சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| குறுதல் | பறித்தல் ; மேலிழுத்து வாங்குதல் ; நெல் முதலியன குற்றுதல் ; நீக்குதல் . |
| குறுந்தடி | சிறிய கோல் ; பறையடிக்குங் கோல் ; போதிகை ; உத்திரத்தைத் தாங்கும்படி சுவரோடு ஒட்டித் தூண்போல் எழுப்பிய கட்டடம் . |
| குறுந்தறி | போதிகை ; சிறுமூளை ; உத்திரத்தைத் தாங்குபடி சுவரோடு ஒட்டித் தூண்போல் எழுப்பிய கட்டடம் . |
| குறுந்தாள் | குறுகிய படிக்கட்டு . |
| குறுந்தொட்டி | சிறுகாஞ்சொறிச்செடி ; சிற்றாமுட்டி . |
| குறுநகை | புன்சிரிப்பு . |
| குறுநடை | குறுகிய நடை , சிறுநடை . |
| குறுநணி | மிக அண்மை . |
| குறுநர் | களைபறிப்போர் . |
| குறுநறுங்கண்ணி | குன்றிப்பூ . |
| குறுநாத்தகடு | பொன்போல் ஒளியுள்ள மெல்லிய தகடு . |
| குறுநிகழ்ச்சி | மிக நுண்ணிய அளவுள்ள கணிகம் எனப்படும் காலம் . |
| குறுநிலமன்னன் | சிற்றரசன் . |
| குறுநிலைவழக்கு | குழூஉக்குறி வழக்கு . |
| குறுநெறி | குறுகிய மயிர்நெறிப்பு . |
| குறுநொய் | அரிசி முதலியவற்றின் சிறு நொய் . |
| குறும்படி | வாசற்படி . |
| குறும்படை | கோட்டை . |
| குறும்பயிர் | இளம்பயிர் . |
| குறும்பர் | குறுநில மன்னர் ; ஒருவகைச் சாதியார் ; வேடர் ; கீழ்மக்கள் ; குறும்பிடையர் . |
| குறும்பலா | கூழைப்பலா ; ஒருவகை சிவாலயம் . |
| குறும்பறை | பறவைப்பேடு . |
| குறும்பன் | குறும்புக்காரன் ; குறுநில மன்னன் . |
| குறும்பாடு | குறும்புக்காரன் ; ஒருவகை ஆடு . |
| குறும்பி | காதுள்ளழுக்கு ; மலம் மூத்திரம் முதலியவை . |
| குறும்பிடி | சிறுகைப்படி ; உடையவாள் . |
| குறும்பிவாங்கி | காதழுக்கு எடுக்கும் கருவி . |
| குறும்பின்மை | துன்பம் விளைக்குங் குறும்பரசர் இல்லாமையாகிய நாட்டமைதிவகை . |
| குறும்பு | பாலைநிலத்தூர் ; ஊர் ; குறுநில மன்னர் ; பகைவர் : சிறிய துணுக்கு ; அரண் ; வலிமை ; குறும்பர் சாதி ; குறும்புத்தனம் ; போர் . |
| குறும்புக்காரன் | குறும்புத்தனம் செய்பவன் . |
| குறும்புழை | சிறிய வாயில் . |
| குறும்பூழ் | காடை . |
| குறுத்தல் | குறுகுதல் . |
| குறுக்கீடு | குறுக்கிடுகை , தலையீடு . |
| குறுக்கு | நெடுமைக்கு மாறான அகலம் ; குறுக்களவு ; குறுமை ; மாறு ; சுருக்கம் ; இடுப்பு . |
| குறுக்குக்கேள்வி | வழக்கில் சாட்சியை மடக்கிக் கேட்கும் கேள்வி ; ஒழுங்கற்ற கேள்வி: பேசுகையில் பிறன் ஒருவன் இடையில் கேட்கும் கேள்வி . |
| குறுக்குச்சட்டம் | குறுக்காகப் போடுஞ் சட்டம் ; கூரையின் குறுக்குக்கட்டை . |
| குறுக்குச்சுவர் | பாகஞ்செய்துகொண்ட மனையில் எல்லை குறித்தற்குக் குறுக்கே இடும் சுவர் . |
| குறுக்குதல் | குறுகப்பண்ணுதல் ; குறையச் செய்தல் ; சுருக்குதல் ; நெருங்கச் செய்தல் ; அண்மையாதல் . |
| குறுக்குப்பாதை | குறுக்குவழி . |
| குறுக்கும்நெடுக்கும் | இங்குமங்கும் . |
| குறுக்கும்மறுக்கும் | இங்குமங்கும் . |
| குறுக்குமறுக்கு | குறுக்கே மறுத்துப் பேசுகை . |
| குறுக்குவழி | குறுக்குப்பாதை ; கோணல் வழி . |
| குறுக்குவிசாரணை | வழக்கில் சாட்சியை மடக்கிக் கேட்குங் கேள்வி . |
| குறுக்கே | இடையே ; மத்தியில் ; எதிராக . |
| குறுக்கேநிற்றல் | இடையூறாக இருத்தல் . |
| குறுக்கேமடக்குதல் | இடையிற் பேசி வாயடக்குதல் . |
| குறுக்கை | புலி ; உடைவாள் ; ஒரு சிவதலம் . |
| குறுக்கையர் | திருநாவுக்கரசர் ; ஒரு வேளாளர் , வேளாள மரபில் திருநாவுக்கரசர் நாயனார் பிறந்த குடியைச் சார்ந்தவர் . |
| குறுகல் | அணுகல் ; குறுகிய பொருள் . |
| குறுகலர் | பகைவர் . |
| குறுகார் | பகைவர் . |
| குறுகுத்தாளி | சிறுதாளிச்செடி . |
| குறுகுதல் | குள்ளமாதல் ; சிறுகுதல் ; மாத்திரை குறைதல் ; அணுகுதல் . |
| குறுகுறுத்தல் | வெறுப்புத்தோன்ற முணு முணுத்தல் ; மனம் உறுத்திக்கொண்டிருத்தல் ; தினவுறுதல் . |
| குறுகுறுநடத்தல் | குறுகக்குறுக நடந்து செல்லுதல் . |
| குறுகுறுப்பு | விருப்பின்மை தோன்ற முணுமுணுத்தல் ; குறட்டை ; அச்சுக்குறி காட்டுதல் ; சுறுசுறுப்பு . |
| குறுகுறுப்பை | காண்க : குறட்டை . |
| குறுகுறென்றுவிழித்தல் | திருட்டுவிழி விழித்தல் . |
| குறுகுறெனல் | கோபக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; அச்சக்குறிப்பு ; சுறுசுறுப்பாயிருத்தற் குறிப்பு . |
| குறுங்கண் | சாளரம் , சன்னல் . |
| குறுங்கண்ணி | முடியிலணியும் மாலை . |
| குறுங்கணக்கு | உயிரும் மெய்யும் ஆகிய முப்பது முதலெழுத்து . |
| குறுங்கலி | பாலை யாழ்த்திறத்துள் ஒன்று ; தன் மனைவியை விரும்பாது வேறுபட்ட ஒருவனுடைய காதல் கெடும்படி சொல்லும் புறத்துறை . |
| குறுங்காடு | சிறுகாடு . |
| குறுங்கிண்ணி | வெண்கலம் . |
| குறுங்குடியாள் | தாளகம் . |
| குறுங்கூலி | நெல் முதலியன குற்றுங் கூலி . |
| குறுங்கோல் | சிறிய கோல் . |
| குறுஞ்சிரிப்பு | புன்னகை . |
| குறுஞ்சீர்வண்ணம் | குற்றெழுத்துப் பயின்று வரும் சந்தம் . |
| குறுணல் | காண்க : குறுநொய் . |
| குறுணி | எட்டுப் படி கொண்ட ஒரு தானிய அளவு . |
| குறுணை | காண்க : குறுநொய் . |
|
|
|