கூர்முள் முதல் - கூழாம்பாணி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கூலம் பலதானியம் ; காராமணி ; பண்ணிகாரம் ; பாகல் ; நீர்க்கரை ; வரம்பு ; முறை ; விலங்கின் வால் ; பசு ; மரை ; குரங்கு ; குவியல்: நெல் , துவரை முதலியவற்றிற்கு விதிக்கும் வரி .
கூலவதி யாறு .
கூலவாணிகன் தானியம் விற்பவன் .
கூலி வேலைக்குப்பெறும் ஊதியம் ; வாடகை ; கூலிக்காரன் .
கூலிக்காரன் கூலிக்கு வேலைசெய்பவன் .
கூலிக்குமாரடித்தல் மனமின்றி வேலைசெய்தல் .
கூலிப்படை கூலிக்கு அமர்த்தும் சேனை ; கூலிக்காரனின் கூட்டம் .
கூலிப்பாடு நாட்கூலி பெற்றுச் செய்யும் வாழ்க்கை .
கூலிப்பிழைப்பு நாட்கூலி பெற்றுச் செய்யும் வாழ்க்கை .
கூலியாள் காண்க : கூலிக்காரன் .
கூவநூல் கிணறு வெட்டுதற்குரிய இடம் முதலியவற்றை உணர்த்தும் நூல் .
கூவநூலோர் கூவனூலில் வல்லோர் .
கூவம் கிணறு .
கூவல் கிணறு ; பள்ளம் ; அமைத்தல் .
கூவிடை காண்க : கூப்பிடுதூரம் .
கூவியர் உணவு சமைப்போர் ; அப்பவாணிகர் .
கூவிரம் வில்வமரம் ; மலை மரவகை ; தேரில் அமர்ந்து பிடித்துக்கொள்வதற்கு உதவுவதும் தாமரை மொட்டு வடிவில் அமைந்ததுமான ஓர் உறுப்பு ; தேர்க்கொடி ; தேரின் தலையலங்காரம் .
கூவிரி தேர் .
கூவிளங்கனி நேர்நிரைநிரை குறிக்கும் வாய்பாடு ; வில்வப்பழம் .
கூவிளங்காய் நேர்நிரைநேர் குறிக்கும் வாய்ப்பாடு .
கூவிளந்தண்ணிழல் நேர்நிரைநேர்நிரை குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு .
கூவிளந்தண்பூ நேர்நிரைநேர்நேர் குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு .
கூவிளநறுநிழல் நேர்நிரைநிரைநிரை குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு .
கூவிளநறும்பூ நேர்நிரைநிரைநேர் குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு .
கூவிளம் வில்வமரம் ; நேர்நிரையசை குறிக்கும் வாய்ப்பாடு ; மாவிலங்கம் ; கோளகபாடாணம் .
கூவிளி கூப்பிடும் ஓசை ; கூப்பிடுதொலைவு .
கூவிளை வில்வமரம் ; கோளகபாடாணம் .
கூவுதல் பறவை கூவுதல் ; சத்தமிடுதல் ; யானை முதலியன பிளிறுதல் ; ஓலமிடுதல் ; அழைத்தல் .
கூவுவான் சேவல் .
கூவை செடிவகை ; கூட்டம் .
கூவைநீறு கூகைநீறு , கூவைமா .
கூழ் மாவினாற் சமைத்த உணவு ; பலவகை உணவு ; பொருள் ; பொன் .
கூழ்த்தல் ஐயப்படுதல் .
கூழ்ப்பசை கஞ்சிப்பசை ; மாப்பசை .
கூழ்ப்பு ஐயம் .
கூழ்படுதல் கலக்கமுண்டாதல் .
கூழ்முட்டை கெட்டுப்போன முட்டை .
கூழ்வடகம் அரிசிமாக் கூழாற் செய்யப்படும் வற்றல் .
கூழ்வடாம் அரிசிமாக் கூழாற் செய்யப்படும் வற்றல் .
கூழ்வரகு கேழ்வரகு .
கூழங்கை முடமான கை .
கூழம் எள்ளு .
கூழன் ஒருவகைப் பலா ; கண்டகிக்கல் ; தெளிந்த அறிவில்லாதவன் .
கூழன்பலா ஒருவகைப் பலாமரம் .
கூழா நறுவிலிமரம .
கூழாங்கல் வழுவழுப்பான ஒருவகைச் சிறுகல் .
கூழாதல் சோறு குழைதல் ; முட்டை பதனழிதல் .
கூழாம்பாணி சருக்கரை கரைந்து கூழ் போலுள்ள நீர் .
கூர்முள் குதிரை செலுத்துங் கருவி .
கூர்மை ஆயுதங்களின் கூர் ; நுட்பம் ; சிறப்பு ; கல்லுப்பு ; வெடியுப்பு .
கூர்மைக்கரிவாள் சவர்க்காரம் .
கூர்மைப்பார்த்தல் ஆயுதக் கூர்மை சோதித்தல் ; ஒருவன் திறமையைக் சோதித்தல் .
கூர்மையில்லோன் மந்தன் .
கூர்வாங்குதல் கருவியைக் கூர்மையாக்குதல் .
கூர்வாயிரும்பு அரிவாள்மணை .
கூர்வை கப்பலின் குறுக்குக்கட்டை .
கூரணம் கோடகசாலைப்பூண்டு ; பாகல் .
கூரம் பாகற்கொடி ; கோடகசாலைப்பூண்டு ; கொடுமை: பொறாமை ; யாழ் .
கூரல் கூந்தல் ; இறகு ; ஒரு பெருமீன்வகை .
கூரறுக்கும்வாள் இரம்பவகை .
கூரன் கூர்நெல் ; நாய் ; ஆண்பாற் பெயர்வகை .
கூராம்பிளாச்சு மண்கொத்தும் மரக்கருவி .
கூரியம் கூர்மை .
கூரியன் புத்திக்கூர்மையுள்ளவன் ; புதன் .
கூரிலவணம் அமரியுப்பு .
கூருமி உமிமூக்கு .
கூரை வீட்டிறப்பு ; வீட்டுக்கூரை: சிறுகுடில் .
கூரைக்கட்டு கூரைவீடு .
கூரைதட்டுதல் ஆண்பிள்ளைப் பிறப்புக்கு மகிழ்ச்சிக்குறியாகக் கூரையைத் தட்டுதல் .
கூரைவீடு ஓலையாலேனும் புல்லாலேனும் வேய்ந்த வீடு .
கூலக்கடை பலதானியக்கடை .
கூலகம் கரை ; கறையான் புற்று ; குவியல் .
கூலங்கசம் (இரண்டு கரையும் உராய்ந்து கொண்டு) முழுதும் .
கூலங்கடம் கடல் .
கூலபிந்து எட்டிமரம் .