சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| காழூன்றுகடிகை | குத்துக்கோல் ; கூடாரம் . |
| காழோர் | குத்துக்கோலுடைய யானைப்பாகர் . |
| காளகண்டம் | குயில் ; மயில் ; கரிக்குருவி ; ஊர்க்குருவி ; வேங்கைமரம் . |
| காளகண்டன் | கறுத்த கழுத்துடைய சிவன் . |
| காளகண்டி | துர்க்கை ; ஒருகெட்ட நாள் . |
| காளகம் | சேங்கொட்டை ; மருக்காரைச் செடி ; எக்காளம் ; கருமை . |
| காளகூடம் | ஆலகாலம் , நஞ்சு ; ஒரு நரகம் . |
| காளச்சிலை | வைடூரியம் . |
| காளசுந்தரி | கறுத்த கழுத்தையுடைய பார்வதி . |
| காளபதம் | மாடப்புறா . |
| காளபந்தம் | ஒரு விளக்கு . |
| காளபம் | போர் . |
| காளம் | கருமை ; நஞ்சு ; பாம்பு ; எட்டிமரம் ; மேகம் ; நல்வினைக்கு காரணமான பெருமழை ; கழு ; ஊதுகொம்பு ; அவுரிப்பூண்டு ; சூலம் ; சக்கரப்படை . |
| காளமுகி | கல்மழையைப் பொழியும் மேகம் . |
| காளமேகம் | கரு மேகம் ; ஒரு புலவன் . |
| காளயுக்தி | அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்திரண்டாம் ஆண்டு . |
| காளவனம் | சுடுகாடு . |
| காளவாய் | கழுதை ; செங்கல் சுண்ணாம்பு சுடும் சூளை . |
| காளவாய்க் கல் | சுட்ட புதுச்செங்கல் . |
| காளவாயன் | உரக்கக் கத்துபவன் . |
| காளவிளக்கு | திருவிழா முதலிய சிறப்புக் காலங்களில் பயன்படுத்தும் பெருவிளக்கு . |
| காளாஞ்சி | தாம்பூலப்பெட்டி ; தாம்பூலம் துப்பும் கலம் , வாதநோய்வகை . |
| காளாத்திரி | பாம்பின் நான்கு நச்சுப் பற்களுள் ஒன்று . |
| காளாம்பி | நாய்க்குடை . |
| காவற்புரி | வயலில் காவலாக வைக்கோலால் செய்து வைக்கப்படும் பாவை ; நெற்குவியல்மேல் பூத பிசாசங்கள் அணுகாமல் தடுக்க இடும் வைக்கோற் பழுதை . |
| காவற்பெண்டு | செவிலித்தாய் ; பெண்பாற்புலவருள் ஒருவர் . |
| காவற்றண்டனை | சிறையிலிருக்கும் தண்டனை . |
| காவற்றெய்வதம் | காக்குந் தெய்வம் . |
| காவன் | சிலந்திப்பூச்சி . |
| காவன்மகளிர் | பகைவர் மனையில் சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் . |
| காவன்மரம் | அரசர்க்கு உரியதாய்ப் பகைவர் அணுகாமல் பாதுகாக்கப்படும் மரம் . |
| காவன்முரசம் | காத்தல் தொழிலுக்கு அறிகுறியான அரசாங்க முரசு . |
| காவன்முல்லை | அரசனாட்சியைச் சிறப்பிக்கும் புறத்துறை . |
| காவா | காட்டுமல்லிகை . |
| காவாங்கரை | வாய்க்காற்கரை . |
| காவாய் | ஒருவகைப் புல் . |
| காவாலி | சிவன் ; மனம்போனபடி நடப்பவன் . |
| காவாளர் | காவடி சுமப்பவர் . |
| காவாளி | காட்டுமல்லிகை ; காய்வேளைப் பூடு . |
| காவாளை | காட்டுமல்லிகை ; காய்வேளைப் பூடு . |
| காவி | காவிக்கல் ; ஆடையிலேறும் பழுப்பு ; பற்காவி ; கருங்குவளை ; கள் ; அவுரி மருந்துருண்டை ; கப்பலின் தலைப்பாய் . |
| காவிக்கல் | ஒருவகைச் சிவப்புத் தாது . |
| காவிதி | வேளாளருக்குப் பாண்டியர் கொடுத்து வந்த பட்டப்பெயர் ; வணிகமாதர் பெறும் பட்டவகை ; கணக்கர் சாதி ; மந்திரி ; வரிதண்டும் அரசாங்கத் தலைவர் . |
| காவிதிப்புரவு | அரசராற் காவிதியர்க்குக் கொடுக்கப்பட்ட ஊர் . |
| காவிதிப்பூ | காவிதி என்னும் பட்டத்துடன் அரசர் அளிக்கும் பொற்பூ . |
| காவிதிமை | கணக்குவேலை . |
| காவிபிடித்தல் | பழுப்புநிறம் ஏறுதல் . |
| காவிமண் | செம்மண் . |
| காவியகுணம் | செய்யுட்குணம் ; அவை : செறிவு ; தெளிவு , சமநிலை , இன்பம் , ஒழுகிசை , உதாரம் , உய்த்தலில் பொருண்மை , காந்தம் , வலி , சமாதி என்னும் பத்து . |
| காவியம் | பழையதொரு கதைபற்றிய தொடர் நிலைச் செய்யுள் ; கலம்பகம் ; பரணி முதலிய சிற்றிலக்கியம் . |
| காவியன் | சுக்கிரன் . |
| காவியாக்கட்டை | நங்கூரக்கட்டை . |
| காவியேறுதல் | ஆடையில் நீர்ப்பழுப்பேறுதல் . |
| காவிரிபுதல்வர் | வேளாளர் , உழவர் . |
| காவிளை | காய்வேளைப்பூடு ; கொழிஞ்சி . |
| காவு | சோலை ; சிறுதெய்வங்களுக்கு இடும் பலி ; காவுப்பொருட்குரிய மை . |
| காவுதடி | காவடித் தண்டு . |
| காவுதல் | காவடி சுமத்தல் ; சுமத்தல் ; விரும்புதல் . |
| காவுப்பொட்டு | பூசாரி நெற்றியிலணியும் அஞ்சனப் பொட்டு . |
| காவுவோர் | பல்லக்குச் சுமப்போர் . |
| காவேரிமணல் | அயமணல் . |
| காவேளை | காய்வேளைப் பூண்டு . |
| காவோலை | முற்றின வோலை . |
| காழ் | மரவயிரம் , மனவுறுதி ; கட்டுத்தறி ; தூண் ; ஓடத்தண்டு ; இருப்புக்கம்பி ; யானைப் பரிக்கோல் ; கதவின் தாழ் ; விறகு ; காம்பு ; கழி ; இரத்தினம் ; முத்து ; பளிங்கு ; பூமாலை ; மணிவடம் ; நூற்சரடு ; விதை ; கொட்டை ; கருமை ; குற்றம் . |
| காழ்கொள்ளுதல் | முதிர்தல் . |
| காழ்கோளி | நெட்டிலிங்கம் . |
| காழ்த்தல் | முற்றுதல் ; மனவயிரங்கொள்ளுதல் ; அளவுகடந்து மிகுதல் ; உறைத்தல் . |
| காழ்ப்பு | உறைப்பு ; வயிரம் ; மனவயிரம் ; தழும்பு ; சாரம் . |
| காழ்வை | அகில் . |
| காழகம் | கடாரம் ; ஆடை ; கைக்கவசம் ; கருமை . |
| காழம் | உடை விசேடம் . |
| காழி | உறுதி ; சீகாழி . |
| காழியர்கோன் | திருஞானசம்பந்தர் . |
| காழியன் | பிட்டுவாணிகன் ; உப்புவாணிகன் ; வண்ணான் . |
| காவற்பிரிவு | தலைவன் நாடுகாவற்பொருட்டுத் தலைவியைப் பிரியும் பிரிவு . |
|
|
|