குலுங்குடைத்தல் முதல் - குழல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
குவிதல் கூம்புதல் ; நெருங்க்க் கூடுதல் ; வாயிதழ் கூடுதல் ; குவியலாதல் ; உருண்டு திரளுதல் ; கூடுதல் ; சுருங்குதல் ; ஒருமுகப்படுதல் .
குவிமுட்கருவி யானையை அடக்கும் ஆயுதம் .
குவியல் குவிந்திருப்பது .
குவிரம் காடு .
குவில் அறுத்தல் ; கைப்பிடியரி .
குவிவு குவிதல் ; கும்பவடிவு .
குவேலம் ஆம்பல் .
குவை குவியல் ; குப்பைமேடு ; தொகுதி ; கூட்டம் ; கண்ணில் வெண்படலத்தில் உண்டாகும் நோய்வகை ; பொன்னுருக்கும் குகை .
குழ இளமையான .
குழகம் அழகு .
குழகன் இளைஞன் ; அழகன் ; முருகன் ; பிறர்க்கு இணங்குபவன் .
குழகு இளமைச் செல்வி ; அழகு ; குழந்தை .
குழகுதல் கொஞ்சிவிளையாடுதல் ; கவர்தல் .
குழகுழத்தல் நெகிழ்ந்திருத்தல் ; மன உறுதி அறுதல் .
குழகுழவெனல் இளகியிருக்கும் குறிப்பு .
குழங்கல் கழுத்தணி மாலைவகை .
குழந்தை கைப்பிள்ளை ; சிறுபிள்ளை ; இளமைப்பருவம் .
குழந்தைகுட்டி பல அகவையுள்ள குழந்தைகள் .
குழந்தைகுட்டிக்காரன் பெரிய குடும்பமுடையவன் .
குழந்தைப்புத்தி சிறுபிள்ளையறிவு .
குழப்படி காண்க : குழப்பம் .
குழப்படிகாரன் சண்டை செய்வோன் ; கலகம் செய்வோன : குறும்பன .
குழப்பம் தாறுமாறு ; மனக்கலக்கம் ; கலகம் : இராசகலகம் ; கொந்தளிப்பு .
குழப்பன் கலகக்காரன் .
குழப்பு திராவகங்கள் முதலியவற்றைக் கலக்குகை ; கலகமுண்டாக்குகை .
குழப்புதல் பிறழ்வித்தல் ; கலக்குதல் ; திகைக்கச் செய்தல் ; மனத்தைக் கலக்குதல் ; காரியக் கேடாக்குதல் ; குழப்பம் பண்ணுதல் ; குழப்பிப் பேசுதல் .
குழம்பல் கலங்குகை ; குழப்பமான பொருள் .
குழம்பு குழம்பான பொருள் ; காய்கறிக் குழம்பு ; குழைசேறு .
குழம்புதல் கலங்குதல் ; நிலைகுலைதல் ; தத்தளித்தல் .
குழம்புப்பால் வற்றிக் காய்ச்சிய பால் .
குழம்புவைத்தல் காய்கறி சேர்த்துக் குழம்பு காய்ச்சுதல் ; குழம்பு வடிவான மருந்து காய்ச்சுதல் .
குழமகன் இளமைத் தலைவன் ஒரு சிற்றிலக்கிய வகை ; மரப்பாவை .
குழமணம் பாவைக்குச் செய்யும் கலியாணம் .
குழமணன் மரப்பாவை .
குழமணிதூரம் தோற்றவர் ஆடும் ஒருவகைக் கூத்து .
குழல் கூந்தல் ; மயிர்க்குழற்சி ; ஐம்பாலுள் சுருக்கி முடிக்கப்படுவது ; மயிர் ; துளையுடைய பொருள் ; இசைக்குழல் ; குழலிசை ; துப்பாக்கி ; உட்டுளை ; ஒருவகைக் கழுத்தணி ; ஒரு மீன்வகை .
குலுங்குடைத்தல் ஏலத்தொகையை ஏறவொட்டாமல் தடுத்தல் .
குலுங்குதல் அசைதல் ; நடுங்குதல் ; நிறைதல் .
குலுத்தம் கொள்ளு .
குலுமம் சேனையில் ஒரு தொகை .
குலுமமூலம் இஞ்சி .
குலை கொத்து ; காய்க்குலை , ஈரற்குலை முதலியன ; செய்கரை ; பாலம் ; வில்லின் குதை ; நாண் .
குலைக்கல் கோரோசனை .
குலைகுலைதல் அச்சத்தால் நடுங்குதல் .
குலைச்சல் அழிதல் .
குலைத்தல் அவிழ்த்தல் ; பிரித்தல் ; ஒழுங்கறச் செய்தல் ; அழித்தல் ; ஊக்கங்குன்றச் செய்தல் ; அசைத்தல் ; குலையாக ஈனுதல் ; நாய்குரைத்தல் .
குலைதல் அவிழ்தல் ; கலைதல் ; நிலைகெடுதல் ; மனங்குழைதல் ; நடுங்குதல் ; அழிதல் ; சினக்குறிப்புக் காட்டுதல் .
குலைதள்ளுதல் குலைவிடுதல் .
குலைநோய் மார்பெரிச்சல் .
குலைப்பன் குளிர்காய்ச்சல் ; கக்குவான் .
குலைப்பு நடுக்குவாதம் ; குலைத்தல் .
குலையெரிவு காண்க : குலைநோய் .
குலைவட்டம் அம்புக்குதை .
குலோமி வெள்ளறுகம்புல் .
குலோமிசை வசம்பு .
குவட்டிலுதித்தோன் சொன்னபேதி .
குவடு மலையுச்சி ; திரட்சி ; மலை ; குன்று ; மரக்கொம்பு ; சங்கபாடாணம் .
குவலயம் பூமி ; நெய்தல் ; கருங்குவளை ; செங்குவளை: அவுபலபாடாணம் .
குவலயாபீடம் கஞ்சன் கண்ணனைக் கொல்லும்படி ஏவின யானை .
குவலிடம் ஊர் .
குவலை பூங்கஞ்சாச் செடிவகை ; துளசி .
குவலையன் துரிசு .
குவவு திரட்சி ; குவியல் ; கூட்டம் ; பிணைதல் ; பெருமை ; பூமி ; மேடு .
குவவுதல் குவித்தல் ; குவிதல் .
குவளை கருங்குவளை ; செங்கழுநீர்ப்பூ ; ஒரு பேரெண் ; அணிகளில் மணிபதிக்குங் குழி ; கடுக்கன்குவளை ; மகளிர் கழுத்தணிவகை ; கண்குழி ; ஒருவகைப் பாண்டம் ; கண்ணின் மேலிமை ; பாண்டத்தின் விளிம்பு .
குவளைக்கடுக்கன் மணியழுத்தின கடுக்கன் வகை .
குவளைத்தாரான் குவளைமாலை அணிந்த உதிட்டிரன் , தருமன் .
குவளையச்சு கடுக்கனில் குவளை அமைத்தற்குரிய கருவி .
குவாகம் கமுகு ; ஒருவகைப் பிசின்மரம் .
குவாதம் கழாயம் ; குதர்க்கம் .
குவாது முறைகெட்ட தர்க்கம் .
குவால் குவியல் ; கூட்டம் ; மேடு ; அதிகம் ; நெற்போர் .
குவி சுவர் .
குவிகை குவிதல் .
குவித்தல் கும்பலாக்குதல் ; தொகுத்தல் ; கூட்டுவித்தல் ; கைகூப்புதல் ; கூம்பச்செய்தல் ; சுருக்குதல் ; உதடுகளைக் கூட்டுதல் .