காளான் முதல் - காற்றுநாள் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
காற்கோமாரி கால்நடைகளுக்கு வரும் கால்நோய்வகை .
காற்சரி ஒரு காலணி: பாதரசம் .
காற்சவடி பாதசாலம் .
காற்சிராய் காற்சட்டை .
காற்சிலம்பு காலணிவகை .
காற்சீப்பு இடுப்புச் சந்தெலும்பு .
காற்சுவடு அடிவைப்பின் குறி .
காற்சுற்று மகளிர் கால்விரலில் அணியும் அணிவகை .
காற்படம் விரலை அடுத்திருக்கும் பாதத்தின் அடிப்பக்கம் ; புறவடி .
காற்படுதல் அழிதல் .
காற்படை காலாட்படை ; கோழி ; கட்டட அடிப்படையில் தரைக்கு மேலுள்ள பகுதி .
காற்பரடு புறவடி .
காற்பனிகம் கற்பிக்கப்பட்டது .
காற்பாசம் பருத்தி .
காற்பாதை ஒற்றையடிப்பாதை .
காற்பிடித்தல் காண்க : காயடித்தல் .
காற்பிடிப்பு வாதத்தினாற் காலிற் காணும் பிடிப்பு நோய் .
காற்புத்தி தாளகம் .
காற்புரவு ஆற்றுப்பாசன நிலம் .
காற்புள்ளி ( , ) ஒரு தொடரைப் படிக்கும் பொழுது சிறிதளவு நிறுத்த வேண்டும் இடத்தைக் குறித்தற்கு இடும் குறி .
காற்பெட்டி வண்டியின் பின்பெட்டி .
காற்பெய்தல் ஓடுதல் .
காற்றடக்கி துருத்தி ; நீர்க்குமிழி .
காற்றண்டை ஒரு காலணிவகை .
காற்றருந்துதல் காற்றை உண்ணல் ; சோம்பியிருத்தல் .
காற்றழும்பு வலியோடுகூடிய கால்வீக்கம் .
காற்றன் துரிசு .
காற்றாடவைத்தல் காற்றுப்படுமாறு பண்டங்களை வைத்தல் .
காற்றாடி சுழல் கறங்கு ; காற்றாடிப் பட்டம் ; கறங்கின் சுழற்சியால் நீரிறைக்கும் எந்திரம் ; நிலையில்லாதவன் ; சவுக்கு ; மரவகை ; விசிறி .
காற்றாடிப்பட்டம் காற்றில் பறக்கவிடும் பட்டம் .
காற்றாய்ப்பறத்தல் விரைந்தோடுதல் ; சுறுசுறுப்பாய்த் தொழில்செய்தல் .
காற்றிளவல் இளங்காற்று .
காற்றின்சகாயன் தீ .
காற்றினாள் வாயுவைத் தேவதையாகக் கொண்ட சுவாதிநாள் .
காற்று வாளி ; உயிர்ப்பு ; அபானவாயு ; பிசாசு ; காண்க : காற்றினாள் .
காற்றுக்கடுவல் பெருங்காற்று .
காற்றுக்கரப்பு பேய்க்கோளாறு .
காற்றுக்காலம் ஆடி மாதத்தைப்போல் பெருங்காற்று வீசுங்காலம் .
காற்றுக்கொள்ளுதல் வெளிப்பரவல் .
காற்றுச்சங்கை காண்க : காற்றுக்கரப்பு .
காற்றுதல் வெளிப்படுத்துதல் ; அழித்தல் .
காற்றுநாள் காண்க : காற்றுமுந்துநாள் .
காற்குளம் பூசநாள் .
காற்கொட்டை காலுக்கிடும் திண்டு
காளான் நாய்க்குடை .
காளி துர்க்கை: பார்வதி ; சிங்கம் ; கரியவள் ; வாயுமூர்த்தியான காளரின் சக்தி ; பதினெட்டு உபபுராணத்துள் ஒன்று ; பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று ; மணித்தக்காளி ; எட்டி ; காட்டுமுருக்கு ; கக்கரி .
காளிக்கங் கட்டுதல் கருஞ்சாயங் கூட்டுதல் .
காளிக்கம் ஒருவித நீலச்சாயம் ; செப்புத்தாது உள்ள மலை .
காளிக்கமெழுதுதல் சீலைத்துணியில் கருஞ்சாய ரேகை எழுதுதல் .
காளிகம் மணித்தக்காளிச் செடி ; உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று .
காளிங்கமர்த்தனன் காளிங்கன் என்னும் நாகத்தின்மீது பாதங்களை வைத்து ஆடித்துவைத்த கண்ணபிரான் .
காளிங்கராயன் தமிழ்மன்னர்களால் அரசாங்கத் தலைவர் சிலருக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர் ; கள்ளர்குலப் பட்டப்பெயருள் ஒன்று .
காளித்தனம் மூர்க்கத்தனம் .
காளிதம் களிம்பு ; கறுப்பு .
காளிந்தம் ஏலம் ; பாம்பு .
காளிந்தி யமுனையாறு ; வாகை ; தேக்கு .
காளிப்பணம் 3 அணா 4 பைசா கொண்ட பழைய நாணயம் .
காளிமம் காண்க : காளிதம் .
காளிமை காண்க : காளிதம் .
காளியன் கண்ணபிரான் தன் பாதங்களால் தலையில் மிதித்தாடப்பெற்ற பாம்பு .
காளினியம் கத்தரிச்செடி .
காளை இளவெருது ; எருது ; கட்டிளமைப்பருவத்தினன் ; ஆண்மகன் ; பாலைநிலத்தலைவன் ; வீரன் .
காளைக்கன்று ஆவின் ஆண்கன்று .
காளைமாடு எருது .
காளையங்கம் போர் .
காளையம் போர் ஆரவாரம் .
காற்கட்டு தடை ; கலியாணம் .
காற்கடுப்பு கால் உளைச்சல் .
காற்கடைகொள்ளுதல் புறக்கணித்தல் , அலட்சியம் பண்ணுதல் .
காற்கவசம் மிதியடி , பாதரட்சை .
காற்காந்தல் காற்புண் .
காற்காப்பு காலில் அணியும் காப்பு .
காற்காறை தெய்வத் திருமேனியின் பாதங்களிற் சாத்தும் அணிகலன் .
காற்குடைச்சல் காலுளைவு .
காற்குப்பாயம் காற்சட்டை .