சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| காலமேகம் | காண்க : காளமேகம் . |
| காலராத்திரி | கற்ப முடிவிலுள்ள நீண்ட இரவு ; துன்பம் விளைக்கும் இரவு ; துர்க்கா சத்தியின் ஒரு பேதம் . |
| காலலம்புதல் | காலைக் கழுவுதல் ; மலங்கழுவுதல் . |
| காலவகை | காலக் கூறுபாடு ; கால வேறுபாடு . |
| காலவம் | நெருப்பு . |
| காலவர்த்தமானம் | நடப்புச் செய்தி . |
| காலவரையறை | காலநியமிப்பு ; காலாவதி ; வரலாற்றுக் காலத்தைக் குறித்தல் . |
| காலவழக்கம் | நடப்பு வழக்குமுறை . |
| காலவழு | ஒரு காலத்தைப் பிறிதொரு காலத்தில் பிறழக் கூறுதல் . |
| காலவழுவமைதி | கால வழுவை இலக்கணமுடையதாக அமைப்பது . |
| காலவாகுபெயர் | ஒரு காலத்தின் பெயர் அக்காலத்தோடு இயைபுடைய பொருளுக்கு ஆகிவருவது . |
| காலவிடைநிலை | காலத்தைக் காட்டும் இடைநிலை . |
| காலவித்தியாசம் | காலவேற்றுமை ; தீய காலம் . |
| காலவிதி | தீவினை . |
| காலவிரயம் | வீண்காலம் போக்குகை . |
| காலளப்பான் | மரக்காலால் தவசமளப்போன் . |
| காலளவு | மரக்காலால் அளக்கை . |
| காலன் | யமன் ; யமதூதர்கள் ; காலதானம் ; சனி ; கரந்துறை கோள்களுள் ஒன்று . |
| காலன்கொம்பு | மாட்டுக்கொம்பு . |
| காலாக்கினி | காலத் தீ ; ஒரு காலாக்கினி புவனம் . |
| காலாகாலத்தில் | உரிய சமயத்தில் ; சிற்சிலசமயம் . |
| காலாகோலம் | அலங்கோலம் . |
| காலாங்கரை | ஏரிக்கு நீர் கொண்டுவரும் கால்வாய் . |
| காலாசு | காற்கவசம் . |
| காலாட்டம் | முயற்சி . |
| காலாடி | முயற்சியுடையோன் ; சில சாதிகளின் தலைவர்க்குரிய பட்டப்பெயர் ; நீர்பாய்ச்சும் ஊர்ப் பணியாளன் ; தொழிலற்றுத் திரிவோன் . |
| காலாடுதல் | முயலுதல் ; முயற்சியால் செல்வம் செழித்திருத்தல் . |
| காலாணி | கல் , முள் அழுத்தலால் உள்ளங்காலில் உண்டாகும் தடிப்புத்தோல் ; மேற்கூரை தாங்கும் முளைக்கொட்டை . |
| காலாணியறுதல் | வலி , செல்வம் முதலியன குன்றித் தளர்தல் . |
| காலாதீதம் | காலங்கடந்தது , காலாவதியானது . |
| காலஞ்சொல்லி | முற்குறிகாட்டும் காக்கை ; பல்லி . |
| காலட்சேபம் | பிழைப்பு ; காலங்கழித்தல் ; நாட்கழித்தல் ; நேரம்போக்கல் ; திருவாய்மொழியோதல் ; சமயநூல் ஓதுதல் ; புண்ணிய கதையை இசைப்பாட்டுகளுடன் எடுத்துக்கூறுகை . |
| காலடி | உள்ளங்கால் ; காற்சுவடு ; சேரநாட்டில் சங்கராசாரியார் பிறந்த ஊர் . |
| காலடியில் | மிக அண்மையில் ; ஆதரவில் . |
| காலத்தால் | உரியபோதில் ; காலம்பெற . |
| காலத்திரயம் | இறப்பு , நிகழ்வு , எதிர்வு என்னும் மூவகைக் காலம் . |
| காலத்தீ | ஊழித் தீ . |
| காலதண்டம் | யமனது தண்டாயுதம் . |
| காலதர் | காற்று வரும் வழி , சாளரம் . |
| காலதருமம் | காலத்தன்மை . |
| காலதாமதம் | காலத்தாழ்வு ; தாமதம் . |
| காலதுரிதம் | காலவிரைவு , வேகம் . |
| காலந்தள்ளுதல் | காலங்கழித்தல் . |
| காலந்தாழ்த்துதல் | காலதாமதஞ் செய்தல் . |
| காலநிரூபணம் | காலத்தை வரையறுக்கை ; காலகணிதம் . |
| காலநுட்பம் | காலத்தின் நுண்ணிய பகுதி . |
| காலநேமி | காலச்சக்கரம் ; ஓர் அசுரன் . |
| காலநேரம் | கோள்களின் பலன் . |
| காலப்பண் | அவ்வக் காலத்திற்கு உரிய பண் . |
| காலப்பயிர் | பருவத்தில் விளையும் பயிர் . |
| காலப்பழக்கம் | பழைமையான வழக்கம் , நாட்பட்ட பழக்கம் . |
| காலப்பிரமம் | காலமாகிய பரம்பொருள் . |
| காலப்பிரமாணம் | காலவளவை . |
| காலப்பெயர் | காலத்தைக் குறிக்கும் பெயர்ச்சொல் , காலத்தினடியாக வந்த பெயர் . |
| காலபடர் | யமதூதர் . |
| காலபரிச்சேதம் | காலத்தால் ஒரு பொருளை அளவிடுகை ; காலவரையறை . |
| காலபரிபாகம் | காலத்தின் பக்குவநிலை |
| காலபாசம் | யமன் ஆயுதமாகிய கயிறு . |
| காலபேதம் | காலவேறுபாடு . |
| காலம் | பொழுது ; தக்க சமயம் ; பருவம் ; பருவப் பயிர் ; விடியற்காலம் ; முடிவு காலம் ; தொழில் நிகழ்ச்சியைக் குறிக்கும் முக்காலம் ; இசைக்குரிய மூன்று காலம் ; தாளப்பிரமாணம் . |
| காலம்பண்ணுதல் | ஆயுள்முடிதல் . |
| காலம்பார்த்தல் | சமயம் நோக்குதல் ; ஒருவனது இறுதிக் காலத்தைக் கணக்கிடுதல் . |
| காலம்பெற | தக்க காலத்தில் ; விடியற்காலையில் . |
| காலம்போக்குதல் | காலத்தை வீணாய்க்கழித்தல் . |
| காலமடைதல் | இறத்தல் . |
| காலமயக்கம் | காலவழுவமைதி . |
| காலமல்லாக் காலம் | அகாலம் . |
| காலமலைவு | ஒரு காலத்துக்குரியதை மற்றொரு காலத்துக்குரியதாகக் கூறும் வழு . |
| காலமழை | பருவமழை . |
| காலமறிதல் | வினைசெயற் கேற்ற காலத்தை அறிதல் ; முக்காலத்தும் நிகழ்வனவற்றைத் தமது சிறப்பாற்றலால் அறிதல் . |
| காலமாதல் | காண்க : காலமடைதல் . |
| காலமாறு | காலைதோறும் . |
| காலமானம் | கால அளவு . |
| காலமிருத்து | உரிய காலத்தில் அடையும் இறப்பு . |
| காலமே | விடியற்காலையில் . |
|
|
|