குழல்சுடுதல் முதல் - குழைதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
குழைசாந்து கட்டடம் பூசுதற்கு உதவும் கலவைச் சாந்து .
குழைசேறு கலங்கற்சேறு .
குழைத்தல் குழையச் செய்தல் ; ஒன்றாய்க் கலத்தல் ; தழையச் செய்தல் ; திரட்டுதல் ; இளகுவித்தல் ; வளைத்தல் ; அசைத்தல் .
குழைதல் இளகுதல் ; மனமிளகுதல் ; சோறு அளிதல் ; நெருங்கி உறவாடல் ; வளைதல் ; துவளுதல் ; தளர்தல் ; வருந்துதல் .
குழற்சிகை தலைமயிர் .
குழற்பிட்டு மூங்கிற் குழலில் வைத்து அவிக்கும் பிட்டு .
குழற்றுதல் குழறியொலித்தல் .
குழறுதல் பேச்சுத் தடுமாறுதல் ; கூவுதல் ; கலத்தல் ; கேடுவிளைத்தல் .
குழறுபடை சொல் தடுமாற்றம் ; தாறுமாறு .
குழாஅல் கூடுகை .
குழாம் கூட்டம் ; சபை .
குழாய் துளையுடைய பொருள் ; துளை .
குழாய்க்கிணறு குழாய் இறக்கி உண்டாக்கிய கிணறு ; ஆழ்கிணறு .
குழி பள்ளம் ; நீர்நிலை ; கிணறு ; வயிறு ; பாத்தி ; ஓர் எண்ணின் வருக்கம் ; 33 அங்குலங் கொண்ட கோலின் சதுர நிலவளவை ; கனவடி ; பன்னீரடிச் சதுரம் .
குழிக்கண்ணி குழிவான கண்ணுள்ளவள்
குழிக்கணக்கு ஒருவகை நிலவளவை .
குழிக்குத்து செடி முதலியவற்றைப் பிடுங்கி நடுங் குழி .
குழிச்சட்டி பணியாரஞ் சுடுங் குழியுள்ள மண்சட்டி .
குழிங்கை அகங்கை , உள்ளங்கை .
குழிசி பானை ; மிடா ; வண்டியின் குடம் .
குழிசீலை காண்க : குளிசீலை
குழித்தல் குழியாக்குதல் ; செதுக்குதல் .
குழித்தாமரை கொட்டைப்பாசி .
குழிதல் உட்குழிவாதல் .
குழிநரி குள்ளநரி ; காண்க : குழியானை .
குழிநாவல் நாவல்மரவகை .
குழிப்பிள்ளை ஆழத்தில் நடுந் தென்னம் பிள்ளை .
குழிப்பு குழிசெய்கை ; தாழ்வு ; செய்யுட் சந்தவகை .
குழிபறித்தல் குழிதோண்டுதல் ; சூழ்ச்சிசெய்து பிறர்க்குத் தீங்கு செய்ய முயலுதல் .
குழிமாற்று வருக்க வாய்பாடு ; பெருக்கல் வாய்பாடு .
குழிமி மதகு ; பாண்டத்தின் மூக்கு .
குழிமிட்டான் நத்தைச்சூரிப் பூண்டு .
குழிமுயல் ஒருவகை முயல் .
குழியச்சு பொன்மணி உருவாக்கும் அச்சு .
குழியம் திரள்வடிவு ; மண உண்டை ; வளைதடி .
குழியம்மி மருந்தரைக்கும் குழியுள்ள அம்மி , கலுவம் .
குழியானை மணலில் குழிசெய்து கொண்டு அதனுள் விழும் எறும்பு முதலியவற்றை உண்ணும் சிறுபூச்சி .
குழியில் விழுதல் தீநெறிப்படுதல் .
குழிவு குழிந்திருக்கை ; மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று .
குழிவெட்டி குழி தோண்டுபவன் .
குழு மக்கட்கூட்டம் ; மகளிர் கூட்டம் ; ஆடு மாடு முதலியவற்றின் கூட்டம் ; தந்திரம் ; சாதுரியச்சொல் ; தொகுதி .
குழுக்காலி கட்டுக்கு அகப்படாது கொழுத்திருக்கும் மந்தை மாடு .
குழுதாழி மாட்டுத்தொட்டி .
குழுப்படை அரசனால் அமர்த்தப்பட்ட தலைவனையுடைய படை .
குழும்பு குழி ; திரள் .
குழுமல் கூடுதல் ; கூட்டம் .
குழுமுதல் கூடுதல் ; கலத்தல் ; கூடி முழங்குதல் .
குழுவல் கூடுகை ; கூட்டம் .
குழுவன் காண்க : குளுவன் .
குழுவுதல் கூடுதல் ; கலத்தல் .
குழூஉ கூட்டம் .
குழூஉக்குறி சிற்சில கூட்டத்தினர்க்குள் வழங்கும் குறிப்புச்சொல் .
குழூஉநிலை கோபுரம் முதலிய கட்டடத்தின் தளநிலைகள் .
குழூஉப்பெயர் கூட்டம்பற்றி வரும் பெயர்ச்சொல் .
குழை குண்டலம் ; தளிர் ; சேறு ; துளை ; காது ; குழல் ; காடு ; வானம் ; நெய்தல் ; சங்கு .
குழைக்காடு நாட்டுப்புறம் ; காட்டுப்புறம் .
குழைகுழைத்தல் குழம்பிக் கிடத்தல் .
குழைச்சரக்கு சாரமற்ற பண்டம் ; காக்கப்படும் பொருள் .
குழைச்சி புற்றாஞ்சோறு .
குழைச்சு கயிற்றுச் சுருக்கு ; முடிச்சு ; உடலிலுள்ள எலும்பின் சந்து ; ஆயுதக் குளசு .
குழல்சுடுதல் துப்பாக்கி சுடுதல் .
குழல்விடுதல் துளையுண்டாதல் .
குழல்தல் சுருளுதல் ; சுருட்டி முடித்தல் .
குழலுதல் சுருளுதல் ; சுருட்டி முடித்தல் .
குழலூதி வேய்ங்குழல் வாசிப்போன் .
குழலோன் வேய்ங்குழல் வாசிப்போன் .
குழவி கைக்குழந்தை ; ஒருசார் விலங்கின் இளமைப்பெயர் ; புல் , மரம் முதலிய ஓரறிவுயிரின் இளமைப் பெயர் ; அம்மி கல்லுரல்களில் அரைக்கும் கல் ; பெருமை .
குழவிக்கல் அம்மி உரல்களில் அரைக்குங் கல் .
குழவிகொள்பவர் குழந்தையை வளர்ப்பவர் .
குழவிஞாயிறு உதயசூரியன் .
குழவித்திங்கள் இளம்பிறை .
குழவு இளமை .
குழற்காடு கூந்தல் தொகுதி .
குழற்கொத்து மயிர்க்குழற்சி ; இடுமயிர் , சவுரி .
குழற்சி சுருண்டிருக்கை ; சுருட்டி முடிக்கும் கொண்டை .