காற்றுநோவு முதல் - கானாங்கள்ளி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கானனுசாரி நன்னாரிக்கொடி .
கானா சுக்கானின் கைப்பிடி .
கானாங்கள்ளி இலைக்கள்ளி .
காற்றொழில் சிறுவேலை .
காற்றோட்டி கொடிவகை ; செடிவகை .
காறல் தொண்டைக் கறகறப்பு ; காறும் பொருள் ; ஒரு மருந்துச்செடி .
காறற்கத்தரி ஒருவகைக் கத்தரிச்செடி .
காறற்கொட்டி ஒருமருந்துச்செடி .
காறாக்கருணை சேனைக்கிழங்கு .
காறாப்பித்தல் காறித் துப்புதல் .
காறியுமிழ்தல் காறித் துப்புதல் .
காறு காலவளவு ; சலாகை ; கொழு .
காறுதல் காறற் சுவையாதல் ; கோழையை மிடற்றிலிருந்து கொணர முயலுதல் ; வயிரங் கொள்ளல் .
காறுபாறு காண்க : கார்பார் .
காறுவடித்தல் கொழுமுனை தீட்டுதல் .
காறை மாதரும் குழந்தைகளும் அணியும் கழுத்தணி ; வண்டிக்குடத்தைச் சுற்றியிடும் இரும்பு வளையம் ; பூஞ்சணம் ; வைக்கோல் முதலியவற்றின் தாள் ; சுண்ணாம்பு .
காறையெலும்பு கழுத்தெலும்பு .
கான் மணம் ; காடு ; பூ ; சலதாரை ; வாய்க்கால் ; மரக்கலத்தின் அறை ; எழுத்தின் சாரியை ; இசை ; செவி ; புகழ் .
கான்படுதிரவியம் அரக்கு , இறால் ,தேன் , மயிற்பீலி ,நாவி முதலிய காட்டில் உண்டாகும் அரும்பொருள்கள் .
கான்மரம் ஆலமரம் .
கான்மா காட்டுப்பன்றி .
கான்மாறுதல் கழிந்துபோதல் ; காலை மாற்றுதல் .
கான்மியம் மும்மலத்துள் ஒன்றாய் அநாதியாயுள்ள கன்மமலம் .
கான்முறிதல் அடியோடு கெடுதல் .
கான்முளை மகன் .
கான்மோதிரம் கால்விரலணி .
கான்யாறு முல்லை நிலத்திலுள்ள ஆறு , காட்டாறு .
கான்றல் கக்குதல் ; இருமிக் கோழை துப்புதல் .
கான்றியம் வெப்பம் .
கான்றை ஒரு மரவகை .
கானக்கல் காண்க : கானகக்கல் .
கானக்குதிரை காட்டுமான்வகை ; காட்டுக்குதிரை ; மாமரம் .
கானக்குறத்தி முலைப்பால் தேன் .
கானக்கூபரம் நாகப்பச்சை .
கானக்கோழி காட்டுக்கோழி .
கானங்கோழி காட்டுக்கோழி .
கானகக்கல் காட்டுக்கல் ; கரும்புள்ளிக் கல் .
கானகக்கூத்து கூத்துவகை .
கானகச்சங்கம் நாகரவண்டு .
கானகத்தும்பி கருவண்டுவகை .
கானகநாடன் முல்லைநிலத் தலைவன் ; குறிஞ்சி நிலத் தலைவன் .
கானகம் காடு ; கருஞ்சீரகம் ; காலின் நகம் .
கானங்கோழி காட்டுக்கோழி ; வழுக்கைத் தலையையுடைய புள்வகை .
கானசரம் நாணல் .
கானத்தேறு மஞ்சள் .
கானநாடன் காண்க : கானகநாடன் .
கானப்படம் காடெழுதின கேடயம் ; யானை ,சிங்கம் முதலிய சித்திரமெழுதின பலகை ; பெரு வாரல்வலை .
கானப்பலா காட்டுப்பலா .
கானப்பேர் காட்டை அரணாகவுடைய காளையார்கோயில் .
கானம் காடு ; தேர் ; நந்தவனம் ; மணம் ; தொகுதி ; பேதை ; வானம்பாடி ; இசைப்பாட்டு .
கானயூகம் காட்டுக் குரங்கு .
காற்றொடுக்கம் காற்று வீசாது ஒடுங்குகை .
கானரசம் இசைச்சுவை .
கானல் மணம் ; கடற்கரை ; கழி ; உப்பளம் ; உவர்நிலம் ; மலைசார்ந்த சோலை ; கடற்கரைச் சோலை ; வெப்பம் ; சூரியக்கதிர் ; பேய்த்தேர் ; பரல் நிரம்பிய நிலம் .
கானல்வரி கழிக்கரைப் பாடல் .
கானல்வீசுதல் வெக்கையடித்தல்
கானலடித்தல் வெக்கையடித்தல் .
கானலோடுதல் பேய்த்தேரோடுதல் .
கானவன் குறிஞ்சி , முல்லை அல்லது பாலை நிலத்து மகன் ; குரங்கு .
கானவாழை நீர்வாழை .
கானவிருக்கம் பாதிரிமரம் .
கானனம் காடு .
கானனீர் கானலில் தோன்றும் நீர்த்தோற்றம் , பேய்த்தேர் .
காற்றுநோவு கால்நடைகளுக்கு வரும் வெக்கைநோய் .
காற்றுப்பு காறியுமிழ்தல் .
காற்றுப்பெயர்தல் காற்றுக்காலந் தொடங்குதல் .
காற்றுப்போதல் அடைப்பினின்றும் காற்று வெளியேறுதல் ; அபான வாயுவை வெளியிடுதல் .
காற்றுமழை காற்றோடு கூடிவரும் மழை .
காற்றுமுந்துநாள் காற்றைத் தேவதையாகக் கொண்ட சுவாதியை முற்பட்ட நாளாக உடைய விசாகநாள் .
காற்றுவாக்கு காற்றடிக்குந் திசை ; காற்று வீசும் பக்கம் ; தற்செயல் ; சோம்பல் .
காற்றுவாங்குதல் காற்றை நுகர்தல் .
காற்றுவாரி கதவில்லாத சிறு சாளரம் .
காற்றுவாரிப் பந்தல் காற்று மிகுதியாக வருமாறு அமைக்கப்படும் பந்தல் .
காற்றுவாரிப் பலகை காற்றை வரவுந் தடுக்கவும் அமைக்கப்படும் முகட்டுச் சாளரப்பலகை .
காற்றேறு காற்றினால் தோன்றும் ஒருவகை முத்துக் குற்றம் .