குருமுறை முதல் - குலசேகரன்படி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
குலசேகரன்படி திருமால்கோயிலின் கருவறை வாயிற்படி .
குருவிக்கண் சிறு கண் ; சிறு துளை .
குருவிக்கல் ஒருவகைச் செம்மண் .
குருவிக்கார் கார்நெல்வகை .
குருவிக்காரன் குருவி பிடிப்போன் ; குருவி பிடிக்கும் ஓர் இனத்தவன் .
குருவிக்கடல் அடிக்கடி உண்டாகும் உணவு விருப்பம் .
குருவிச்சி புல்லுருவிப்பூடு ; ஒருவகை மரம் .
குருவிச்சை புல்லுருவிப்பூடு ; ஒருவகை மரம் .
குருவிஞ்சி ஒரு பூண்டு ; காட்டுவெற்றிலை .
குருவித்தலை வில்லாளிகள் மறைந்திருந்து அம்பெய்தற்குறிய மதிலுறுப்பு ; சிறிய தலை .
குருவிந்தக்கல் குருவிந்தம் ; சாணைக்கல் செய்வதற்குதவும் ஒருவகைக் கல் ; காவிக் கல் .
குருவிந்தம் தாழ்ந்த தர மாணிக்கவகை ; குன்றிமணி ; வாற்கோதுமை ; சாதிலிங்கம் ; முத்தக்காசு .
குருவிவாலான் பெருநெல்வகை .
குருவுக்காதி பச்சைக் கருப்பூரம் .
குருள் மகளிர் தலைமயிர் ; நெற்றியில் மயிர்ச்சுருள் .
குருள்தல் சுருளுதல் .
குருளுதல் சுருளுதல் .
குருளை இளமை ; ஒருசார் விலங்கின் குட்டி ; அதாவது நரி ; நாய் ; பன்றி ; மான் ; புலி ; முசு ; முயல் ; யாளி இவற்றின் குட்டி ; பாம்பின் குட்டி ; குழந்தை ; ஆமை .
குரூஉப்புகை மணமுள்ள புகை .
குரூபம் வேறுபட்ட உருவம் .
குரூபி விகாரமுள்ளவன்(ள்) .
குரூரம் கொடுமை .
குரூரவதை சித்திரவதை .
குரை ஒலி ; பெருமை ; பரப்பு ; அசைநிலை ; இசைநிறை ; குதிரை .
குரைத்தல் ஆரவாரித்தல் ; குலைத்தல் .
குரைப்பு ஓசை .
குரைமுகன் நாய் .
குரைய ஓர் அசைநிலை .
குரோசம் இரண்டேகால் மைல்கொண்ட தொலைவு ; கூப்பிடு தொலைவு .
குரோட்டம் நரி
குரோட்டா நரி
குரோட்டு பன்றி
குரோடம் பன்றி
குரோதம் பகைமை ; கோபம் ; செற்றம் .
குரோதன் கோபமுள்ளவன் ; வீரபத்திரன் .
குரோதன அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தொன்பதாம் ஆண்டு .
குரோதி அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தெட்டாம் ஆண்டு ; கோபி ; பகைவன் .
குல்யன் மந்திரி .
குல்லகம் வறுமை .
குல்லம் முறம் .
குல்லரி இலந்தைமரம் .
குல்லா தலைக்குல்லா ; படகில் பாய்மரத்தைக் கட்டுங் கயிறு ; வெளிப்படையான .
குல்லாய் தலைக்குல்லா .
குல்லிரி வீராவேசவொலி .
குல்லை காட்டுத்துள்சி ; துளசி ; வெட்சி ; கஞ்சாச்செடி .
குல்வலி காண்க : குல்லரி .
குலக்காய் சாதிக்காய் .
குலக்கு குணுக்கு ; குலை ; இலை ; பூ ; பழம் முதலியவற்றின் சிறுகொத்து .
குலக்கொடி காண்க : குலமகள் .
குலக்கொழுந்து குலத்தை விளங்கச்செய்பவன் .
குலகன்னி கற்புடையவள் .
குலகாயம் பேய்ப்புடல் ; குலவொழுக்கம் ; நத்தை .
குலகாலம் நிலக்கடம்புப் பூடு .
குலகாலன் குலத்தைக் கெடுப்பவன் .
குலகிரி எட்டுத் திக்குகளிலுமிருந்து உலகைத் தாக்குவதாகக் கூறப்படும் எட்டு மலைகள் .
குலகுரு வமிசகுரு .
குலங்கூறுதல் நற்குடிப்பிறப்பைப் பாராட்டுதல் ; மற்றவர் குலத்தை இழித்துக் கூறுதல் .
குலங்கெட்டவன் சாதி ஒழுக்கந் தவறியவன் .
குலச்சுமால் களத்தில் விற்கும் தானியம் .
குலசன் ஒழுக்கமுடையவன் ; குலம் வழுவாத பெற்றோர்க்குப் பிறந்தவன் , நற்குலத்தான் .
குலசேகரன் குலத்தில் சிறந்தோன் ; குலசேகரப் பெருமாள் .
குருமுறை சவர்க்காரம் ; கோடாசொரிப்பூடு .
குருமுனி அகத்தியன் .
குருமூர்த்தம் தெய்வம் குருவாக வருதல் ; தேவன் குருவாக வருதல் ; குருவாக உபதேசிக்க வந்த கடவுளின் திருமேனி .
குருமூர்த்தி பரமகுரு ; தட்சிணாமூர்த்தி .
குருமை வண்ணம் ; பெருமை .
குருலிங்க சங்கமம் குருவும் சிவமும் திருக்கூட்டமும் .
குருவகம் வெண்சிவப்பு .
குருவண்டு புள்ளியுள்ள குளவிவகை .
குருவரன் காண்க : குருபரன் .
குருவருடம் நவகண்டங்களுள் ஒன்று .
குருவன் குரு .
குருவாரம் வியாழக்கிழமை .
குருவால் இத்திமரம் .
குருவி ஒரு சிறுபறவை ; மூலநாள் ; குன்றிமணி .