குருகுமணல் முதல் - குருமுடித்தல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
குருத்தோலை ஞாயிறு கிறித்தவர்களின் ஒரு திருநாள் , ஞாயிறன்று கிறித்துநாதர் எருசலேம் நகருக்குள் வெற்றிமுழக்கோடு நுழைந்ததைக் கொண்டாடும் திருநாள் .
குருத்தோலைப் பெருநாள் கிறித்தவர்களின் ஒரு திருநாள் , ஞாயிறன்று கிறித்துநாதர் எருசலேம் நகருக்குள் வெற்றிமுழக்கோடு நுழைந்ததைக் கொண்டாடும் திருநாள் .
குருதட்சினை படிப்பு முடிந்தபின் குருவுக்குச் சீடன் கொடுக்கும் காணிக்கை .
குருதி இரத்தம் ; சிவப்பு ; செவ்வாய் ; மூளை .
குருதிப்பலி வீரன் தன் இரத்தத்தைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி .
குருதிப்புனல் செந்நீர் ; உதிரநீர் .
குருதியூட்டுதல் விலங்குப் பலிகொடுத்தல் .
குருதிவாரம் செவ்வாய்க்கிழமை .
குருது தானியக்குதிர் ; நெய் .
குருந்தக்கல் மணிவகையுள் ஒன்று , குருவிந்தக்கல் .
குருந்தம் குருந்தக்கல் ; குருந்தமரம் .
குருந்து வெண்குருந்து ; குழந்தை ; காட்டெலுமிச்சை ; ஒருவகைச் சிறுமரம் ; குருக்கத்தி ; குருந்தக்கல் .
குருநாத்தகடு ஒளியுள்ள ஒருவகை மெல்லிய வண்ணத்தகடு .
குருநாதன் பரமகுரு , முருகக்கடவுள் .
குருநாள் வியாழக்கிழமை ; பூசநாள் .
குருநிந்தை ஐம்பெரும் குற்றங்களுள் ஒன்றாகிய குருவைப் பழித்தல் .
குருநோய் அம்மைநோய் .
குருப்பித்தல் பருவுண்டாதல் .
குருப்பு பரு .
குருப்பூச்சி காண்க : குருவண்டு .
குருபத்தி குருவின்மேல் கொள்ளும் அன்பு .
குருபத்திரம் துத்தநாகம் ; புளியமரம் .
குருபரம்பரை குருவமிசவழி ; ஆழ்வார் ஆசாரியார்களின் வரலாறு கூறும் நூல் .
குருபரன் பரமகுரு .
குருபன்னி குருபத்தினி .
குருபாரம்பரியம் குருவமிசவழி ; ஆசாரியபரம்பரை .
குருபீடம் குருவினது இடம் .
குருபூசை சமாதியடைந்த குருவின் (பெரியாரின்) வருட நட்சத்திரந்தோறும் மடங்களில் மகேசுவர பூசையுடன் அக் குருவிற்குச் செய்யும் ஆராதனை .
குரும்பட்டி தென்னை பனைகளின் இளங்காய் .
குரும்பி புற்றாஞ்சோறு .
குரும்பை பனை தெங்குகளின் பிஞ்சு ; இளநீர் ; புற்றாஞ்சோறு ; காதினுள் திரளும் குறும்பி .
குருமகன் குரு ; குருவின் புதல்வன் .
குருமணி பரமகுரு .
குருமன் ஒருசார் விலங்குபறவைகளின் இளமைப் பெயர் .
குருமான் ஒருசார் விலங்குபறவைகளின் இளமைப் பெயர் .
குருமித்தல் பேரொலி செய்தல் , முழங்குதல் .
குருமுடித்தல் உலோகங்களை நீற்றுதற்கு உதவும் மருந்து செய்தல் ; இரசவாதத்தில் பொன்னாக்குதற்கு மருந்து செய்தல் .
குருகுமணல் வெண்பொடி மணல் .
குருகுருத்தல் நமைத்தல் ; நெஞ்சை உறுத்துதல் .
குருகுலம் குரு மரபு ; குருவின் வாழ்விடம் .
குருகுலவாசம் கல்வியின் பொருட்டு மாணாக்கர் ஆசிரியருடன் வாழ்தல் .
குருகூர் நம்மாழ்வார் தோன்றிய ஆழ்வார்திருநகரி .
குருகை நம்மாழ்வார் தோன்றிய ஆழ்வார்திருநகரி .
குருச்சி சீனக்காரம் ; நாற்காலி .
குருசந்திரயோகம் வியாழனுஞ் சந்திரனும் ஓர் இராசியிற் கூடியிருக்கும் யோகம் .
குருசம் வெண்தோன்றிக்கிழங்கு .
குருசில் காண்க : குரிசில் .
குருசு சிலுவை .
குருசேவை ஆசாரியனை வழிபடுகை .
குருட்டடியாய் முன்னதாக நினையாதிருத்தல் ; தற்செயலாய் .
குருட்டாட்டம் கண்மூடித்தனமான செய்கை .
குருட்டுக்கண்ணாடி முகம் தெரியாத கண்ணாடி .
குருட்டுக்கல் ஒளிமங்கின கல் .
குருட்டுச்சாயம் மங்கலான சாயம் .
குருட்டுத்தனம் அறியாமை , கண்மூடித்தனம் .
குருட்டுநாள் செவ்வாயும் சனியும் .
குருட்டுநியாயம் கண்மூடித்தனமான நியாயம் .
குருட்டுப்பத்தி அறியாமையான பக்தி .
குருட்டுப்போக்காய் கண்மூடித்தனமாய் ; தற்செயலாய் .
குருட்டுயோகம் முயற்சியின்றிச் செல்வம் கிட்டுகை .
குருட்டுவழி கண்மூடித்தனமான முறை .
குருட்டுவாக்கில் தற்செயலாய் .
குருட்டெழுத்து மங்கலான எழுத்து .
குருடன் பார்வையில்லாதவன் ; சுக்கிரன் ; திருதராட்டிரன் .
குருடி பார்வையில்லாதவள் .
குருடு பார்வையின்மை ; ஒளியின்மை ; ஆடை முதலியவற்றின் முருட்டுப்பக்கம் ; மூடன் ; காதின் வெளிப்புறத்திலுள்ள செவிள் .
குருத்தடைத்தல் நெல் முதலிய பயிர்கள் குருத்து விடாதிருத்தல் ; கதிர் பொதிநிரம்புதல் .
குருத்தல் தோன்றுதல் ; வேர்க்குரு உண்டாதல் ; சினங்கொள்ளுதல் .
குருத்து மரம் முதலியவற்றின் குருத்து , ஓலைக் கொழுந்து ; தந்தம் , மூளை இவற்றின் குருத்து ; காதுக் கருத்து ; இளமை ; வெண்மை .
குருத்துமணல் பொடிமணல் .
குருத்துரோகம் ஆசிரியனுக்குச் செய்யும் துரோகம் .
குருத்துவம் குருத்தன்மை ; பெருமை ; கனம் ; நன்றி .
குருத்துவாங்குதல் குருத்துவிடுதல் .
குருத்தெலும்பு இளவெலும்பு .
குருத்தோலை இளவோலை .