் அதிகாரி .
காரியதரிசி ஒரு சபையின் செயல்களை நடத்தி வைப்பவன் .
காரியதுரந்தரன் செயற்பொறுப்பு வகித்தலில் வல்லவன் .
காரியப்படுதல் தொழிற்படுதல் ; கைகூடுதல் .
காரியப்பாடு பயன் .
காரியப்பொறுப்பு தொழிலை நிறைவேற்றுங்கடமை .
காரியபாகம் செயல் கைகூடுதல் .
காரியம் செயல் , செய்கை ; காரணத்தால் ஆவது ; செய்யத்தக்கது ; நோக்கம் ; இறுதிக்கடன் ; சாணம் .
காரியமாயை மூலப் பிரகிருதி .
காரியமுற்றுதல் எடுத்த செயல் கைகடந்து போதல் .
காரியமுன்னிடுதல் எடுத்த செயல் கைகூடுகை .