சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| காலங்கிட்டுதல் | சாகுந்தறுவாய் நெருங்குதல் . |
| காலங்கூடுதல் | சாகுந்தறுவாய் நெருங்குதல் . |
| காலசக்கரம் | கோள்கள் சுழன்று வருதற்குரிய மண்டலம் ; கோள்நிலையால் ஒருவனுக்கு உண்டாகும் பலன் ; விடாது சுழன்றுவருங் காலம் . |
| காலசங்கதி | நடப்புச் செய்தி . |
| காலசங்கை | உத்தேச காலவளவு ; காலக்கணக்கு ; காலாவதி . |
| காலசந்தி | காலை வழிபாடு . |
| காலசம் | பேராலவட்டம் ; காற்று . |
| காலசூத்திரம் | ஒரு நரகம் . |
| காலசேயம் | மோர் . |
| காலஞ்செய்தல் | இறத்தல் . |
| காலஞ்செல்லுதல் | இறந்துபோதல் ; நாட்கடத்தல் , தாமதப்படுதல் . |
| கால்கோள் | தொடக்கம் ; போரில் இறந்த வீரனுருவைக் கல்லில் வகுக்கத் தொடங்குதலைக் கூறும் புறத்துறை . |
| கால்சாய்தல் | அடியோடழிதல் . |
| கால்சீத்தல் | காலினால் கீறுதல் ; வேரோடு களைதல் . |
| கால்செய்வட்டம் | விசிறி , பேராலவட்டம் . |
| கால்தடுக்குதல் | அடியிடறுதல் . |
| கால்தல் | வெளிப்படுதல் ; குதித்தல் ; கக்குதல் ; தோற்றுவித்தல் . |
| கால்தாங்குதல் | காலை இழுத்து நடத்தல் . |
| கால்தாழ்தல் | தாமதித்தல் ; ஈடுபடுதல் ; மூழ்கிவிடுதல் . |
| கால்நடை | ஆடுமாடுகள் ; காலால் நடத்தல் . |
| கால்நோக்கு | கோள்களின் காற்பார்வை . |
| கால்நோய் | பாதநோவு . |
| கால்பரிதல் | அறுபடுதல் . |
| கால்பாவுதல் | கால்வைத்தல் ; நிலைகொள்ளுதல் . |
| கால்பிடித்தல் | பாதத்தை வருடுதல் ; காலைப்பற்றிக் கெஞ்சுதல் ; தொண்டுபுரிதல் ; வாய்க்கால் வெட்டுதல் ; விதையடித்தல் . |
| கால்பின்னுதல் | கால்கள் முறுக்கிக்கொள்ளுதல் ; முட்டிக்கால் தட்டுதல் . |
| கால்மட்டம் | கண்பார்வையின்றிக் காலால் தடவி நடக்கை . |
| கால்மடக்கு | கடப்புக்கால் . |
| கால்மரத்தல் | பாதம் உணர்ச்சியற்றுக் கட்டை போலாதல் . |
| கால்மாடு | பசு ; காற்புறம் . |
| கால்மிதி | அடிவைப்பு ; அடிச்சுவடு ; அடிவைக்கும் வரை ; செருப்பு ; காலிற்பட்ட தூசியைத் துடைத்துக்கொள்வதற்கு இடப்படும் தென்னைநார்த் தடுக்கு . |
| கால்முளைத்தல் | குழந்தை நடைகற்கத் தொடங்குதல் . |
| கால்மெட்டிடுகை | திருமணத்தில் மணமக்கள் கால்விரலில் மோதிரமிடுகை . |
| கால்யாத்தல் | நெருங்குதல் ; மறைத்தல் ; தேக்குதல் . |
| கால்வடம் | காலணிவகை . |
| கால்வழி | ஒற்றையடிப் பாதை ; காற்சுவடு ; கால்வாசி ; மரபுவழி . |
| கால்வளைவித்தல் | வளைத்தல் . |
| கால்வாங்குதல் | காலை வெட்டுதல் ; கால்வழுக்குதல் ; பின்வாங்குதல் ; சாதல் ; எழுத்துகளின் காலிழுத்தல் . |
| கால்வாசி | நாலில் ஒரு பங்கு ; அடிவைத்த பலன் . |
| கால்வாய் | வாய்க்கால் . |
| கால்வாயன் | தெரிந்து பேசும் வன்மையற்றவன் . |
| கால்விடுதல் | கால்கள் செயலறுதல் ; முட்டுக்கொடுத்தல் ; தூர உறவாதல் ; அறவொழித்தல் . |
| கால்விலங்கு | காலுக்கிடும் தளை . |
| கால்விழுதல் | மழைக்கால் இறங்குதல் ; ஒளிவீசுதல் . |
| கால்விழுந்துபோதல் | பாரிசவாயு முதலியவற்றால் கால் அசைவற்றுப் பேசுதல் ; செயலற்றுப் போதல் . |
| கால்வீச்சு | கால்வீசி நடக்கை . |
| கால்வீசுதல் | கதிர்வீசுதல் ; காற்றடித்தல் . |
| கால்வெடிப்பு | காலிற்காணும் பித்தவெடிப்பு . |
| கால்வைத்தல் | நுழைதல் . |
| காலக்கடவுள் | யமன் ; சிவன் . |
| காலக்கணிதம் | வானவியல் , வானசாத்திரம் . |
| காலக்கணிதர் | சோதிடர் . |
| காலக்கழிவு | தாமதம் ; வீண்பொழுது போக்குகை . |
| காலக்கனல் | ஊழித் தீ . |
| காலக்கிரமம் | நாளடைவு ; வரலாற்றுக் காலவரிசை . |
| காலக்கிரயம் | தற்கால விலை . |
| காலக்குறி | பருவத்துக்குரிய அடையாளம் . |
| காலக்கொடுமை | காலப் பொல்லாங்கு , காலத்தின் தீமை . |
| காலகட்கம் | ஒரு நரகம் . |
| காலகதி | காலப்போக்கு ; விதி ; இறப்பு . |
| காலகம் | சேங்கொட்டை . |
| காலகரணம் | காலங்கழித்தல் . |
| காலகாலன் | சிவன் . |
| காலகூடம் | பாற்கடலில் தோன்றிய நஞ்சு . |
| காலங்கண்டவன் | ஆண்டிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவன் . |
| காலங்கழித்தல் | வாழ்நாள் போக்குதல் , உயிர் வாழ்தல் . |
| கால்கடியன் | வல்லவன் , தீரன் , திறனுடையவன் . |
| கால்கடுத்தல் | பாதம் நோதல் . |
| கால்கழி கட்டில் | பாடை . |
| கால்கழுவுதல் | கால்கழுவ நீர்கொடுத்து உபசரித்தல் ; மலங்கழுவுதல் . |
| கால்கிளர்தல் | ஓடுதல் ; படையெடுத்துச் செல்லுதல் . |
| கால்கூசுதல் | பிறவிடஞ் செல்ல மனங்கூசுதல் . |
| கால்கெஞ்சுதல் | அடி வருந்துதல் . |
| கால்கைப்பிடிப்பு | வாதநோய் . |
| கால்கொள்ளுதல் | திருவிழா முதலியவற்றுக்குத் தொடக்கஞ் செய்தல் ; தொடங்குதல் ; இடங்கொள்ளுதல் ; ஏறச்செய்தல் ; ஆரோகணஞ்செய்தல் ; பெருக்கெடுத்தல் . |
|
|
|