சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| குந்துதல் | காலை ஊன்றவைத்து உட்காருதல் ; முன்னங்கால்களை ஊன்றி நிற்றல் ; நொண்டி நடத்தல் ; வளைதல் . |
| குந்துதிண்ணை | ஒட்டுத்திண்ணை . |
| குந்துரு | பறங்கிச் சாம்பிராணி ; வெள்ளைக் குங்கிலியம் . |
| குந்துருக்கம் | பறங்கிச் சாம்பிராணி ; வெள்ளைக் குங்கிலியம் . |
| குநகி | சொத்தை நகமுள்ளவன்(ள்) . |
| குப்பஅஞ்சனா | நெற்குவியலின் மதிப்பு . |
| குப்பக்காடு | பட்டிக்காடு . |
| குப்பத்தம் | நிலச் சொந்தக்காரரின் பங்கு . |
| குதிரைமுள் | குதிரையை விரைவுபடுத்தற்கு ஏறுவோர் காலில் இட்டுக்கொள்ளும் முட்கருவி . |
| குதிரையாளி | குதிரை ஏறி நடத்துவோன் ; வயிரவன் . |
| குதிரையாளி வீதி | குதிரை செலுத்தற்குரிய வெளியிடம் . |
| குதிரையிராவுத்தன் | குதிரைவீரன் . |
| குதிரையேற்றம் | குதிரையேறி நடத்தும் வித்தை . |
| குதிரையேறுதல் | குதிரைமேல் ஏறிச் செல்லுதல் ; சிறுவர்களின் குதிரை விளையாட்டு ; பிறரைக் கீழ்ப்படுத்தல் . |
| குதிரை வடிப்போர் | குதிரை நடத்துவோர் . |
| குதிரைவலி | பெண்களுக்குப் பேறுகாலத்திலுண்டாகும் பெருவலி . |
| குதிரைவலிப்பு | குதிரைவலி ; குதிரையின் காற்சுண்டு வாதம் . |
| குதிரைவாய்க் கருவி | கடிவாளம் . |
| குதிரைவாலிச் சம்பா | ஒருவகைச் சம்பாநெல் . |
| குதிரைவிடுதல் | குதிரையைச் சரியாக விடுதல் ; குதிரைப் பந்தயம் விடுதல் . |
| குதிரைவீரர் | குதிரைப் படையாளர் . |
| குதுகம் | விருப்பம் . |
| குதுகலம் | காண்க : குதூகலம் . |
| குதுகலித்தல் | காண்க : குதூகலித்தல் . |
| குதுகுதுப்பு | ஆவல் ; குளிரால் நடுங்குகை . |
| குதுகுலம் | காண்க : குதூகலம் . |
| குதும்பகர் | தும்பைப்பூடு . |
| குதுவை | காண்க : கொதுவை . |
| குதூகலம் | விருப்பம் ; மனக்களிப்பு ; முன் காணாப் பொருளைக் காண்பதால் வரும் மகிழ்ச்சி . |
| குதூகலித்தல் | மனமகிழ்தல் . |
| குதை | விற்குதை ; அம்பு ; அம்பின் அடிப்பாகம் ; ஆபரணத்தின் பூட்டு ; முயற்சி ; பசி . |
| குதைச்சு | சட்டையில் பொத்தானிடும் துளை ; தாலியுருவகை . |
| குதைத்தல் | விற்குதையில் நாணைப் பூட்டுதல் . |
| குதைதல் | செலுத்துதல் ; துளையிடுதல் ; தடுமாறச் செய்தல் . |
| குதைபோடுதல் | முடிச்சுப் போடுதல் . |
| குதையாணி | அணிகலனைப் பூட்டும் சுரையாணி . |
| குந்தகம் | தடை ; குறைந்த விலை . |
| குந்தணை | தைலம் காய்ச்சுவதற்கு ஆதாரமாக வைக்கப்படும் இரும்பண்டா . |
| குந்தம் | குதிரை ; நான்கு பலம் கொண்ட ஒரு நிறை ; வைக்கோற் படப்பு ; கண்ணோய் வகை ; துயரந்தருவது ; எறிகோல் ; குத்துக்கோல் ; வெண்குருத்து ; நவநிதியுள் ஒன்று ; குருந்தமரம் ; கற்பாடாணம் ; கோளகபாடாணம் . |
| குந்தமம் | பூனை . |
| குந்தலிங்கம் | சாம்பிராணி . |
| குந்தளம் | மகளிர் தலைமயிர் ; மயிர்க்குழற்சி ; கூந்தற் கொத்து ; சாளுக்கிய அரசரது நாடு . |
| குந்தன் | திருமால் ; தூயதன்மையுடையவன் . |
| குந்தனக்காரன் | மணி மதிப்போன் . |
| குந்தனம் | மணி பதிக்கும் இடம் ; தங்கம் . |
| குந்தா | துப்பாக்கியின் அடி ; கப்பலின் பின்புறம் . |
| குந்தாணி | பெருவுரல் ; உரலின் வாய்க்கூடு ; கண்ணோய் வகை ; |
| குந்தாலம் | குத்தித் தோதண்டுங் கருவி ; மண்வெட்டி ; கணிச்சி . |
| குந்தாலி | குத்தித் தோதண்டுங் கருவி ; மண்வெட்டி ; கணிச்சி . |
| குந்தாளி | குத்தித் தோதண்டுங் கருவி ; மண்வெட்டி ; கணிச்சி . |
| குந்தாளித்தல் | களித்துக் கூத்தாடல் . |
| குந்தி | கள் ; பாண்டவரின் தாய் . |
| குந்திநடத்தல் | முன்காலை மட்டும் ஊன்றி நடத்தல் . |
| குந்திநிற்றல் | ஒற்றைக்காலால் நிற்றல் ; முன்னங்காலால் நிற்றல் . |
| குந்திருக்கம் | காண்க : குந்துருக்கம் . |
| குந்து | உட்காருகை ; ஒட்டுத்திண்ணை ; நொண்டுகை ; பழத்தின் சிம்பு . |
| குந்துகாலன் | காலை இழுத்து நடப்பவன் ; குந்தியிருக்கை . |
| குதிரைக்கொம்பு | கிடைத்தற்கரியது . |
| குதிரைச் சம்மட்டி | குதிரைச் சவுக்கு . |
| குதிரைச்சாணி | குதிரைக்காரன் ; குதிரை வைத்தியன் . |
| குதிரைச் சாரி | குதிரையின் சுற்றி ஒடுங் கதி . |
| குதிரைச்சேவகன் | குதிரை வீரன் . |
| குதிரைத்தறி | நீருடைப்பை அடைத்தற்கு வைக்கோல் முதலியவற்றோடு நிறுத்தும் மரச்சட்டம் . |
| குதிரை நடை | பெருமிதநடை ; கம்பீரநடை . |
| குதிரைநிலை | குதிரைக் கொட்டில் . |
| குதிரைப் பட்டை | மேற்கூரை தாங்கும் கட்டை ; கூரையில் ஒடு நழுவாமலிருக்கும்படி அடுக்கிய ஒட்டின் முகப்பில் பட்டையாகப் பூசப்படும் சாந்து . |
| குதிரைப்படை | குதிரைச்சேனை . |
| குதிரைப் பந்தி | காண்க : குதிரைநிலை . |
| குதிரைப்பல்லன் | வெள்ளைப்பூண்டு . |
| குதிரைப்பிடுக்கன் | பீநாறிமரம் . |
| குதிரைமரம் | கால்வாய் அடைக்குங் கதவு ; உடற்பயிற்சிக்குரிய தாண்டுமரம் ; குதிரைத்தறி ; நெசவிற் பாவு தாங்குதற்குரிய மரச் சட்டம் . |
| குதிரைமறம் | போர்க் குதிரையின் திறப்பாட்டைக் கூறும் புறத்துறை . |
| குதிரைமறி | குதிரைக்குட்டி ; பெட்டைக்குதிரை . |
| குதிரைமுகம் | முழந்தாள் எலும்பு ; குளத்தின் கரைக்கட்டிற்கு வலியுதவும் முட்டுக் கட்டடம் . |
| குதிரைமுகவோடம் | பரிமுக அம்பி , குதிரையின் உருவை முகப்பிற்கொண்ட தோணி . |
|
|
|