கிரிகை முதல் - கிருதா வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கிருகப் பிரவேசம் புதுமனையிற் புகும்போது செய்யும் சடங்கு ; மணப்பெண்ணைக் கணவன் வீட்டிற்கு முதன்முறை அழைத்துக்கொள்ளும்போது செய்யும் சடங்கு .
கிருகபதி வீட்டுத் தலைவன் ; இல்லறத்தான் .
கிருகம் வீடு .
கிருகரன் பசி ; கோபம் முதலியவற்றை உண்டாக்கும் பத்து வாயுக்களுள் ஒன்று .
கிருகி இல்வாழ்வான் .
கிருகிணி மனைவி .
கிருசம் மெலிவு ; இளைப்பு .
கிருசாரான்னம் அன்னத்துடன் எள்ளுப்பொடி கலந்த உணவு .
கிருட்டி தலையீற்றுப் பசு ; பன்றி ; பிரண்டைக்கொடி .
கிருட்டிகன் பயிரிடுவோன் ; வேளாளன் .
கிருட்டிணபக்கம் தேய்பிறை , அபரபட்சம் .
கிருட்டிணபட்சம் தேய்பிறை , அபரபட்சம் .
கிருட்டிணபாணம் எட்டிமரம் .
கிருட்டிணம் கறுப்பு ; இரும்பு ; மிளகு ; துரிசு ; காகம் ; குயில் ; மான்வகை .
கிருட்டிணமூலி துளசி .
கிருட்டிணன் கண்ணன் ; அருச்சுனன் .
கிருட்டிணை திரௌபதி ; ஓர் யாறு ; கடுகு ; முந்திரிகை ; வால்மிளகு .
கிருட்டினாசினம் மான்தோல் .
கிருத்தம் செய்யப்பட்டது .
கிருத்தி கார்த்திகை .
கிருத்திகை கார்த்திகை .
கிருத்திமம் தோல் ; செயற்கையானது ; பொய் ; பூதம் .
கிருத்தியம் தொழில் ; பிதிர்கடன் ; ஐந்தொழில் .
கிருத்திரம் கழுகு .
கிருத்திரிமம் போலியானது ; வஞ்சனை ; குறும்புச் செயல் .
கிருத்திவாசன் சிவபெருமான் .
கிருதக்கினதை செய்நன்றி கோறல் .
கிருதக்கினன் நன்றி மறந்தவன் .
கிருதக்கு வஞ்சகம் .
கிருதகிருத்தியன் செய்தற்குரிய கடமையைச் செய்துமுடித்தவன் .
கிருதஞ்ஞதை செய்நன்றியறிகை .
கிருதஞ்ஞன் செய்நன்றியறிபவன் .
கிருதம் செய்யப்பட்டது ; கிருதயுகம் ; நெய் ; செம்முருங்கைமரம் .
கிருதயுகம் நான்கு யுகங்களுள் முதல் யுகம் .
கிருதன் செருக்குள்ளவன் .
கிருதா கன்னமீசை .
கிரிகை செய்கை .
கிரிகோலம் அலங்கோலம் .
கிரிச்சம் வருத்தம் .
கிரிசம் மென்மை .
கிரிசரம் மலையிற் பிறந்த யானை .
கிரிசன் சிவன் .
கிரிசு குறுவாள் .
கிரிசுக் கத்தி குறுவாள் .
கிரிசை பார்வதி ; செய்கை .
கிரித சாக்கரி ஒரு பண்வகை .
கிரிதுர்க்கம் மலையரண் .
கிரிமல்லிகை வெட்பாலைமரம் ; மலைமல்லிகை .
கிரிமிஞ்சி ஒருவகைச் சிவப்புச் சாயம் .
கிரியாசத்தி ஐந்து சத்தியுள் ஒன்று ; அது வினைத்துணையாக நின்று உலகங்களை யாக்குவது .
கிரயாத்து மலைவேம்பு .
கிரயாபதம் வினைமுற்றுச் சொல் .
கிரியாபூசை கிரியாபாகத்தான் புரியும் பூசை .
கிரியா மார்க்கம் முத்திக்குரிய கிரியையாகிய வழி .
கிரியாவான் கிரியையினின்று ஒழுகுவோன் .
கிரியை செய்கை ; சிவனை வழிபடுகை ; இறுதிக் கடன் ; தாளப் பிரமாணத்துள் ஒன்று ; வினை ; கிரியாசக்தி .
கிரியைக்கேடு முறைகேடு .
கிரிராசன் இமயமலை .
கிரிவாணம் நீலாஞ்சனக் கல் .
கிரீச்செனல் ஓர் ஒலிக்குறிப்பு .
கிரீசன் சிவன் .
கிரீட்டி பிரண்டைக்கொடி .
கிரீட்டுமம் முதுவேனிற்காலம் .
கிரீடதாரி முடிதரித்தோன் .
கிரீடம் மணிமுடி ; வேலிப்பருத்தி .
கிரீடாதிபதி முடிமன்னன் .
கிரீடி அரசன் ; அருச்சுனன் .
கிரீடித்தல் விளையாடுதல் ; புணர்தல் .
கிரீடை விளையாட்டு ; மகளிர் விளையாட்டு ; புணர்ச்சி .
கிரீதன் பெற்றோரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட தத்துப்பிள்ளை .
கிரீவம் கழுத்து .
கிருகச்சித்திரம் குடும்பச் சச்சரவு .
கிருகசாரி இல்லறத்தான் , இல்லற நிலையிலுள்ளவன் .
கிருகத்தன் இல்லறத்தான் , இல்லற நிலையிலுள்ளவன் .
கிருகதேவதை இல்லுறை தெய்வம் .