குலஞ்செப்புதல் முதல் - குலுகுலுத்தல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
குலிகம் சாதிலிங்கம் ; சிவப்பு ; இலுப்பைமரம் .
குலிங்கம் ஊர்க்குருவி ; குதிரை ; ஒரு நாடு .
குலிசபாணி தேவேந்திரன் .
குலிசம் வச்சிரப்படை ; வயிரம் ; இலுப்பை மரம் ; வன்னிமரம் ; கற்பரி பாடாணம் ; நரக விசேடம் .
குலிசவேறு வச்சிரப்படை .
குலிசன் இந்திரன் ; கற்பரி பாடாணம் .
குலிசி இந்திரன் .
குலிஞ்சன் காண்க : குல¦னன் .
குலிஞன் காண்க : குல¦னன் .
குலிரம் நண்டு .
குல¦ரம் நண்டு .
குலிலி வீராவேசவொலி .
குல¦னன் உயர்குலத்தோன் .
குலுக்கி அழகுகாட்டுபவள் ; பிலுக்கி .
குலுக்குதல் அசைத்தல் ; குலுங்கச்செய்து கலத்தல் .
குலுக்கெனல் சிரித்தற் குறிப்பு .
குலுக்கை குதிர் .
குலுகுலுத்தல் குறுகுறுவென்று செல்லுதல் ; குடுகுடென்றொலித்தல் .
குலஞ்செப்புதல் தன் குலப்பெருமை கூறுதல் .
குலஞ்செய்தல் குலத்தைத் தோற்றுவித்தல் .
குலடை கற்பொழுக்கங் கெட்டவள் .
குலத்தம் கொள் .
குலதருமம் குல ஒழுக்கம் .
குலதிலகன் குலத்தில் சிறந்து விளங்குபவன் .
குலதெய்வம் ஒரு குலத்தார் வழிவழியாக வழிபடும் தெய்வம் .
குலதேவதை ஒரு குலத்தார் வழிவழியாக வழிபடும் தெய்வம் .
குலந்தெரித்தல் குடிப்பழி தூற்றுதல் .
குலநாசகம் ஒட்டகம் .
குலப்பம் செம்புமணல் ; கக்குவான் .
குலப்பரத்தை ஒருவர்க்கே யுரிமை பூண்டொழுகும் பரத்தையர் குலத்தவள் ; கணிகையர் குலப்பெண் .
குலப்பெயர் குலம்பற்றி வழங்கும் பெயர் .
குலபதி குலத்துக்குத் தலைவன் ; பத்தாயிரம் மாணவர்க்கு உணவு முதலியன அளித்துக் கல்வி கற்பித்தவன் .
குலம் நற்குடிப் பிறப்பு ; குடி ; உயர்குலம் ; சாதி ; மகன் ; இனம் ; குழு ; கூட்டம் ; வீடு ; அரண்மனை ; கோயில் ; இரேவதி நட்சத்திரம் ; நன்மை ; அழகு ; மலை ; மூங்கில் .
குலம்பா பேய்ச்சுரை .
குலம்புகுந்தவன் சாதி மாறினவன் .
குலம்பெயர்தல் மாறுபாடடைதல் .
குலமகள் நற்குடியில் பிறந்தவள் , கற்புள்ளவள் .
குலமகன் நற்குடியில் பிறந்தவன் ; குலத்தில் பிறந்த மகன் .
குலமணி சாதி ரத்தினம் ; ஒரு குலத்தில் புகழ் மிக்கவன் .
குலமதம் குடிப்பிறப்பால் தோன்றுஞ் செருக்கு .
குலமரியாதை குலத்தின் ஒழுங்கு .
குலமீன் அருந்ததி , வடமீன் .
குலமுதல் மரபுமுன்னோன் ; மகன் ; குலதெய்வம் .
குலமுதற்பாலை இசைவகை .
குலமுள்ளோன் நற்குடிப் பிறந்தவன் .
குலமுறை மரபு வரலாறு ; குலவழக்கம் .
குலவரி சந்தனம் ; செஞ்சந்தனம் .
குலவரை எண்குல மலை ; சிறந்த மலை ; நாகம் ; மந்தாரச் சிலை .
குலவன் உயர்குடிப் பிறந்தோன் .
குலவிச்சை குலத்துக்குரிய கல்வி .
குலவித்தை குலத்துக்குரிய கல்வி .
குலவிருது குலத்துக்குரிய பட்டம் ; கொடி முதலிய விருது ; குலப்பிறப்பால் தோன்றும் சிறப்புக் குணம் .
குலவிளக்கு குலத்தை விளங்கச்செய்பவர் .
குலவு வளைவு .
குலவுகாசம் நாணற்புல் .
குலவுதல் விளங்குதல் ; மகிழ்தல் ; உலாவுதல் ; நெருங்கி உறவாடுதல் ; தங்குதல் ; வளைதல் ; குவிதல் .
குலவுரி சந்தனமரம் ; செஞ்சந்தன மரம் .
குலவை குரவை , மாதர் வாயால் செய்யும் ஒருவித மங்கலவொலி .
குலா மகிழ்ச்சி .
குலாங்கனை உயர்குலத்தவள் .
குலாங்குலி காவட்டம்புல் .
குலாசாரம் குலவொழுக்கம் .
குலாசாரியன் குலகுரு .
குலாதனி கடுகுரோகிணி .
குலாதிக்கன் குலத்தில் புகழ்மிக்கவன் .
குலாபிமானம் குடிப்பற்று .
குலாம் அடிமை .
குலாமர் உலோபிகள் ; பிறருக்கு ஈயாதவர் .
குலாயம் பறவைக் கூடு ; மக்களால் செய்யப்படும் பறவைக் கூடு ; வலை .
குலாயனம் மக்களால் செய்யப்படும் பறவைக் கூடு .
குலாரி ஒருவகை வண்டி .
குலாலன் குயவன் .
குலாலி குயத்தி .
குலாவுதல் நட்பாடுதல் ; அளவளாவுதல் ; உலாவுதல் ; விளங்குதல் ; மகிழ்தல் ; நிலைபெருதல் ; கொண்டாடுதல் ; வளைதல் ; வளைத்தல் ; வயப்படுத்துதல் .
குலி மனைவியின் மூத்த தமக்கை ; யாக்கை .