குழைநாற்றம் முதல் - குளிர்ந்தகொள்ளி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
குளிகன் எண்வகை நாகத்துள் ஒன்று ; காணப்படாத ஒரு கோள் .
குளிகாரன் முத்துக்குளிப்போன் .
குளிகுளித்தல் மகப்பெறுதல் .
குளிகை மாத்திரை ; மந்திர ஆற்றலுள்ள மாத்திரை .
குளிசதோசம் கருப்பமாதலை வேண்டும் மகளிர் ரட்சை கட்டிக்கொள்ளும்போது எதிர்ப்படும் குழந்தைகளுக்கு வரும் ஒரு நோய் .
குளிசம் இரட்டையாகக் கட்டிக்கொள்ளும் ஒருவகைத் தகடு ; நஞ்சு போக்குவோர் காப்பாகக் கட்டிக்கொள்ளும் வேர் ; சக்கரம் வரைந்த தகடு ; வளையம் ; குளிகை .
குளிசீலை கோவணம் .
குளித்தல் நீராடுதல் ; பெண்கள் தீட்டு மூழ்குதல் ; தைத்தல் ; அழுந்துதல் ; வலிய உட்புகுதல் ; மறைதல் ; தோல்வியுறுதல் ; முத்துக்களை மூழ்கியெடுத்தல் .
குளிப்பச்சை ஒரு மணிவகை .
குளிப்பாட்டுதல் நீராட்டுதல் , குளிக்கச் செய்தல் .
குளிப்பித்தல் நீராட்டுதல் , குளிக்கச் செய்தல் .
குளிப்பு குளித்தல் .
குளியம் வேங்கைப்புலி ; உருண்டை ; மருந்து .
குளியல் நீராடுதல் .
குளியாமலிருத்தல் கருவுற்றிருத்தல் .
குளிர் குளிர்ச்சி ; சுரக்குளிர் ; பனிக்காற்று ; நடுக்கம் ; வெண்குடை ; மீனொழுங்கு ; தங்குதல் ; மத்தளம் ; கிளிகடிகருவி ; கவண் ; மழுவாயுதம் ; சூலம் ; அரிவாள் ; இலைமூக்கரி கத்தி ; நண்டு ; கற்கடக ராசி ; ஆடிமாதம் .
குளிர்காணல் குளிர்ச்சி தாக்குகை ; உடம்பு நோயாற் சில்லிடுகை .
குளிர்காய்ச்சல் குளிரோடுவரும் சுரம் .
குளிர்காய்தல் குளிர் வருத்தாதபடி வெப்பம் பிடித்தல் .
குளிர்காலம் பனிக்காலம் .
குளிர்ச்சி சீதளம் , குளிர்மை ; இனிமையானது ; சில்லிடுகை .
குளிர்சுரம் காண்க : குளிர்காய்ச்சல் .
குளிர்த்தி காண்க : குளிர்ச்சி .
குளிர்தல் குளிர்ச்சியடைதல் , சில்லிடுதல் ; கண்ணுக்கு இனிமையாதல் ; ஆறுதலடைதல் ; அருளால் முகம் கனிதல் ; பனிக்காற்று உறைத்தல் ; அம்மை முதலியவற்றால் இறத்தல் ; விதைத்தல் .
குளிர்ந்த குரல் இனிய ஒசை .
குளிர்ந்தகொள்ளி நயவஞ்சகன் .
குழைநாற்றம் அழுகிய இலைநாற்றம் .
குழைமறைவு தழையின் மறைப்பு ; மறைந்து ஒதுங்குகை .
குழைமுகப்புரிசை அந்தப்புரம் .
குழையடித்தல் வேப்பிலையால் மந்திரித்து நோய் தீர்த்தல் ; தழையை உரமாக இடுதல் ; ஆளை வசப்படுத்துதல் .
குழையல் இளகி ஒன்றுபட்டிருப்பது .
குழையற்கறி குழைய வெந்த கறி , அதிகமாக வெந்த கறி .
குழையற்பனாட்டு பனம்பழச் சாற்றின் இறுகல் .
குழைவு நெகிழ்கை ; இரக்கம் ; வாடுகை ; கலப்பு ; அணைவு ; வளைவு .
குள்ளக்குடைதல் நீருள் மிகவும் குடைந்து மூழ்குதல் .
குள்ளக்கெண்டை ஒரு மீன்வகை .
குள்ளத்தாரா குள்ளவாத்து , ஒருவகைச் சிறுவாத்து .
குள்ளநரி நரிவகை .
குள்ளம் குறள் ; குறுமை ; கொடுமை ; தந்திரம் .
குள்ளம்பாய்தல் குறுகிக்கொண்டு வருதல் ; பிறர் அறியமுடியாதபடி தந்திரமாயிருத்தல் .
குள்ளன் குறளன் ; விரகன் .
குள்ளி குள்ளமானவள் .
குள்ளிருமல் கக்கிருமல் .
குளக்கட்டு குளத்தின் கரையைக் கட்டுகை ; குளத்திற்குக் கட்டப்பட்ட கரை .
குளக்கால் குளததுக்கு நீர்வரும் வாய்க்கால் .
குளக்கீழ் குளத்தின் மதகையடுத்துள்ள வயல் .
குளக்குருவி நண்டு .
குளக்கோடு குளக்கரை .
குளகம் மரக்கால் ; ஆழாக்கு ; பல பாட்டுகள் ஒரு வினை கொள்ளுஞ் செய்யுள் ; குற்றெழுத்துத் தொடர்ந்த செய்யுள் ; சருக்கரை .
குளகன் இளைஞன் .
குளகு தழையுணவு ; தழை ; இலைக்கறி .
குளகுளத்தல் நெகிழ்ந்திருத்தல் .
குளகுளெனல் நெகிழ்ந்திருத்தல் ; ஈரடுக்கொலிக் குறிப்பு .
குளசு கயிற்றுச் சுருக்கு .
குளஞ்சி கிச்சிலிமரம் .
குளநெல் குளத்தின் நீர்ப்பிடிப்பில் தானாக விளையும் நெல் .
குளப்படி குளம்புச் சுவடு ; குளம்புச் சுவட்டில் தேங்கிய நீர் .
குளப்படுகை குளத்துக்கருகிலுள்ள நிலம் .
குளப்பாடு குளத்துக்கருகிலுள்ள நிலம் .
குளப்பிரமாணம் ஏரிநீரால் சாகுபடியாகும் மொத்த நிலம் ; ஒருவகைப் பொன்னிறை
குளப்புக்கூறுகொள்ளுதல் பெருந்துன்பமுறுதல் .
குளம் தடாகம் ; ஏரி ; மார்கழி ; நெற்றி ; சருக்கரை ; வெல்லம் .
குளம்பாசி குளத்தில் மீன்பிடிக்கும் உரிமை , பாசிக்குத்தகை .
குளம்பு ஒருசார் விலங்குகளின் பாதம் .
குளவஞ்சி குளஞ்சி என்னும் மரவகை .
குளவாழை ஆறு மாதத்தில் பயிராகும் ஒரு நெல்வகை .
குளவி கொட்டும் இயல்புள்ள வண்டு ; காட்டு மல்லிகை ; மலைமல்லிகை ; பச்சிலைமரம் .
குளவிந்தம் மருந்தாக உதவும் மஞ்சள்வகை .
குளவிமண் குளவிக்கூட்டு மண் .
குளறுதல் பேச்சுத் தடுமாறுதல் ; உளறுதல் ; நரி முதலியன ஊளையிடுதல் ; கெடுத்தல் .
குளறுபடி குழப்பம் .
குளறுபடை குழப்பம் .
குளாஞ்சி காண்க : குளவஞ்சி .
குளாம்பல் குளத்தில் உண்டாகும் ஆம்பல் .
குளி குளித்தல் ; முத்துக்குளி .