சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கிளறிவிடுதல் | கிண்டிவிடுதல் ; தூண்டிவிடுதல் ; மறைபொருளை வெளியாக்குதல் . |
| கிளறுதல் | கிண்டுதல் ; கலக்குதல் ; துழாவுதல் ; துருவி ஆராய்தல் ; வெளியாக்குதல் . |
| கிளா | களாச்செடி . |
| கிளாய் | எள்ளுக்காய்க் கோது . |
| கிளி | கிள்ளை , பறவைவகை , கிளிவகை , கிளிமீன்: வெட்டுக்கிளி . |
| கிளிக்கூடு | கிளியை அடைத்து வளர்க்கும் பஞ்சரம் ; குற்றவாளிகளை அடைத்துத் துன்புறுத்தும் கூடு ; வழக்குமன்றத்தில் சாட்சிகளேனும் கைதிகளேனும் நிற்கும் அடைப்பிடம் . |
| கிளிக்கொம்பன் | வளைகொம்புள்ள மாடு . |
| கிளிக்கொம்பு | கிளிமூக்குப்போல வளைந்த விலங்குக் கொம்பு . |
| கிளிகடிகருவி | கிளியோட்டுங் கருவி |
| கிளிகடிகோல் | கிளியோட்டுங் கருவியுள் ஒன்று . |
| கிளிச்சிறை | கிளிச்சிறகுபோன்ற நிறமுள்ள பொன்வகை . |
| கிளிஞ்சில் | கடல்வாழ் உயிர்வகை . |
| கிளிஞ்சிற்சுண்ணாம்பு | கிளிஞ்சிலை நீற்றியெடுக்கும் நீறு . |
| கிழிகட்டுதல் | துணியில் முடிந்த பந்தயப் பொருளைப் பலருங் காணும்படி தூக்கிக் கட்டுதல் . |
| கிழிச்சீரை | பணம் பொதிந்த சீலை . |
| கிழிசல் | கிழிந்தது . |
| கிழித்தல் | கிழியச்செய்தல் ; பேர்த்தல் ; கீறுதல் ; கோடு வரைதல் ; சாதித்தல் ; தின்னுதல் ; சொல்லாற் கண்டித்தல் ; அங்காத்தல் . |
| கிழிதம் | நிதிக்கிழி . |
| கிழிதல் | பீறுதல் , பிளந்துபோதல் ; பேர்தல் ; தோல்வியுறுதல் ; அழிதல் . |
| கிழிப்பு | கிழிக்கை ; பிளப்பு ; குகை . |
| கிழிமுறி | கிழிக்கப்பட்ட ஆவணம் . |
| கிழியல் | கிழிவு ; கிழிந்தது ; பயனற்றவன் . |
| கிழியறுத்தல் | வாதத்தில் வென்று பொற்கிழி பெறுதல் . |
| கிழியீடு | நிதிப்பொதி ; பொன்முடிப்பு . |
| கிழிவு | கிழிதல் ; வாய்ப்புக் கிடைக்காமை . |
| கிள்ளல் | காண்க : கிள்ளுதல் . |
| கிள்ளாக்கு | அதிகாரச் சீட்டு . |
| கிள்ளாப்பிறாண்டு | விளையாட்டுவகை ; அலட்சியமாகப் பரிமாறுகை . |
| கிள்ளி | சோழர்க்கு வழங்கிய சிறப்புப் பெயர் . |
| கிள்ளிக்காட்டுதல் | குறிப்புக் காட்டுதல் ; சிறிதளவு பரிமாறுதல் . |
| கிள்ளிக்கொடுத்தல் | சிறுகக் கொடுத்தல் ; தூண்டிவிடுதல் . |
| கிள்ளித்தெளித்தல் | சிறிது கொடுத்தல் . |
| கிள்ளிவிடுதல் | தூண்டிவிடுதல் . |
| கிள்ளு | கிள்ளப்பட்ட துண்டு ; கிள்ளுகை . |
| கிள்ளுக்கீரை | கிள்ளியெடுக்கப்படும் கீரைவகை ; எளிமை . |
| கிள்ளுங்கிழியுமாய் | பயனற்றதாய் . |
| கிள்ளுதல் | நகத்தாலெடுத்தல் ; தோண்டுதல் ; அழித்தல் ; சிறிதளவு எடுத்தல் . |
| கிள்ளை | கிளி ; கருங்கிளி ; குதிரை ; சாதிபத்திரி . |
| கிள்ளைச்சாதம் | கிளிக்குஞ்சு . |
| கிளத்தல் | புலப்படக் கூறுதல் ; விதந்து கூறுதல் . |
| கிளத்துதல் | புலப்படக் கூறுதல் ; விதந்து கூறுதல் . |
| கிளப்பம் | கிளர்ச்சி . |
| கிளப்பிவிடுதல் | தூண்டிவிடுதல் ; நீக்குதல் . |
| கிளப்பு | எழும்புகை ; சொல்லுகை ; சோற்றுக்கடை . |
| கிளப்புதல் | எழுப்புதல் ; சுவர் முதலியன எழச்செய்தல் ; நீக்குதல் ; உண்டாக்குதல் ; தூண்டிவிடுதல் . |
| கிளம்பல் | எழும்பல் ; பதிவுப் புத்தகத்தில் புதிதாகச் சேர்த்த நிலங்களின் அட்டவணை . |
| கிளம்பிவிடுதல் | மனமின்றிச் சம்மதித்தல் ; குடிபோதல் . |
| கிளம்புதல் | மேலெழுதல் ; விளக்கமாதல் ; பூமி மட்டத்திற்குமேல் வருதல் ; மூண்டெழுதல் ; உண்டாதல் ; புறப்படுதல் ; அதிகப்படுதல் ; எடுபடுதல் . |
| கிளர் | ஒளி ; பூந்தாது . |
| கிளர்ச்சி | எழும்புகை: மேலோங்குதல் ; உள்ளக் கிளர்ச்சி ; வளர்ச்சி ; செழிப்பு ; சினம் ; கலவரம் ; இறுமாப்பு . |
| கிளர்த்துதல் | எழுப்புதல்: நிறைத்தல் . |
| கிளர்தல் | மேலெழுதல் ; வளர்தல் ; மிகுதல் ; விளங்குதல் ; சிறத்தல் ; உள்ளக் கிளர்ச்சி கொள்ளுதல் ; சினத்தல் ; இறுமாப்புக் கொள்ளுதல் . |
| கிளர்வரி | நடுநின்றார் , மாறுபட்ட இருவருக்குஞ் சந்து சொல்லக் கேட்டு நிற்பதாக நடிக்கும் நடிப்பு . |
| கிளர்வி | கதவு . |
| கிளவரி | தண்ணீர்விட்டான் கிழங்கு . |
| கிளவி | மொழி ; பேச்சு ; சொல் ; அகப்பொருள் ; துறை . |
| கிளவிக்கொத்து | கோவைப் பிரபந்தத்தின் பல துறை கொண்ட அதிகாரம் . |
| கிளவிக்கோவை | அகப்பொருட்கோவை . |
| கிளவித்தலைவன் | அகப்பொருள் தலைவன் . |
| கிளறிப்பார்த்தல் | ஆராய்ந்து தெரிதல் ; கிண்டிப் பார்த்தல் ; தூண்டிவிடுதல் . |
| கிழலை | திசை ; மரக்கலத்தின் சாய்வுப்பக்கம் . |
| கிழவது | உரியது . |
| கிழவன் | உரியவன் ; தலைவன் ; மருதநிலத் தலைவன் ; அகவை முதிர்ந்தவன் ; எண்ணெய்க்கசடு ; பரணி . |
| கிழவி | தலைவி ; முதியவள் ; முருங்கைமரம் . |
| கிழவு | காண்க : கிழத்தனம் . |
| கிழவோன் | உரியவன் ; தலைவன் ; முதியவன் . |
| கிழாஅன் | தயிர்த்தாழி . |
| கிழாத்தி | கடல்மீன்வகை ; நன்னீரில் வாழும் மீன்வகை . |
| கிழார் | வேளாளர் பட்டப்பெயர் ; நீர் இறைக்கும் பொறி ; தோட்டம் . |
| கிழாலை | களர்நிலம் . |
| கிழாள் | உரியவள் . |
| கிழான் | உரியவன் ; சூரியன் ; வேளாளர் பட்டப்பெயர் ; தயிர்த்தாழி . |
| கிழான்பச்சை | சந்தனவகை . |
| கிழி | கிழிபட்ட துகில் ; சீலையில் எழுதிய ஓவியம் ; பொற்கிழி ; நிதிப்பொதி ; கதிர்க்கிழி ; கோவணம் . |
| கிழிக்கட்டு | துணியிற் கட்டிய நிதி முதலியன . |
|
|
|