சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| குணப்படுதல் | சீர்ப்படுதல் ; நோயினின்று நலமடைதல் ; செழிப்படைதல் ; கழிவிரக்கங் கொள்ளுதல் . |
| குணப்பண்பு | தன்மை குறிக்கும் பண்புச்சொல் . |
| குணப்பிழை | குணக்கேடு . |
| குணப்பெயர் | பண்பு குறிக்கும் பெயர்ச்சொல் ; பண்பினடியாகப் பிறந்த பெயர்ச்சொல் ; சிறப்பியல்புபற்றி மக்கட்குப் புலவரால் கொடுக்கப்பட்டு வழங்கும் பெயர் . |
| குணபத்திரன் | அருகன் ; கடவுள் . |
| குணபம் | பிணம் ; சுடுகாட்டுப் பிசாசு . |
| குணபலம் | அதிவிடையப் பூண்டு . |
| குணபாகம் | அனுகூல நிலை , ஏற்ற பக்குவம் . |
| குணபாசி | பிணந்தின்னும் பிசாசு . |
| குணபேதம் | குணம் மாறுதல் ; நோய் கடுமையாதற் குறி . |
| குணம் | பொருளின் தன்மை ; ஒழுக்கத் தன்மை ; சாத்துவிக இராசத தாமதமாகிய மூலகுணங்கள் ; காப்பியத்தைச் சிறப்பிக்கும் செறிவு , தெளிவு முதலிய தன்மை ; அனுகூலம் ; சுகம் ; மேன்மை ; புத்தித் தெளிவு ; நிறம் ; வில்லின் நாண் ; குணவிரதம் ; குடம் ; கயிறு . |
| குணமணி | காண்க : குணவான் . |
| குணமாக்குதல் | நலமாக்குதல் ; சீர்திருத்தல் . |
| குணமாதல் | நலமடைதல் . |
| குணமுள்ளவன் | நற்குணம் உடையவன் . |
| குணலி | சீந்திற்கொடி . |
| குணலை | ஆரவாரக் கூத்து ; வீராவேசத்தாற் கொக்கரிக்கை ; நாணத்தால் உடல் வளைகை . |
| குணலையிடுதல் | கொக்கரித்தல் ; இரைந்து கூத்தாடுதல் . |
| குணவதம் | குணவிரதம் , ஒருவித சைன நோன்பு ; நற்குணம் . |
| குணவதன் | நற்குணம் உடையவன் ; குணவிரதத்தை அனுட்டிப்பவன் . |
| குணவதி | நற்குணமுள்ளவன் . |
| குணவந்தன் | குணவான் . |
| குண்டுங்குழியுமாய் | மேடும் பள்ளமுமாய் . |
| குட்டுசட்டி | உருண்டையான சட்டி . |
| குண்டுணி | கலகமூட்டுகை ; கோட்சொல் ; கோட்சொல்பவன் . |
| குண்டுதைரியம் | முரட்டுத் தைரியம் |
| குண்டுநீர் | கடல் . |
| குண்டுநூல் | நுனியில் ஈயக்குண்டு கட்டப் பட்டிருக்கும் அளவுநூற் கயிறு . |
| குண்டுபடுதல் | வெடிகுண்டால் தாக்கப்படுதல் . |
| குண்டுபாய்தல் | ஆழம்படுதல் . |
| குண்டுமணி | குன்றிமணி . |
| குண்டுமரக்கால் | எட்டுப்படி கொண்ட ஒர் அளவு . |
| குண்டுமல்லிகை | குடமல்லிகை . |
| குண்டுமாற்றுக் குழிமாற்று | மோசடியான காரியம் ; பெண்ணைக் கொடுத்துப் பெண் கொள்ளுகை . |
| குண்டூசி | தலைதிரண்ட ஊசி . |
| குண்டெழுத்து | திரண்டு தடித்த எழுத்து . |
| குண்டை | எருது ; இடபராசி ; குறுகித் தடித்தது ; குறுமை ; ஈகைக்கொடி . |
| குண்டோதரன் | சிவகணத்தவருள் ஒருவன் , ஒரு பூதன் ; பெருந்தீனிக்காரன் . |
| குண்ணவாடை | வடகீழ்காற்று . |
| குண்ணியம் | பெருக்கப்படும் எண் . |
| குணக்காய்ப்பேசுதல் | விதண்டாவாதஞ் செய்தல் . |
| குணக்கிராகி | நற்குணத்தையே கொள்பவன் . |
| குணக்கு | கிழக்கு ; கோணல் ; எதிரிடை ; மாறுபாடு ; நோய் முற்றுகை . |
| குணக்குதல் | பின்னிற்றல் ; வளைத்தல் . |
| குணக்குன்று | நற்குணம் மிகுந்தவன் . |
| குணக்கேடன் | நற்குணமற்றவன் . |
| குணக்கேடு | குணமின்மை ; நோய் கடுமையாக மாறும் நிலை . |
| குணகண்டி | சிவதைக்கொடி . |
| குணகம் | பெருக்கும் எண் . |
| குணகர் | கணக்கர் . |
| குணகாரம் | பெருக்கல் . |
| குணகு | பூதபிசாசம் . |
| குணகுணிபாவம் | பண்பும் பண்பியும் போலப் பிரியாமல் இருக்கும் நிலை . |
| குணகுதல் | வளைதல் ; சோர்தல் , தளருதல் ; மனந் தடுமாறுதல் . |
| குணகோளார்த்தம் | பூமியின் கிழக்குப் பாதி உருண்டை . |
| குணங்கர் | காண்க : குணகு . |
| குணங்காட்டுதல் | இயற்கைக் குணத்தை வெளிப்படுத்துதல் ; நோயினின்று குணமாதலைக் காட்டுதல் . |
| குணங்கு | காண்க : குணகு . |
| குணங்குதல் | காண்க : குணகுதல் . |
| குணங்குறி | தன்மையும் வடிவமும் . |
| குணசாலி | நற்குணமுள்ளவன்(ள்) |
| குணசீலன் | நற்குன நற்செயல் உடையவன் . |
| குணசைவம் | பதினாறுவகைச் சைவ சமயங்களுள் சிவபிரானை எண்குணங்களுடையவராக நினைந்து வழிபடும் ஒரு பிரிவு . |
| குணஞ்ஞன் | பிறர் நற்குணங்களையறிந்து மகிழ்பவன் ; இனிய குணமுள்ளவன் . |
| குணட்டு | கதிர் முதலியவற்றின் சிறு கொத்து . |
| குணட்டுதல் | மயக்கிப் பேசுதல் ; செல்லங் கொஞ்சுதல் ; துள்ளி விளையாடுதல் ; பகட்டுப் பண்ணுதல் . |
| குணத்திரயம் | மூவகையாகிய மூலகுணங்கள் ; அவை: சாத்துவிகம் , இராசதம் , தாமதம் . |
| குணத்துக்குவருதல் | சீர்ப்படுதல் ; நோயினின்று நலமாதல் ; இணங்குதல் . |
| குணத்தொகை | பண்புத்தொகை . |
| குணத்தொனி | வில்லின் நாணோசை . |
| குணத்துவம் | விளங்காமல் நின்ற மூலப்பகுதி முக்குணமாய்ப் பிரிந்து விளங்கிச் சமமாய் நிற்கும் நிலை ; குணதத்துவத்திற்குரிய உலகம் . |
| குணதரன் | நற்குணமுள்ளவன் ; முனிவன் . |
| குணதிசை | கிழக்குத் திசை . |
| குணநிதி | நற்குணம் நிறைந்தவன் ; குணமுள்ளோன் . |
| குணப்படுத்துதல் | சீர்ப்படுத்துதல் ; நோயை நீக்குதல் . |
|
|
|