காலாதீதன் முதல் - காவற்சோலை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
காலூறுதல் பயணக் குறியாகக் காலில் தினவு உண்டாதல் ; ஓடியாடப் பிள்ளைகள் விரும்புதல் .
காலூன்றுதல் நிலைபெறுதல் ; காலிறங்குதல் ; பந்தற்கால் நாட்டுதல் .
காலெடுத்தல் வாய்க்கால் வெட்டுதல் ; பின்னும்படி மயிரை வசிர்ந்தெடுத்தல் ; தொடங்குதல் ; அனுமதி கொடுத்தல் .
காலேகம் முத்து ; கலவைச் சாந்து .
காலேகவண்ணம் கலவைச் சாந்து .
காலேணி குறுக்குப் படிகளை உடைய ஏணி .
காலேந்திரம் காலத்தைப் புலப்படுத்தும் எந்திரம் .
காலேயம் புல்லுண்ணும் நாற்காலுயிர்கள் ; கத்தூரி மஞ்சள் ; மோர் ; கள் .
காலை பொழுது ; வாணாள் ; தருணம் ; முறை ; விடியற்காலம் ; சூரியன் ; பகல் ; பள்ளியெழுச்சி முரசம் ; அடைப்பு ; மீன்வகை .
காலைக்கடன் காலையில் செய்யவேண்டிய செயல்கள் .
காலைச்சுற்றுதல் தொடர்ந்து பற்றுதல் .
காலைஞாயிறு உதயசூரியன் .
காலைமுழவு காலையில் அடிக்கப்படும் முரசம் .
காலைமுரசம் பள்ளியெழுச்சி முரசு .
காலையடைத்தல் அடைப்பிடுதல் .
காலையந்தி காலையை அடுத்த அந்திப்பொழுது .
காலைவெள்ளி விடியற்காலத்து உதிக்கும் சுக்கிரன் , விடிவெள்ளி .
காலொட்டுதல் குறைவைக் காட்டாமற் சரிப்படுத்தல் .
காலொற்றுதல் காற்று வீசுதல் .
காலோடிகையோடி தொழிலற்றுத் திரிபவன் .
காலோடுதல் வழுக்குதல் ; செயன்முயற்சி உண்டாதல் .
காலோர் காலாள்கள் .
காலோலம் அண்டங்காக்கை .
காவகா சேங்கொட்டை .
காவட்டம்புல் மாந்தப்புல் .
காவட்டை மாந்தப்புல் .
காவடி காத்தண்டு ; இறைவன் வேண்டுதலுக்கு எடுக்கும் காவடி ; காவுதடியிற் கொண்டு போகும் பொருள் .
காவணப்பத்தி மண்டபம் , பந்தல் முதலியவற்றின் அலங்காரமான மேற்றளம் .
காவணம் பந்தல் ; மண்டபம் ; சோலை .
காவணவன் ஒருவகைப் புழு .
காவதம் காதம் , சுமார் பதினாறு கி .மீ . கொண்ட தொலைவு .
காவதன் வரிக்கூத்துவகை .
காவந்து காபந்து ; தலைவன் .
காவல் பாதுகாப்பு ; வேலி ; மதில் ; சிறைச்சாலை ; காவலாள் ; பரண் ; காக்கப்படும் நாடு ; கவசம் .
காவல்கட்டு தக்க காப்பு ; நோயாளியின் பத்தியப் பாதுகாப்பு .
காவல்மாற்றுதல் இளைப்பாறுதற்பொருட்டுக் காவலரை முறைமாற்றி அமர்த்தல் .
காவல்மேரை காவலுக்காகக் கொடுக்கும் தானியம் .
காவலறை காக்கப்படும் பொருளறை ; காவல் காத்து நிற்கும் அறை .
காவலன் பாதுகாப்போன் ; அரசன் ; மெய்காப்பாளன் ; கணவன் ; கடவுள் .
காவலாள் காவற்காரன் .
காவலாளன் காவற்காரன் .
காவலாளி காவற்காரன் ; கணவன் .
காவற்கட்டு காவல் செய்வதற்குரிய ஏற்பாடு .
காவற்கடவுள் திருமால் .
காவற்கணிகை களத்து ஆடும் கூத்தி .
காவற்கலி வாழைமரம் .
காவற்காடு கோட்டையைச் சுற்றிக் காவலாக வளர்க்கப்படும் காடு .
காவற்காரன் காவல் செய்வோன் .
காவற்கூடம் சிறைச்சாலை .
காவற்கூடு காவலாளர் தங்குமிடம் .
காவற்சாலை காண்க : காவற்கூடம் .
காவற்சோலை அரசர் விளையாடுதற்குரிய நந்தவனம் .
காலாதீதன் காலங்கடந்த கடவுள் .
காலாந்தகன் சிவன் ; யமன் ; கொடியவன் .
காலாந்தரம் வேறுபட்ட காலம் ; இடைக்காலம் ; காலப்போக்கு .
காலாயுதம் கோழி .
காலாவதி வேளாண்மைக் காலம் ; காலவரையறை ; தவணை முடிவு .
காலாழ் சேறு .
காலாழி கால்விரல் மோதிரம் .
காலாள் ஒருவகைச் சேனை , காலாட்படை ; பாசனக்காலில் நீர் பாய்ச்சுவோன் .
காலாறு வண்டு ; சிற்றாறு .
காலாறுதல் நடை ஓய்ந்திருத்தல் ; காலில் இரத்தவோட்டம் உண்டாக உலாவுதல் .
காலி பசு ; பசுக்கூட்டம் ; தீயவழி ; பயனற்றவன் ; பூனைக்காலி ; வெறுமை .
காலிடுதல் கால்வைத்தல் .
காலித்தல் கோள்கள் தோன்றுதல் .
காலிமாடு வயலிலோ காட்டிலோ கூட்டமாக வளர்க்கப்படும் கால்நடை .
காலியம் விடியல் .
காலியாங்குட்டி ஒரு சிறு பாம்பு .
காலியாதல் வீடு , உத்தியோகம் முதலியன ஒருவர் வசப்படாமல் ஒழிந்திருத்தல் .
காலில்விழுதல் அடியில் விழுந்து வணங்குதல் ; மன்னிப்பு வேண்டுதல் ; அடைக்கலமாதல் .
காலிலி முடவன் ; முடத்தி ; அருணன் ; பாம்பு ; காற்று ; மீன் .
காலிறங்குதல் யானைக்கால் உண்டாதல் ; மழைக்காலிறங்குதல் ; சீலையின் விளிம்புகள் ; குறுக்கிழைக் கோடு கொள்ளுதல் .
காலுழற்றி காலிற் காணும் வாதநோய் .
காலுளைவு கால்நோவு .
காலூரம் தவளை .