கைபிடித்தல் முதல் - கையடுப்பு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கையடக்கம் கைக்குள் அடங்குகை ; கைக்குள் அடங்கிய பொருள் ; சேமித்து வைக்கப்பட்ட பொருள் ; ஒளித்துவைக்கப்பட்ட பொருள் .
கையடித்தல் கையடித்து உறுதிதருதல் ; விலைக்கு விற்றல் ; கைவேலை செய்தல் .
கையடிப்படுதல் ஒரு பொருள் பல கைகளில் கடந்துசெல்லுதல் .
கையடுத்தல் கையடைத்தல் ; அடைக்கலம் புகுதல் .
கையடுப்பு கையால் எடுத்துச்செல்லத்தகும் சிற்றடுப்பு .
கைம்மருந்து கையிலுள்ள வசியமருந்து ; அனுபவ மருந்து ; கணவனைத் தன்வசமாக்கப் பெண்டிர் பயன்படுத்தும் மருந்து .
கைம்மலை யானை .
கைம்மறதி நினைவுத் தவறு ; கைப்பிழை .
கைம்மறித்தல் கையால் தடுத்தல் ; கைகவித்து விலக்குதல் .
கைம்மா கையை உடைய விலங்கு , யானை .
கைம்மாறு மறு , பிரதி ; பதிலுதவி .
கைம்மாறுதல் மேற்கொள்ளுதல் ; விற்றல் .
கைம்மான் காண்க : கைம்மா .
கைம்மிகுதல் அளவுகடத்தல் ; சாதி அறத்திற்கு மாறுபட்டு ஒழுகுதல் ; அதிகப்படல் .
கைம்மீறுதல் அளவுக்கு மிஞ்சுதல் .
கைம்மீன் அத்தநாள் .
கைம்முகிழ்த்தல் கடவுள் வழிபாடு , வணக்கம் முதலியவற்றில் கையைக் கூப்புதல் .
கைம்முதல் வாணிகத்திற்கு வைத்த முதற் பொருள் ; பொருள் ; சாதனம் .
கைம்முற்றுதல் முடிவுபெறுதல் .
கைம்மேலே உடனே .
கைம்மேற்பணம் உடனே கொடுக்கும் பணம் .
கைம்மை காதலனைப் பிரிந்திருக்கும் தன்மை , கணவனை இழந்த நிலைமை ; கைம்பெண் ; சிறுமை ; அறிவின்மை ; பொய் .
கைம்மைபெற்றோன் கைம்பெண்ணுக்குப் பிறந்தவன் .
கைம்மைவினை கையால் வேலை செய்யுந்திறம் .
கைமகவு காண்க : கைம்மகவு .
கைமட்டம் கைமதிப்பு ; கையனுபவம் ; கொத்தன் மட்டம் பார்க்கும் கருவி ; பூமி மட்டத்திலிருந்து தாழவிட்ட கைவரையிலுள்ள உயரம் .
கைமட்டு கையால் தூக்கி மதிக்கும் மதிப்பு ; உத்தேச மதிப்பு .
கைமதிப்பு கையால் தூக்கி மதிக்கும் மதிப்பு ; உத்தேச மதிப்பு .
கைமயக்கு வசிய மருந்து .
கைமரம் வீட்டுக் கூரையின் கை .
கைமலிவு விலைநயம் .
கைமறித்தல் காண்க : கைம்மறித்தல் .
கைமறிதல் கைமாறுதல் .
கைமாட்டாதார் வேலை செய்ய இயலாதார் .
கைமாட்டிக்கொள்ளுதல் அகப்பட்டுக்கொள்ளுதல் .
கைமாற்று கைக்கடன் ; கையை மாற்றி நீந்தும் நீச்சல் ; பரிவர்த்தனை ; விறபனை .
கைமாற்றுதல் ஆளை வேலையினின்று முறை மாற்றுதல் ; பரிவர்த்தனை செய்தல் ; விற்றல் .
கைமாறாட்டம் கைத்தவறு ; கைவன்மையாற் செய்யும் ஏமாற்றம் .
கைமாறுதல் ஒருவர் கையில் இருந்து வேறு ஒருவர் கைக்குச் செல்லுதல் ; விற்றல் ; வேலையாள்கள் முறை மாறுதல் ; ஒழுக்கத்தைக் கைவிடுதல் ; கட்சிமாறுதல் ; பண்டமாற்றுதல் .
கைமிஞ்சுதல் வரம்பு மீறுதல் ; பிறரோடு சண்டை செய்ய முற்படுதல் .
கைமுட்டி விரல் மடக்கியுள்ள கை ; முட்டியுத்தம் .
கைமுடக்கம் பணமுட்டுப்பாடு ; செய்கைக்குக் கை பயன்படாமை .
கைமுடிப்பு கைப்பொருள் ; கட்டுச்சோறு .
கைமுடை கைமுடக்கம் ; பணமுட்டுப்பாடு .
கைமுதல் காண்க : கைம்முதல் .
கைமுதிர்தல் இளமைப்பருவம் நிரம்புதல் .
கைமுந்துதல் கைமிஞ்சுதல் ; திருடுதல் .
கைமுளி மணிக்கட்டிலுள்ள எலும்பு .
கைமுறி ஓலைத்துண்டு , ஓலைச்சீட்டு .
கைமுறை கைமாற்றுமுறை ; அனுபவம் ; நாட்டியம் .
கைமூட்டு தோட்பொருத்து .
கைமூலம் கமுக்கட்டு ; கைராசி ; கன்றிழந்த பசு .
கைமெய்யாய் கையுங்களவுமாய் .
கைமேலே காண்க : கைம்மேலே .
கைமேற்பணம் காண்க : கைம்மேற்பணம் .
கையகப்படுத்துதல் சிக்கப்பண்ணுதல் ; தன் வசப்படுத்துதல் ; காட்டிக்கொடுத்தல் .
கையகலுதல் விட்டுநீங்குதல் .
கைபிடித்தல் கைக்கொள்ளுதல் ; மணம்புரிதல் .
கைபுகுதல் வசப்படுதல் ; ஒருவன் பேரிலிருந்த பத்திரம் பிறன் ஒருவனுக்கு மாறுதல் .
கைபுடைத்தல் கைதட்டுதல் .
கைபுனை அலங்கரிக்கை ; பூத்தொடுக்கை .
கைபுனைதல் அலங்கீரித்தல் ; அழகுசெய்தல் ; பூத்தொடுத்தல் .
கைபூசுதல் உண்ட கையைக் கழுவுதல் .
கைபோடுதல் வாக்குக் கொடுத்தல் ; தொழிலேற்கத் தொடங்குதல் ; பிறர் அறியாமல் கைகளை ஆடைக்குள் மறைத்துக்கொண்டு கைக்குறிப்பால் விலை பேசுதல் ; காமவிச்சையோடு தொடுதல் .
கைபோதல் முற்றும் வல்லவனாதல் ; கடந்து செல்லுதல் .
கைம்பெண் கணவனை இழந்தவள் .
கைம்பெண்கூறு ஆண்வழி இல்லாத கைம் பெண்ணுக்குக் குடும்பச் சொத்திலிருந்து கொடுக்கும் வாழ்க்கைப் பொருள் .
கைம்பெண்டாட்டி காண்க : கைம்பெண் .
கைம்மகவு காண்க : கைக்குழந்தை .
கைம்மடல் தோட்பட்டை .
கைம்மணி பூசையில் கையாலசைக்குஞ் சிறுமணி ; கைத்தாளம் .
கைம்மதம் யானையின் துதிக்கையினின்று வெளியேறும் மதநீர் .
கைம்மயக்கம் மோகமயக்கம் .
கைம்மயக்கு மோகமயக்கம் .
கைம்மரம் வீட்டின் பாய்ச்சுமரம் .