குறும்பொறி முதல் - குறைவு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
குறையுடல் தலையற்ற உடல் , முண்டம் .
குறையுறவு மனக்குறை கொண்டிருக்கை
குறையுறுதல் குறைகூறி வேண்டுதல் .
குறைவயிறு குறையாக உண்ட வயிறு .
குறைவாளர் குறைவுடையவர் .
குறைவில் வானவில் .
குறைவிலறிவுடைமை குறைவில்லாத அறிவைக் கொண்டிருக்கின்ற இறைவன் எண்குணத்துள் ஒன்று .
குறைவு குறைபாடு ; குற்றம் ; குறைந்த அளவுள்ளது ; வறுமை ; காரியபலன் .
குறையாற்றல் காண்க : குறைதீர்த்தல் .
குறையிரத்தல் தன் குறைநீக்க வேண்டல் .
குறுவிலை பண்டங்கள் விலைக்கு அரிதாக்க் கிடைத்தல் .
குறுவிழிக்கொள்ளுதல் இதழ் குவிதல் .
குறுவிழிவிழித்தல் சினம் , அச்சம் முதலியவற்றால் வெறித்துப் பார்த்தல் .
குறுவேர்வை அச்சம் முதலியவற்றால் சிறிதாகத் தோன்றும் வியர்வை .
குறுவை ஒருகுறுகியகால நெல்வகை .
குறுவை நோவு கால்நடைகளுக்குத் தொண்டையில் உண்டாகும் நோய்வகை .
குறுனாத்தகடு முலாம் பூசின தகடு ; அழகு செய்யப் பயன்படும் வண்ணத்தாள் .
குறுனாப்பட்டை முலாம் பூசின தகடு ; அழகு செய்யப் பயன்படும் வண்ணத்தாள் .
குறை குற்றம் ; குறைபாடு ; வறுமை ; எஞ்சியது ; மனக்குறை ; தவறு ; நேர்த்திக்கடன் ; இன்றியமையாப் பொருள் ; செயல் ; வேண்டுகோள் ; வேண்டுவது: துண்டம் ; ஆற்றிடைக்குறை ; சொல்லின் எழுத்துக்குறை ; ஆறாம் வேற்றுமை ; உண்ணுந்தசை ; அரசிறை .
குறைக்கருமம் ஒரு செயலின் முடியாத பகுதி : அரைகுறையா யிருக்குஞ் செயல் .
குறைக்காரியம் ஒரு செயலின் முடியாத பகுதி : அரைகுறையா யிருக்குஞ் செயல் .
குறைகொள்ளுதல் மனக்குறையைப் பாராட்டுதல் ; தன் குறையைக் கூறிக்கொள்ளுதல் .
குறைகோள் இரத்தல் .
குறைச்சல் குறைவு ; தாழ்ச்சி ; இழிவு .
குறைச்சால் குறை உழவு .
குறைசெய்தல் மரியாதைத் தாழ்வு பண்ணுதல் ; வெட்டுதல் .
குறைசொல்லுதல் மனத்திலுள்ள குறையைப்பிறரறியக் கூறுதல் ; தனக்குத் தேவையானதைச் சொல்லுதல் ; குற்றஞ்சாட்டுதல் .
குறைஞ்சால் காண்க : குறைச்சால் .
குறைத்தல் சுருக்குதல் ; தறித்தல் , வெட்டுதல் ; அறுத்தல் ; அராவுதல் ; முகத்தல் .
குறைத்தலை தலையற்ற உடல் .
குறைதல் சிறுகுதல் ; இடம் பொருள் ஏவல் முதலியவற்றால் தாழ்தல் ; பற்றாமற் போதல் ; அரைகுறையாதல் ; விலையேறும்படி பண்டம் அருகுதல் ; எழுத்துக்கெடுதல் ; வருந்தி உயிரொடுங்குதல் ; குறைவுற்று வருந்துதல் ; ஊக்கங்குன்றுதல் ; தோல்வியுறுதல் ; அழிதல் .
குறைதீர்த்தல் வேண்டியவற்றை உதவுதல் ; கடமையைச் செய்து முடித்தல் .
குறைதீர்தல் மனக்குறை தீர்தல் ; முற்றுப்பெறுதல் .
குறைந்தடைதல் குறையிரந்து வேண்டுதல் .
குறைநயத்தல் குறையை நீக்க உடன்படுதல் .
குறைநரம்பு குறைந்த சுரமுள்ள யாழ்த்திறம் .
குறைநிறை ஏற்ற இறக்கம் ; குடும்பத்திலுள்ள குறையும் நிறையும் .
குறைநேர்தல் குறைநீக்க உடன்படுதல் .
குறைப்பக்கம் தேய்பிறைநாள் .
குறைப்பிள்ளை பருவம் நிரம்புமுன் பெற்ற கருப்பிண்டம் .
குறைபடுத்தல் முகத்தல் ; குறைவுண்டாக்குதல் ; இழிவுபடுத்துதல் .
குறைபடுதல் குறைவாதல் ; துணிபடுதல் ; வருத்தப்படுதல் .
குறைபாடு குறைவு ; மனக்குறை .
குறைமகன் நிலைமை இழந்தவன் .
குறைமதி தேய்பிறை .
குறைமாதப்பிள்ளை மாத அளவு நிரம்புமுன் பிறந்த பிள்ளை .
குறைமாதம் மாதத்தின் மிச்சம் ; கருமுற்றிமகப்பெறுதற்குரிய காலவரையில் குறைவு பட்ட மாதம் .
குறையளவு காண்க : குக்குடசர்ப்பம் .
குறையலாளி குறையல் என்னும் பகுதிக்குத் தலைவரான திருமங்கை மன்னன் .
குறையவை அறிவு குணங்களாற் குறைவு பட்டார் கூடிய சபை .
குறையறுத்தல் குறைநீங்கக் கொடுத்தல் .
குறையறுதல் மனக்குறை நீங்குதல் .
குறையாக் கேள்வி நிரம்பிய அறிவு
குறும்பொறி அரைப்பட்டிகை .
குறும்பொறை சிறுமலை ; குறிஞ்சிநிலம் ; குறிஞ்சி நிலத்து ஊர் ; காடு .
குறும்பொறை நாடன் முல்லைநிலத் தலைவன் .
குறும்போக்கு யாழ் வாசிக்கும் முறைகளுள் ஒன்று .
குறும்போது மலரும் பருவமுள்ள அரும்பு .
குறுமக்கள் சிறுபிள்ளைகள் .
குறுமாக்கள் சிறுபிள்ளைகள் .
குறுமகள் இளம்பெண் ; மனைவி .
குறுமடல் திருநீறு வைக்குஞ் சிறிய மடல் .
குறுமணல் சிறுமணல் ; அயமணல் .
குறுமல் பொடி .
குறுமுட்டு அளவுகடந்த செருக்கு ; விரைவு ; ஒடுக்கம் ; பலாத்காரம் ; திடீரென்று எதிர்ப்படுகை .
குறுமுடிகுடி சிற்றரசுரிமையுடைய குலம் .
குறுமுயல் ஒரு முயல்வகை .
குறுமுனி அகத்தியன் .
குறுமுனிவன் அகத்தியன் .
குறுமை குறுகிய தன்மை ; குள்ளம் ; குறைவு ; அண்மை .
குறுமொழிக்கோட்டி பிறரை இகழ்ந்து நகையாடுதலையே பொழுதுபோக்காகவுடைய கீழ்மக்கள் கூட்டம் .
குறுவஞ்சி படையெடுத்து வந்த பேரரசருக்குச் சிற்றரசர் பணிந்து திறை கொடுத்துத் தம் குடிகளைப் புரக்கும் புறத்துறை .
குறுவால் இத்திமரம் .
குறுவாழ்க்கை வறுமை ; சிறிதுகால இன்பம் .
குறுவியர் சிறிதாகத் தோன்றும் வியர்வை .