கிருதார்த்தன் முதல் - கிழமைவட்டம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கிற்றல் ஆற்றல் கொள்ளுதல் .
கில்லம் கழுத்து ; தொண்டைக்குழி .
கிலம் சிதைந்தது ; சிறுமை ; புன்மை .
கிலமாதல் பழுதுபடுதல் .
கிலாய்த்தல் சினங்கொள்ளல் ; அங்கலாய்த்தல் .
கிலி அச்சம் ; பயம் .
கிலிகோலம் சீர்கேடு ; அலங்கோலம் .
கிலிசம்பறை சீர்கேடு ; அலங்கோலம் .
கிலிசயம்பறை சீர்கேடு ; அலங்கோலம் .
கிலிபிடித்தல் மனத்தில் அதிக அச்சங்கொள்ளுதல் .
கில¦பம் அலி .
கிலுக்கம் பறவைவகை .
கிலுக்கு ஒலிக்கை ; கிலுகிலுப்பை ; ஒரு விளையாட்டுக் கருவி .
கிலுக்குத்தடி அஞ்சலெடுத்துச் செல்லுவோர் கையில் கொண்டு ஒலிசெய்யும் தடி .
கிலுக்குதல் ஒலிக்கச்செய்தல் .
கிலுகிலி பிள்ளைகள் ஆட்டு கிலுகிலுப்பை .
கிலுகிலுத்தல் கிலுகிலுவென்று ஒலித்தல் ; ஆரவாரித்தல் .
கிலுகிலுப்பை ஒலிசெய்யும் ஒரு விளையாட்டுக்கருவி ; செடிவகை ; கொடிவகை .
கிலுகிலெனல் ஓர் ஒலிக்குறிப்பு .
கிலுங்குதல் ஒலித்தல் .
கிலுத்தம் மணிக்கட்டு ; மக்கள் வடிவான பழமுடைய மரவகை .
கிலுபதம் முறைமை , நியாயம் .
கிலுமொலெனல் வண்டு முதலியவற்றின் ஒலிக்குறிப்பு ; அடர்ச்சிக் குறிப்பு .
கிலேசம் துன்பம் .
கிலேசித்தல் துன்பப்படுதல் .
கிழக்கத்தி கீழ்த்திசைக்குரிய .
கிழக்கத்திய கீழ்த்திசைக்குரிய .
கிழக்கதை தொன்மம் , பழங்கதை .
கிழக்கு கிழக்குத் திசை ; கீழிடம் ; இழிவு ; பள்ளம் .
கிழக்குக்கணவாய் கிழக்குத்தொடர்ச்சி மலை .
கிழக்குவெளுத்தல் பொழுதுவிடியத் தொடங்குதல் .
கிழங்கான் கடல்மீன்வகை .
கிழங்கிருத்தல் அடிமூலம் பெயர்க்கப்படாது தங்குதல் .
கிழங்கு செடிகொடிகளின் மூலம் ; காரணம் .
கிழங்கெடுத்தல் அடியோடு அழித்தல் .
கிழடு முதுமை ; முதியது .
கிழடுகட்டை அகவை முதிர்ந்து பயனற்றவர் .
கிழத்தனம் முதுமை .
கிழத்தி உரியவள் ; தலைவி .
கிழம் முதுமை ; முதுமையடைந்தவர் .
கிழம்படுதல் முதுமையடைதல் .
கிழமழை பெய்து ஓயும் நிலையிலுள்ள மழை .
கிழமேல் கிழக்கு மேற்காக .
கிழமை உரிமை ; உறவு ; நட்பு ; ஆறாம் வேற்றுமைப் பொருள் ; குணம் ; வாரநாள் ; முதுமை .
கிழமைக்கழுதல் இறுந்துபட்ட எட்டாம்நாள் துக்கம் கொண்டாடுதல் .
கிழமைவட்டம் ஏழுநாள் கொண்ட அளவு .
கிருதார்த்தன் பேறுபெற்றவன் .
கிருதி இசைப்பாட்டு ; கீர்த்தனம் .
கிருது செருக்கு ; ஒய்யாரம் .
கிருதுக்காரன் காண்க : கிருதன் .
கிருபணத்துவம் இவறல் தன்மை , உலோபம் .
கிருபணம் இவறல் தன்மை , உலோபம் .
கிருபணன் இவறல் தன்மையுடையவன் , உலோபி .
கிருபாகடாட்சம் காண்க : கிருபைக்கண் .
கிருபாகரம் திருவருள் .
கிருபாகரன் அருளுக்கு இருப்பிடமானவன் .
கிருபாசமுத்திரம் அருட்கடல் .
கிருபாமூர்த்தி அருளுடையவன் .
கிருபாளு அருளுடையவன் .
கிருபை அருள் .
கிருபைக்கண் அருட்பார்வை .
கிருமி புழு .
கிருமிசத்துரு பலாசு ; பலாசம் விதை .
கிருமிநாசம் குரோசானியோமம் ; பலாசம் விதை ; பேய்ப்பீர்க்கு ; பங்கம்பாளைச்செடி .
கிருமிமலடு கருப்பையில் புழுக்களால் உண்டாகும் மலட்டுத் தன்மை .
கிருமிவைத்தல் புண்ணிற் புழுவுண்டாதல் .
கிரேதம் காண்க : கிருதயுகம் .
கிரேதயுகம் காண்க : கிருதயுகம் .
கிரேதை காண்க : கிருதயுகம் .
கிரேந்தி ஏலத்தோல் .
கிரேனிடல் அஞ்சியொடுங்குதற் குறிப்பு .
கிரௌஞ்சம் கோழிபறக்கும் அளவுள்ள தொலைவு ; ஒரு மலை ; கிரவுஞ்சத்தீவு ; அன்றில் பறவை .
கில் ஆற்றலுணர்த்தும் இடைநிலை .
கில்கில்லெனல் ஓர் ஒலிக்குறிப்பு .
கில்தல் ஆற்றல் கொள்ளுதல் .